பேச்சு:ஆண்டலை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by AntanO
இக்கட்டுரையில் நரி என அடையாளப்படுத்தப்பட்டது சரியா எனத்தெரியவில்லை. பறழ் என்பது நரி, புலி
போன்ற விலங்குகளின் குட்டி என்பது தெளிவு. ஆனால் ஆண்டலை என்பது ஒரு பறவை. --செல்வா (பேச்சு) 17:17, 21 நவம்பர் 2015 (UTC)
செல்வா கருத்து கருதவேண்டிய ஒன்று
மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6
பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7
நாயே பன்றி புலி முயல் நான்கும்
ஆயும் காலை குருளை என்ப. 8
நரியும் அற்றே நாடினர் கொளினே. 9
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10
என்பவை தொல்காப்பியம் மரபியல் நூற்பாக்கள்.
இவற்றில் 9 ஆம் நூற்பா பறழ் என்னும் சொல்லை நரிக்குச் சிறப்பு வகையால் காட்டியுள்ளதை எண்ணவேண்டியுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 06:00, 23 நவம்பர் 2015 (UTC)