பேச்சு:கும்பகோணம் சித்தி விநாயகர் கோயில்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 150 கோயில்கள் களப்பணி

வணக்கம். சித்தி, வரசித்தி விநாயகர் தொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் சேர்க்கும்போது ஒரு முறை புகுபதிகை செய்யாமல் வந்துவிட்டேன். இனி புகுபதிகை செய்துவிட்டுவருவேன். 1992இல் புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை அவர்கள் கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் என்ற தலைப்பில் எழுதி தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் சுமார் 60 கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்கோயில்களில் பெரும்பாலானவற்றைத் தேடிப் பதிந்து வருகிறேன். இந்நூலைப் பற்றி அந்நூலில் குறிப்பு இருந்ததால் களப்பணி சென்று நேரில் கோயிலைப் பார்த்து பதிவு செய்தேன். அவரது நூலில் காமாட்சி ஜோதிடம் தெரு என உள்ளது. அத்தெருவின் பெயர் காமாட்சி ஜோசியர் தெரு ஆகும். பிற நிலைகளில் தகவல்கள் பெற முடியவில்லை. முடிந்தவரை மேலும் ஆதாரங்களைச் சேர்க்க முயற்சிக்கிறேன். விடுபாடு இருக்க்கக்கூடாது என்பதற்காக பெருமுயற்சி எடுத்துவருகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:24, 21 அக்டோபர் 2015 (UTC)Reply

150 கோயில்கள் களப்பணி தொகு

பயனர்:Mdmahir, விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கிய முதல் பல கோயில்களுக்கு நேரடியாகச் சென்று விவரங்களைத் தொகுத்து, புகைப்படங்களை இணைத்து வருகிறேன். இவ்வகையில் 20.9.2014இல் 27 கோயில்கள் விக்கிபீடியாவிற்காகச் சென்றேன். 2015இல் விக்கிபீடியாவிற்காக 96 கோயில்கள் சென்றுள்ளேன். இக்கோயில்களில் சில கோயில்களுக்கு மறுபடியும் கூடுதல் விவரங்கள் சேர்க்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் சென்றுள்ளேன். அவை 28.2.2015 (31 கோயில்கள்), 2.6.2015 (14 கோயில்கள்), 6.6.2015 (2 கோயில்கள்), 7.6.2015 (3 கோயில்கள்), 12.6.2015 (4 கோயில்கள்), 13.7.2015 (7 கோயில்கள்), 1.9.2015 (3 கோயில்கள்), 26.9.2015 (7 கோயில்கள்), 22.10.2015 (8 கோயில்கள்), 26.10.2015 (10 கோயில்கள்), 2.11.2015 (4 கோயில்கள்)ஆகியனவாகும். இவை தவிர கோயில் உலா என்ற நிலையில் நண்பர்களோடு 50க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்றுள்ளேன். நேரில் பார்த்த விவரங்களே இப்பதிவில் தரப்பட்டுள்ளன. புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவையாகும். கூடுதல் விவரங்கள் தேவைப்படும்போதோ, ஐயம் ஏற்படும்போதோ நேரில் மறுபடியும் சென்று வருகிறேன். இந்நிலையில் இக்கோயில்கள் அனைத்திற்கும் நான் நேரில் சென்று புகைப்படம் எடுத்து, விவரங்களைச் சேர்த்துள்ளேன். விடுமுறை நாள்கள் என்ற நிலையில் முயற்சி எடுத்து எந்தச்செய்தியும் விடுபடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதிவருகிறேன். பிற நிலைகளில் ஆதாரம் கிடைக்காத நிலையில் என்னால் எதுவும் செய்ய இயலா நிலை உள்ளது. விக்கிபீடியாவில் பதிவுகள் இணைக்கப்படவேண்டும், வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்வாறான களப்பணி மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் இக்கட்டுரையினை நீக்காமல் இருக்க கருதிப்பார்க்க வேண்டுகிறேன். உங்களைப் போன்றோரின் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதற்கு மேலாக ஆதாரம் கிடைக்காத நிலையில் நான் எதுவும் செய்ய இயலா நிலையில் உள்ளேன். கிடைக்கும்போது அந்தந்த கட்டுரையில் சேர்ப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:45, 8 திசம்பர் 2015 (UTC)Reply

Return to "கும்பகோணம் சித்தி விநாயகர் கோயில்" page.