பேச்சு:எழுதுகோல்

எழுத்துப் பெயர்ப்பு பற்றி தொகு

லடின் என்று நீங்கள் எழுதியுள்ளது Latinஆ?? Latin என்பதை தமிழில் எழுத்துப்பெயர்ப்பு செய்ய வேண்டும் என்றால் லாட்டின் என்று எழுதுதல் வேண்டும். லடின் என்று எழுதினால் தமிழில் Ladin என்று ஒலிக்கும். Ladin என்பதில் உள்ள லகரமும் குறில், ஆனால் ஆங்கில ஒலிப்பில் La என்பது நெடில். ஆங்கிலத்தில் குறில் நெடில் குறிக்கும் வழக்கம் வெகுவாக இல்லை. ஒவ்வொருசொல்லின் ஒலிப்பையும் தனித்தனியேதான் ஒருவர் கற்க வேண்டும். ஆங்கிலம் ஒலிப்பொழுக்கம் மிகக் குறைந்த மொழி. எனவே ஒலிப்புக்கு ஏற்றவாறு நாம்தான் தமிழில் நெடிலாகவும், குறிலாகவும் பார்த்து எழுத்துப் பெயர்க்க வேண்டும். லாட்டின் மொழியைக் குறிக்க தமிழில் இலத்தீன் என்னும் சொல் ஆட்சியில் உள்ளது.--செல்வா 14:35, 8 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எழுதுகோல்&oldid=349710" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எழுதுகோல்" page.