பேச்சு:ஊணூர்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்


  • முதன்மைப்படுத்திய பெருமக்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 23:07, 18 பெப்ரவரி 2013 (UTC)

(இவ்வூர் கூந்தன்குளம் என்ற நினைப்பில் எழுதியது)அண்மையில்தான் இவ்வூருக்குச் சென்று வந்தோம். மழையின்றி ஏரி வறண்டிருந்தது. இருந்தாலும் ஒரு பத்து அன்றில் பறவைகள் மட்டும் கிடங்கில் இருந்த நீரின் அருகில் நின்று கொண்டிருந்தன. பறவை ஆர்வலர் ஒருவர் அவற்றைப் பதிவு செய்து கொண்டிருந்தார். காட்டுயிர்த்துறை இவ்வூரைப் புகலிடமாக அறிவிக்கும் முன்னரே இவ்வூர் மக்கள் தாங்களாகவே பறவைகளைக் காத்து வந்துள்ளதாகப் படித்துள்ளேன். தீபாவளியின்போது இவ்வூர் மக்கள் வெடிகள் எவற்றையும் வெடிப்பதில்லையாம். தக்க சான்று கிடைத்தால் இத்தகவல்களைச் சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 07:44, 17 பெப்ரவரி 2013 (UTC)

2500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவாகியிருக்கும் இந்த வலசை நிகழ்வை நேரில் கண்டதை எண்ணிப் பார்த்தால் சிலிர்ப்பாக இருக்கிறது. சங்ககாலச் சான்றுகளை இணைத்து எழுதிய செங்கைப் பொதுவன் ஐயாவுக்கு மிக்க நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:54, 17 பெப்ரவரி 2013 (UTC)
ஊணூரில் அன்றிலை நேரில் கண்டு குறிப்பிட்டு சங்ககாலச் செய்திக்கு வலுவூட்டிய சுந்தர் அவர்களுக்கு நன்றி. ஓரிரு படங்கள் எடுத்துவந்து இணைத்திருந்தால் அனைவரும் கண்டு களிக்கலாமே! அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:05, 17 பெப்ரவரி 2013 (UTC)
Glossy Ibis
ஐயா, நான் கண்டது அன்றில் கட்டுரையிலுள்ள பறவையை (வலப்புறம் படத்தில் காணலாம்). நீங்கள் இணைத்திருப்பது வேறு பறவையாயிற்றே? தவிர, நான் சென்று வந்தது கூந்தன்குளத்துக்கு. கட்டுரையிலும் அவ்வாறு உள்ளது. ஆனால் ஊணூர் என்பது கோடியக்கரை எனவும் உள்ளது. ஊரும் பறவையின் பெயரும் தவறுதலாக மாறிவிட்டதோ? -- சுந்தர் \பேச்சு 11:13, 17 பெப்ரவரி 2013 (UTC)
அன்றில் கட்டுரைதான் பிழையாக உள்ளது என நினைக்கிறேன். Ibis என்பது அரிவாள் மூக்கன் போலிருக்கிறது. இப்போது ஊணூர் கோடியக்கரையாக இருக்க வேண்டும். ஏனெனில், அங்குதான் கடற்கரை அருகில் உள்ளது. இந்த ஊரில் இருந்து சற்று தொலைவில் கடற்கரை உள்ளது. -- சுந்தர் \பேச்சு 11:18, 17 பெப்ரவரி 2013 (UTC)

டாக்டர். க. ரத்னம் எழுதியுள்ள தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் அன்றில் குறித்த தெளிவு உள்ளது; தற்போது அரிவாள் மூக்கன் என்று அழைக்கப்படும் Glossy Ibis (Plegadis falcinellus) என்ற பறவை தான் அன்றில், பனங்கிளி என்று 4, 5, 20 ஆகிய பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெளிவிற்கு: White Ibis (Threskiornis melanocephalus) இதன் தமிழ்ப் பெயர்கள் = வெள்ளை அரிவாள் மூக்கன், கங்கணம், பனங்கிளி; Black Ibis (Pseudibis papillosa) இதன் தமிழ்ப் பெயர்கள் = கருப்பு அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன். மேலே குறிப்பிட்டுள்ள நூல் தற்போது பறவையியல் களத்திலுள்ளவர்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நூலாகும்.--பரிதிமதி (பேச்சு) 13:31, 17 பெப்ரவரி 2013 (UTC)

