பேச்சு:ஈமியூ
- பறக்காத பறவை கட்டுரைக்கான இணைப்பு கட்டுரைக்குள்ளேயே இருப்பதால் அதற்கான இணைப்பை இவற்றையும் பார்க்கவும் பகுதியில் இருந்து நீக்கியுள்ளேன்.
- எடையை வெறுமனே கிலோ என்று குறிக்காமல் கிலோகிராம் என எழுதுவது கலைக்களஞ்சியக் கட்டுரக்கு அவசியம் என நினைக்கிறேன்.
- எமு அல்லது ஈமு, இவற்றில் எது சரியான உச்சரிப்பு என அறிந்து கட்டுரையில் மாற்றலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள கனகு உதவலாம். அல்லது, ஆங்கில விக்கி கட்டுரையில் உள்ள IPA உச்சரிப்பை படிக்கத் தெரிந்தவர் உதவலாம்--ரவி 16:56, 31 ஜூலை 2006 (UTC)--ரவி 16:56, 31 ஜூலை 2006 (UTC)
- திருத்தங்கள் நன்று. எமு என்றே வாசித்ததக ஞாபகம். மேலும் இந்த ஒலிப்பெயர்ப்புச் சிக்கல்களாற்றான் பல ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளைத் தொடங்குவதில் தாமதாமாகிறது --கோபி 16:58, 31 ஜூலை 2006 (UTC)
- குஞ்சுகள் பொறிக்கின்றன என்பது மரபு வழாத பயன்பாடா? எனக்கு ஏதோ இடிக்கிற மாதிரி இருக்கிறது ;)சரி தான் என்றால் என் அறியாமையை பொறுக்கவும். கோழி, குஞ்சு பொறிக்கும் என்பர்..ஆனால், குஞ்சு தானாகவே பொறிப்பது போல மேற்கண்ட பயன்பாடு இருக்கிறது?? (ரொம்ப யோசிக்கிறேனோ :)?)
- ஒளிப்படம், நிகழ்படம் வேறுபாடு என்ன? படம் என்றாலே ஒளி சார்ந்தது தானே? பின் ஒளிப்படம் என்றால் என்ன?
--ரவி 17:01, 31 ஜூலை 2006 (UTC)
- ரவி சொல்வதுபோல கிலோகிராம் என்று குறிப்பதுதான் நல்லது. ஈமு, எமு என்று எதுவாக இருந்தாலும் தவறொன்றுமில்லை (கட்டுரைகள் துவட்க்குவதற்கு இது ஒரு தடையாகவே இருக்கக்கூடாது). ஆங்கிலச் சொல்லொலிப்பைப்போல் இருக்க வேண்டும் என்பதைக்காட்டிலும், முடிந்தவரை மூல முதல்மொழியில் எப்படி பலுக்குகிறார்கள் என்று கண்டு அதற்கேற்றவாறு பெயரிடுதல் சிறப்பு என்பது என் கருத்து. தமிழில் திருநெல்வேலியை தின்னவேலி என்று சொல்லும் பேர்வழிகளும் உள்ளனர். --C.R.Selvakumar 17:15, 31 ஜூலை 2006 (UTC)செல்வா
- குஞ்சு பொறித்தல் என்பது முட்டைக்குள் இருக்கும் உயிர், தானே முட்டையை (புற ஓட்டை), கொத்தி உடைத்து வெளி வருவதுதான். கோழி முட்டையிடும், குஞ்சு பொறிக்கும்.
- ஒளிப்படம் என்பது அசையாது உள்ள நிலைப்படம், நிகழ்படம் என்பது நகரும், நிகழும் படம். ரொம்பவும் கடிக்கிறேனோ ?--C.R.Selvakumar 17:15, 31 ஜூலை 2006 (UTC)செல்வா
- photographக்கு ஏற்கனவே வழக்கில் உள்ள நிழற்படம், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். நிகழ்படம் videoவுக்கு நல்ல சொல். என் கோழி முட்டை கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்ததற்கு நன்றி :). மூல மொழியில் உள்ள உச்சரிப்பை பயன்படுத்த வேண்டும் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது. அதனால் தான் கனகிடம் உதவி கேட்டேன்--ரவி 18:30, 31 ஜூலை 2006 (UTC)
- குஞ்சு பொரிக்கும் என்றல்லவா வர வேண்டும்? பொரித்தல்/ பொறித்தல் - இவற்றுள் எது சரியானது?--கோபி 18:08, 31 ஜூலை 2006 (UTC)
கோபி, பொரித்தல் என்பதுதான் சரி. இப்படியாக நிறைய பிழைகள் வந்துவிடுகின்றன. இரண்டுக்குமே சூடு, வெப்பம் என்னும் சொல்தான் அடி, எனினும், பொரித்தல் என்பதுதான் சரி. சுட்டியதற்கு நன்றி.--C.R.Selvakumar 19:01, 31 ஜூலை 2006 (UTC)செல்வா
எமு, ஈமு, ஈமியூ, ஈம்யூ
தொகுசரியான உச்சரிப்பு: ஈம்யூ என்பதாகும். Emu - iːmjuː தமிழில் ஈமியூ என எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.--Kanags 08:53, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
சரியான ஒலிப்பு ஈம்யூ எனில் அப்படியே அழைக்கலாமே. ஈமியூ என்பதும் எனக்கு ஏற்புடைத்தே. நன்றி, கனகு.--C.R.Selvakumar 12:25, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா