பேச்சு:காமக்கிழத்தி

There are no discussions on this page.

http://ta.wikipedia.org/wiki/பாலியல்_தலைப்புகள்_பட்டியல்

என்ற கட்டுரையில் குறிப்பட்டப் பட்டிருக்கிறது. அங்கிருக்கும் தலைப்புகளில் கட்டுரையை கொடுத்திருக்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

//தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும் காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம் என்பதை சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும் அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் விளக்குகிறார்.

தமிழினம் பண்டமாற்றையும் தம் குழுவிற்குள் கொடைப் பொருளாதரத்தையும் கடைப்பிடித்ததால் பரத்தையர் உறவு பொருளாதர மறுபயனுக்கானதாக இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

'ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மணநிலைக்குப் புறம்பாக நிலவிய உறவே பரத்தையர் உறவு’ என்ற மார்க்கனின் குறிப்பை முன்மொழிந்து ஏற்றுக் கொள்கிறார். (பக் 53)//

சங்க இலக்கியத்தில் எந்தப் பாடலில் இது சொல்லப்பட்டிருக்கிறது? விளக்குகிறார், வருகிறார், கொள்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். யார் இவர்??--Kanags \உரையாடுக 11:58, 26 சனவரி 2011 (UTC)[]

இது இணையத்தில் உள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை எனத் தெரிகிறது. நீக்க இருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:03, 26 சனவரி 2011 (UTC)[]
நீக்கத் தக்கதுதான். உரிய விளக்கத்தினைப் பயனருக்குக் கொடுத்தால் அவர் மீண்டும் மீண்டும் பங்களிக்க ஏதுவாகும். :)

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:39, 26 சனவரி 2011 (UTC)[]

இப்போது இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படுமா. காமக்கிழத்தி என்ற சொல் நெடுநாட்களுக்கு முன் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இது பரத்தை என்ற சொல்லுடன் ஒத்துப் போகாமல் ஆசை நாயகியை குறிக்கும் வகையில் இருந்துள்ளது. பரத்தையை விபச்சாரி என்று சொன்னால், காமக்கிழத்தியை சின்னவீடு என்று சொல்லலாம். இதற்குமேலும் எளிமை செய்ய முடியாது என நினைக்கிறேன். வலைப்பூக்களின் தொடர்பு முனைவர் என்பதாலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது செய்தவைகளை முன்பே செய்திருந்தால் இத்தனை கேள்விகளும் வந்திருக்காது என நினைக்கிறேன். என்ன செய்ய நான் விக்கியில் பங்கெடுத்து பங்கெடுத்துதான் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்தக் கருத்தானாலும் தயங்காமல் நாகரீகமாக சொல்லுங்கள். ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்.

நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காமக்கிழத்தி&oldid=676864" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காமக்கிழத்தி" page.