பேச்சு:கீட்டோடொன்டைடீ

பயனர்:Mayooranathan இந்த மீனுக்குத் தமிழில் சிறுவண்ணாத்தி என்று பெயர் உள்ளதாக நளியிரு முந்நீர் வளைப்பூவில் குறிப்பிடப்பட்டுள்ளது [[1]] எனவே இந்த பக்கத்தின் பெயரை மாற்றலாமா? arulghsrArulghsr (பேச்சு) 03:58, 22 அக்டோபர் 2016 (UTC)Reply

பயனர்:Arulghsr குறித்த வலைப்பூவில் சிறிதும் பெரிதுமான ஒரே தோற்றம் கொண்ட "Butterflyfish", "Angelfish" ஆகிய இருவகை மீன்களுக்கு முறையே "சிறுவண்ணாத்தி", "பெருவண்ணாத்தி" என்று பெயர் வழங்கியுள்ளனர். இப்பெயர்கள் "Butterflyfish" என்ற பெயரில் இருந்தே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. பொது வழக்கில் இதற்கு ஏதாவது தமிழ்ப் பெயர் இருக்குமா தெரியவில்லை. இப்பெயர் குறித்த வலைப்பூவினால் உருவாக்கப்படாமல், பொதுவழக்கில் உள்ளதாயின் தலைப்பை மாற்றுவதில் எனக்கு மறுப்பு எதுவும் இல்லை. ---மயூரநாதன் (பேச்சு) 08:59, 26 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கீட்டோடொன்டைடீ&oldid=2135674" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கீட்டோடொன்டைடீ" page.