பேச்சு:எண்ணங்களின் சங்கமம்

  • குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பினைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இல்லை. (தொடங்கிய நாள் தரப்படவில்லை. மாறாக ஒன்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாடிய செய்தி தரப்படுள்ளது)
  • கட்டுரை வடிவில் அமையாமல் செய்தித் தொகுப்பு வடிவில் உள்ளது *தரப்பட்ட மேற்கோள்களில் (3) எண்ணங்களின் சங்கமம் -அமைப்பு என்றும், வெளியிணைப்பான தினமணி நாளிதழ் குறிப்பில் நிகழ்ச்சி என்றும் முரண்படும் தகவலாக தரப்பட்டுள்ளது
  • விக்கி நடையில் முழுமையாக இல்லை.

மேற்காணும் காரணங்களுக்காக இக் கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:41, 6 ஆகத்து 2014 (UTC)Reply

கட்டுரை நடை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. --Kuzhali.india (பேச்சு) 09:21, 6 ஆகத்து 2014 (UTC)Reply

புரிதலுக்கு நன்றி. ஜே. பிரபாகர் குறித்த பகுதியை இக் கட்டுரையின் தலைப்பிலிருந்து விலகியுள்ளதால் நீக்கப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 13:52, 6 ஆகத்து 2014 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை தொகு

பயனர்:Kuzhali.india, கட்டுரை ஒரு விளம்பரம் போல் அமைந்துள்ளது. கொடுக்கப்ட்டுள்ள மேற்கோள்களையும் வெளியிணைப்புகளையும் நிறுவனத்துடன் தொடர்பற்ற உயர் நம்பகத்தன்மை உடைய மூன்றாம் நபர் சான்றுகளாக காண இயலவில்லை. இதனால், நிறுவனத்தின் குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியதாக உள்ளது.--இரவி (பேச்சு) 19:55, 11 ஆகத்து 2014 (UTC)Reply

பத்திரிக்கைத் தகவல்களும் மூன்றாம் நபர் சான்றாகக் கருதத் தகுதியற்றவையா என தெளிவுபடுத்தி உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் --Kuzhali.india (பேச்சு) 07:38, 12 ஆகத்து 2014 (UTC)Reply
வெளியிணைப்புகளாக தந்துள்ள நாளிதழ் செய்திகள் சான்றுகள் கணக்கில் வராது. அவற்றையே மேற்கோளாக / சான்றாக தந்தால் கூட இந்தச் செய்தி போல சுற்றி வளைத்து நிறுவனத்தைக் குறிப்பிடும் செய்திகளின் மதிப்பு குறைவே. தற்போது மேற்கோளாக தரப்பட்டுள்ளதில் உள்ள ஒரே நாளிதழ் செய்தியும் அந்த நிறுவனமே வெளியிட்ட நூலை முன்வைத்து வெளிவந்துள்ள சிறு குறிப்பே. எனவே, இதனை மூன்றாம் நபர் சான்றாக கொள்ள இயலாது. தமிழக அளவில் 800 நிறுவனங்களை ஒருங்கிணைப்பதாக கூறும் இந்த அமைப்பு பற்றி இன்னும் வலுவான (இயன்றால் ஆங்கிலம் அல்லது பிற மொழி) ஆதாரங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:53, 12 ஆகத்து 2014 (UTC)Reply
Return to "எண்ணங்களின் சங்கமம்" page.