நன்றியும் தலைப்பு மாற்றமும்

தொகு

@சத்திரத்தான் இப்பக்கத்தை உருவாக்கியதற்கு நன்றி. இவ்வுயிரினப் பெயரை எப்படி ஒலிக்கவேண்டும் என்று கீழே தந்துள்ளார்கள்: ஒலிப்பு. அதாவது 'லையோசிச்சலா' என்பது போல ஒலிக்கின்றார்கள். அப்படித்தான் நாமும் எழுத வேண்டுமென்பதில்லை. Lio என்பதை லியோ என்றும் லையோ என்றும் ஒலிப்பார்கள்தான். தலைப்பை இலியோசிச்சலா என்றெழுதலாம் என்று கருதுகின்றேன். குறிப்பாக -ச்லா- என்று வராமல் இருக்கவும் லகரத்தில் தமிழில் தொடங்கலாகாது என்பதாலும் அப்படிப் பரிந்துரைக்கின்றேன். இது கலைச்சொல்லாயிற்றே தமிழிலக்கணம் பார்க்கவேண்டுமா என்று கருதலாம். எச்சொல்லாயினும் தமிழில் எழுதுங்கால் தமிழின் ஒலிப்பிலக்கணத்தின்படி எழுதுதல் வேண்டும். எனவே இலியோசிச்சலா என்றெழுதலாம் என்று பரிந்துரைக்கின்றேன். கொரிய மொழியில் லகர ஒலியே கிடையாது அவர்கள் ரகர ஒலியைப் பயன்படுத்துகின்றனர். அதாவது மொழிக்கு மொழி ஒலிப்புகளுகளும் ஒலிப்பிலக்கணங்களும் உண்டு என்பதற்காகக் கூறுகின்றேன். இதிலுள்ள Liocichla bugunorum என்னும் அரிய (அருகிய நிலையில் உள்ள) பறவையின் படத்தை அதனை எடுத்த முக்கேசு சேகல் என்பவரிடம் சொல்லி பதிவேற்றச்செய்தேன் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன். செல்வா (பேச்சு) 14:04, 26 நவம்பர் 2024 (UTC)Reply

வணக்கம். தங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். வழிகாட்டுதலுக்கு நன்றி. தொகுப்பு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தினை இணைக்க மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி.--சத்திரத்தான் (பேச்சு) 14:13, 26 நவம்பர் 2024 (UTC)Reply
மிக்க நன்றி செல்வா (பேச்சு) 15:51, 26 நவம்பர் 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலியோசிச்சலா&oldid=4150078" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலியோசிச்சலா" page.