பேச்சு:இந்திய ரயில்வே நிதியறிக்கை, 2011

வின்சு,

இது விக்கி செய்திகளுக்கு பொறுத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நிதியறிக்கைகள் வெளியாவதால், தனித்தனியாக அவற்றைபற்றி எழுதாமல் ஒரு பொதுக்கட்டுரையாக விக்கிப்பீடியாவில் “இந்திய ரயில்வே நிதியறிக்கை” என்றொரு கட்டுரையும், ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியாகும் போது விக்கி செய்திகளில் ஒரு செய்தியும் உருவாக்கலாம் என எனக்குப் படுகிறது. (இது தனிப்பட்ட கருத்துமட்டுமே, இது குறித்து சட்டதிட்டமான விக்கி விதிகள்/முன்னுதராணங்கள் எதுவும் இப்போது இல்லை, எனவே பிற பயனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு மாற்றலாம்/அல்லது இங்கேயே மேம்படுத்தலாம்).--சோடாபாட்டில்உரையாடுக 04:44, 28 பெப்ரவரி 2011 (UTC)

சரி அவ்வாறு செய்யலாம்:வின்சு 08:40, 28 பெப்ரவரி 2011 (UTC)
ஆங்கில விக்கியில் தொடருந்துத்துறை நிதியறிக்கை ஆண்டுவாரியாக இல்லையெனினும் இந்திய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கை 2009, 2010,2011 ஆண்டுகளுக்கு தனிப்பக்கங்களாக உள்ளன. ஆகவே இது குறித்த விக்கி விதிகள் இல்லை. இப்பக்கத்தில் தரப்படும் தரவுகள் ஆய்வுகளுக்குப் பயன்படும் என்பதால் விக்கிப்பீடியாவில் இருப்பது தவறில்லை என்பது என் நிலை. விளக்கங்களுடனும் சான்றுகளுடனும் மேம்படுத்துவது தேவையாகும்.--மணியன் 12:29, 28 பெப்ரவரி 2011 (UTC)
கட்டுரையின் தலைப்பை இந்திய ரயில்வே நிதியறிக்கை-2011 என்று மாற்றலாம்.:வின்சு 04:14, 1 மார்ச் 2011 (UTC)
Return to "இந்திய ரயில்வே நிதியறிக்கை, 2011" page.