பேச்சு:இடைக்கோடு இடல்

அண்மையில் நண்பரின் மகள் எழில் தன் வீட்டுப்பாடத்தில் சொல்லிடைவிலக்கத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்த விதம் வியப்பூட்டியது. ஏன் றகர ஒற்றை அவ்வளவு முயன்று மடிப்பினை அடுத்து வரவிடாமல் எழுதினாய் என்று கேட்டதற்கு வரி ஒற்றில் தொடங்காதே என்று கூறினாள். இதைப் (எனக்குத் தெரிந்தவரை) பாடத்தில் சொல்லித் தருவதில்லை. இருந்தும் தமிழ் எழுத்துமுறையின் சீரொருமையின் பயனாக அச்சிறுமிக்கு இயல்பாக வந்துள்ளது. சிறுமியின் பாடத்தை அப்படியே படியெடுத்து வந்து இக்கட்டுரையைத் தொடங்கியுள்ளேன். :-)

Hyphenation என்பதைச் சொல்லிடை விலக்கம் என்று மொழிபெயர்த்துள்ளது சரியா? -- சுந்தர் \பேச்சு 10:51, 21 செப்டெம்பர் 2010 (UTC)

ஐந்தாம் வகுப்பில் இவ்வளவு நேர்த்தியாக நான் எழுதியிருந்தால் இந்நேரம் பெரியாளாகியிருப்பேன் ;-). சொல்லிடைக் கோடிடுதல் என்றால் சரியாக வருமோ என்று தோன்றுகிறது.--சோடாபாட்டில் 11:03, 21 செப்டெம்பர் 2010 (UTC)
:-) கோடிடுதலுக்கு முன்னால் வேறு குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றவர்களின் கருத்தையும் அறிந்து கொள்ளலாம், சோடாபாட்டில். -- சுந்தர் \[[User talk:Sundar|பேச்சு] 11:09, 21 செப்டெம்பர் 2010 (UTC)
மேலும், சொல்லிடை எனும்போது இரு சொற்களுக்கு இடையில் என்று மட்டும் பொருள் வந்துவிடுவது போலத் தோன்றுகிறது. சொல்நடு அல்லது சொல்லூடு எனலாமா? -- சுந்தர் \பேச்சு 14:23, 21 செப்டெம்பர் 2010 (UTC)
சுந்தர் இடைக்கோடு என்று மட்டுமே குறித்தால் போதும் என்று நினைக்கின்றேன். அல்லது பிணைக்கோடு என்றும் சொல்லலாம்.--செல்வா 03:22, 29 செப்டெம்பர் 2010 (UTC)
கருத்துக்கு நன்றி, செல்வா. ஆங்கில விக்கியில் hyphen என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தாலும், இங்கு hyphenation-ஐப் பற்றியே எழுதியுள்ளேன். முன்னாட்களில் இடைக்கோடு வழக்கில் வருமுன்னரே கூடச் சுவடிகளில் மடித்து எழுதியிருப்பார்கள் தானே? அவ்வழக்கையும் நாம் இங்கு எழுத வேண்டியதுள்ளதே? அது ஒன்றுதான் தயக்கம் தருகிறது. இல்லையெனில் இடைக்கோடு என்று தலைப்பிட்டு கட்டுரையின் வரைவை அதற்கேற்றாற்போல் மாற்றி எழுதலாமெனினும் உவப்பே. -- சுந்தர் \பேச்சு 04:05, 29 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி, சுந்தர். அப்படியென்றால் இடைக்கோடு இடல், பிணைக்கோடு இடல் எனலாம். அக்காலத்தில் சொல்லுக்கு இடையே இடம்விட்டு எழுதும் வழக்கம் கூட இருந்ததாகத் தெரியவில்லை (தமிழில் மட்டும அல்ல ஆங்கிலத்திலும் இலத்தீனிலும், (கிரேக்கத்திலும்?) இடம்விடாமல்தான் எழுதினார்கள்). ஆகவே அவர்களுக்குத் தேவை இருந்ததா எனத் தெரியவில்லை.--செல்வா 04:13, 29 செப்டெம்பர் 2010 (UTC)
அப்படியெனில் இடைக்கோடு இடல் என்று மாற்றலாம். அக்கால வழக்கு பற்றிய ஐயம்: இடம் விடாமல் எழுதும்போது எங்கு வேண்டுமானாலும் மடித்து எழுதும் வழக்கு இருந்ததா? ஓலைச்சுவடிகளில் இடப்பற்றாக்குறையால் அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பு மிகுதி. ஆனால், முனை.டேவிடு பிரபாகருடன் பேசும்போது அந்தக் காலத்திலும் ஒற்றில் தொடங்குவதைத் தவிர்த்து வந்தனர் என்று சொல்லியதாக நினைவு. (உறுதியாகத் தெரியவில்லை.) அவருடைய ஆய்வுக் கட்டுரையில் எதுவும் இருக்கிறதா பார்க்கலாம். சில ஓலைச்சுவடிகளையும் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:22, 29 செப்டெம்பர் 2010 (UTC)

ஒற்று இல்லாமலும் எழுதியுள்ளார்கள் பத்து என்பதைப் பதது என்று எழுதியுள்ளார்கள். சொல்லிடை விலக்கம் என்பதில் விலக்கம் என்பது சரியான பொருளைத் தருகின்றதா? அக்கோடு பிணைப்பை, இணைப்பைத்தானே சுட்டுகின்றது, விலக்கத்தை அல்லவே என்பதே என் கவலை. --செல்வா 04:43, 29 செப்டெம்பர் 2010 (UTC)

ஆம் செல்வா. விலக்கம் என்பதில் எனக்கு நிறைவில்லாமல் இருந்ததாலேயே மாற்றுச்சொல் கேட்டிருந்தேன். 99% பயன் பிணைப்புக்குத்தான். அசைகளைப் பிரித்துக்காட்ட ஆங்கிலத்தில் விலக்கத்துக்குப் பயன்படுவது மட்டும் விதிவிலக்கு. அதுவும் வேறு வகையில் பிணைப்பதாகக் கொள்ளலாம். இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் என்பதில் எனக்கு ஒப்புதல் உண்டு. மாற்றி விடலாம். (பி.கு. ஒற்று இல்லாமல் எழுதிய உரைகளைப் பார்த்துள்ளேன்.) -- சுந்தர் \பேச்சு 04:47, 29 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடைக்கோடு_இடல்&oldid=714077" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இடைக்கோடு இடல்" page.