பறவையைக் குறித்த தகவல் என்றவுடன் உங்கள் நினைவு வந்தது பரிதிமதி. :) விளக்கத்துக்கு நன்றி. இதன்படி அரிவாள் மூக்கன் கட்டுரையை அன்றில் கட்டுரையுடன் இணைக்கவேண்டும். ஊணூர் கோடிக்கரையா கூந்தன்குளமா என உறுதி செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:44, 17 பெப்ரவரி 2013 (UTC)
ஆம். மேலும் வெள்ளை அரிவாள் மூக்கனுக்கும் கருப்பு அரிவாள் மூக்கனுக்கும் (!) பக்கங்களைத் தொடங்க வேண்டும். நிற்க. கோடியக்கரை-Checklist of birds of the Ramsar Site நூலில் Glossy Ibis (அன்றிலும்) Black Ibis (கருப்பு அரிவாள் மூக்கனும்) இரண்டுமே இல்லை. [1]; ஆனால் கூந்தன்குளத்தில் அவை வருவதாகப் பறவை மனிதர் பால் பாண்டி (அவரைப் பற்றிய பக்கம் கண்டிப்பாகத் துவங்க வேண்டும்) கூறினார். அதை வைத்துப் பார்த்தால் ...!--பரிதிமதி (பேச்சு) 14:13, 17 பெப்ரவரி 2013 (UTC)
Glossy/Black Ibis பறவைகளை நானே கூந்தன்குளத்தில் பார்த்தேன், பரிதிமதி. கோடியக்கரைக்கு இவை வருவதில்லை என்றால் இங்குள்ள தகவல் சரியாகத்தான் இருக்க வேண்டும். பறவைப் படத்தை மட்டும் மாற்றினாற் போதும். அரிவாள் மூக்கன்களுக்குத் தனித்தனிக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். பறவை அறிஞர் பால் பாண்டியைப் பற்றி என்ன தகவல்கள் உள்ளனவோ அவற்றைக் கொண்டு ஒரு குறுங்கட்டுரையைத் தொடங்கலாம். -- சுந்தர் \பேச்சு 14:30, 17 பெப்ரவரி 2013 (UTC)
  • மேற்கோள்கள்
  1. POINT CALIMERE - A.D. BARUAH (TAMILNADU FOREST DEPARTMENT PUBL - Annexure IV

1 தொகு

    • ஆய்வாளர்களுக்கு நன்றி.
  • அன்றில் என்பது தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் வாழ்ந்த பறவை. இது வந்துபோகும் பறவையா என்பது கருதிப்பார்க்க வேண்டிய செய்தி.
  • இணைக்கப்பட்டுள்ள படம் சங்கப்பாடல் தரும் செய்திக்குப் பொருத்தமாக உள்ளது.
  • ஊணூரைக் கோடியக்கரை எனக் கொள்வதே சங்கப்பாடல் செய்திகளோடு பொருந்தி வருகிறது. நாங்குநேரி கூத்தன்குளம் என்பது பொருந்தி வராது.
  • எனவே திருத்தப்பட்ட செய்தியையும் மாற்றவேண்டியதாயிற்று. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:08, 18 பெப்ரவரி 2013 (UTC)
    • இவை குளிர்காலத்தில் இனப்பெருக்கத்துக்காகத் தென்னிந்தியாவில் தங்கியிருந்து கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. அதனால் இவற்றை இங்கு வாழும் பறவைகளாகக் கருத இடமுண்டு. (சங்ககாலத் தட்பவெப்பநிலையைப் பற்றி எனக்குத் தெரியாது.) க.இரத்தினம் அவர்களின் நூல் இத்துறையில் மதிப்பு பெற்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதிலுள்ள தகவல்களை ஆய்ந்து பார்க்க வேண்டும். வேறு நல்ல நூல்களையும் அணுகலாம். -- சுந்தர் \பேச்சு 14:13, 20 பெப்ரவரி 2013 (UTC)
  • பொழுது (தமிழ் இலக்கணம்) பகுதியில் சங்ககாலத் தமிழகத்தின் பருவநிலை காட்டப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 22:05, 20 பெப்ரவரி 2013 (UTC)

//ஊணூரைக் கோடியக்கரை எனக் கொள்வதே சங்கப்பாடல் செய்திகளோடு பொருந்தி வருகிறது. நாங்குநேரி கூத்தன்குளம் என்பது பொருந்தி வராது.//

இக்கருத்து எந்நூலில் பதிவு செய்யப்பட்டது? இல்லை சொந்த கருத்தா? பதிக்கப்படாத ஆய்வுகள் சொந்த கருத்துகளாகும். சொந்த கருத்துகளுக்கு விக்கியில் இடம் தரக்கூடாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:32, 17 ஆகத்து 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊணூர்&oldid=2106499" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊணூர்" page.