பேச்சு:இசக்கி அம்மன்

நற்கீரன், இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதின் மறு வடிவம். பேரண்டம் உலமெல்லாம் இயக்கி ஆளும் அம்மன். இதற்கும் சமசுகிருதத்துக்கும் தொடர்பில்லை. இதே போல பேச்சாயி அம்மன் என்பது பேச்சு + ஆயி (தாய்) அம்மன். இதுதான் வட மொழியில் சரசுவதி என்னும் பெண்கடவுள், தமிழில் கலைமகள் என்பது. இசக்கி (அல்லது இயக்கி) அம்மன், பேச்சாயி அம்மன் என்பதெல்லாம் சமசுகிருதம் கலந்த வழிபாட்டு முறைகளில் அல்லாதவர்கள் கொண்டாடும் கடவுளர் பெயர். எளிய மக்கள், எளிய முறையில் கொண்டாடுவதால் சிறுதெய்வம் என்று குறிப்பிடுகிறார்களோ என்னவோ. --செல்வா 15:12, 29 மார்ச் 2008 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி. இந்த சிறுகட்டுரையின் தகவல்கள் ஆங்கில விக்கியையே ஆதாரமாக கொண்டவை. உங்கள் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வேன். --Natkeeran 15:16, 29 மார்ச் 2008 (UTC)

ஒரு சாதியில் உள்ள எல்லோருக்கும் பொதுவான குல தெய்வம் என்று ஏதுமில்லை. பெரும்பாலும் ஒரே சாதியிலேயே வெவ்வேறு குடும்பங்களுக்கு வெவ்வேறு குல தெய்வங்கள் இருப்பர். இந்த வேறுபாட்டைக் கட்டுரையில் சுட்டலாமா? தற்போது உள்ளது படி பார்த்தால் குறிப்பிட்ட எல்லா சாதியினருக்கும் இவர் மட்டுமே குல தெய்வம் என்பது போல் பொருள் வருகிறது.

அப்புறம், வழக்கமாகத் தாழ்ந்த சாதிகள், உயர்ந்த சாதிகள் என்று குறிப்பிடுவது தற்போது ஊடகங்களில் தவிர்க்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகள், ஆதிக்க சாதிகள் என்கிறார்கள். --ரவி 19:22, 8 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசக்கி_அம்மன்&oldid=238927" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசக்கி அம்மன்" page.