பேச்சு:ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்

Add topic
There are no discussions on this page.

Territory என்பதற்கான தமிழ்ப் பதம் விக்கிப்பீடியாவில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வழக்கில் ஆள் புலம் அல்லது ஆணிலம் (ஆள்+நிலம்) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் ஆணிலம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ஆணிலம் என்றோ ஆள் புலம் என்றோ பயன்படுத்துவதே முறையென நான் நினைக்கிறேன். மாறாக, ஆட்சிப் பகுதி என்பது சற்று ஏற்கத் தக்கதாக இருப்பினும் மண்டலம் என்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதன்று.--பாஹிம் (பேச்சு) 07:49, 24 ஏப்ரல் 2013 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சில ஆட்சிப்பகுதிகளின் பெயர்கள் மாற்ற வேண்டும். Northern territory ஐ பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். வட மண்டலம் என்பது எனக்கும் ஏற்புடையதல்ல. கலாநிதி ஆ. கந்தையா தனது நூல்களில் இச்சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆட்புலம் என்பதும் நல்ல சொல்லே. அதனையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:25, 24 ஏப்ரல் 2013 (UTC)
நானும் ஆட்புலம் என்றே பயன்படுத்துவது வழமை. மண்டலம் என்பது "region" என்ற பொருளையல்லவா தருகிறது?--பாஹிம் (பேச்சு) 14:19, 24 ஏப்ரல் 2013 (UTC)
மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. இச்சொல்லை முதன்முறையாகக் கேட்கிறேன். தமிழகத்தில் பரவலாக இல்லை. எளிதான வேறு சொல் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் தற்போது உள்ள பெயரை கட்டுரையில் எங்கேனும் தெரியும்படி இடுங்கள். நன்றி!!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 24 ஏப்ரல் 2013 (UTC)
Return to "ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்" page.