பேச்சு:கதிரலைக் கும்பா

Add topic
There are no discussions on this page.

கதிரலைக் கும்பா என்கிற தமிழாக்கம் திண்ணை இணையதளத்தில் சில வருடங்களுக்கு முன்பு தோன்றியது, இப்போது பிரபலமாகி உள்ளது.

-ராஜ் (தொழில்நுட்பம்) - 9-4-2010

கண்டிப்பாக கதிரலைக் கும்பா என்ற தலைப்புக்கு இக்கட்டுரையை வழிமாற்ற வேண்டும் . -- இராஜ்குமார் 07:45, 9 ஏப்ரல் 2010 (UTC)

கதிரலைக் கும்பா என்பது அலைபரப்பிக் கிண்ணிக்குப் பொருந்தும். dish antenna = அலைபரப்பிக் கும்பா, கதிரலைக் கும்பா. இது ரேடார் என்பதற்குச் சரியான சொல்லா? அலை சிதறுபிடி அல்லது அலை எறிபிடி எனலாம். வானொலி அலைகளைச் செலுத்தி அல்லது எறிந்து, அது ஒரு பொருள் மீது பட்டு எதிர்ந்து (சிதறி) வரும் அலைகளைப் பிடித்து (பற்றி), அப்பொருள்களின் நகர்வுகளை, தன்மைகளை அறியும் நுட்பக்கலை அல்லவா? ஆகவே நுண்ணலை எறிபிடி, வானொலி எறிபிடி, ரேடியோ அலை எறிபிடி, ஒளி/சீரொளி எறிபிடி என்று பலவாறு கூறலாம். எறிபிடி என்பது சுருக்கமாகவும், பொருத்தமானதாகவும் இருப்பதாக எனக்குப் படுகின்றது. தமிழில் அடிதடி, தள்ளுமுள்ளு, தட்டுமுட்டு (சாமான்கள்), அடிக்கடி, கைப்பிடி, கெடுபிடி போன்று இரு சொற்களை இணைத்துப் ஒருகருத்தைக் குறிப்பது வழக்கம்தான். --செல்வா 15:45, 11 ஜூன் 2010 (UTC)
Return to "கதிரலைக் கும்பா" page.