பேச்சு:இசுரயேலர்

இங்கு ஆங்கில tribe என்பதை `கோத்திரம்` என மொழி பெயர்பது தவறு. கோத்திரம் இந்துக்களுக்கு வெளியே இல்லை. அகராதி tribe என்பதற்கு இனம், உம்பல், கணம், குலம், கூட்டம், சேகரம், மயிந்தர், நிலை என மொழி பெயர்பு கொடுக்கிரது. இதில் `குலம்’ என்பதை பயன்படுத்தலாம்--Ginger 09:15, 30 ஜூன் 2009 (UTC)


இல்லை. கோத்திரம் என்பதே சரி. தமிழ் விவிலியத்திலும், தமிழ் குரானிலும் எல்லா இடங்களிலும் அவ்வாறே உள்ளது. இவை ஹீப்ரு மற்றும் அரபி மொழியின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும். மற்றபடி இங்கேயும் ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியே ஆகும்.
--arafat 12:52, 30 ஜூன் 2009 (UTC)

கோத்திரம் பற்றி http://en.wikipedia.org/wiki/Gotra--Ginger 13:07, 30 ஜூன் 2009 (UTC)


சரிதான். நீங்கள் கொடுத்த இணைப்பில் இந்து மதத்தில் உள்ள கோத்திரம் பற்றி உள்ளது. என்னுடைய விளக்கம் இந்து மதத்தில் கோத்திரம் இல்லை என்பதல்ல. யூத, கிருத்துவ, இசுலாமிய மத வேதங்களிலும் கோத்திரம் உண்டு என்பதே.
--arafat 03:54, 1 ஜூலை 2009 (UTC)

இங்கே அரபாத சொல்வது சரிதான். தமிழ் விவிலியம், அல்-குரான் என்பவற்றில் கோத்திரம் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. shevet அல்லது mateh என்ற எபிரேய மொழிப் பதமே தமிழுக்கு கோத்திரம் என மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. shevet அல்லது mateh என்பவை யாக்கோபு என்பவரின் மகன்கள் வழிவந்தோரைக் குறிப்பதால் இங்கே கோத்திரம் தான் பொறுத்தமாக இருக்கும். shevet என்பதற்கு tribe என்பது எவ்வளவு பொறுத்தம் எனத் தெரியவில்லை. (அது நமக்கு தேவையற்ற ஒன்று)
கோத்திரம் என்பது வடமொழி சொல் போல தெரிகிறது. இதற்கு இணையான தமிழ் சொல் என்ன?--Terrance \பேச்சு 06:02, 1 ஜூலை 2009 (UTC)
தமிழில் நானறிந்த சில குழுக்களில் இதை கிளை என்று வழங்குவர். -- சுந்தர் \பேச்சு 06:03, 1 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுரயேலர்&oldid=1489780" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுரயேலர்" page.