பேச்சு:சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

இராஜகோபாலாச்சாரி என்று இருக்கும் தலைப்புடன் இ என்ற உயிர் எழுத்து சேர்த்து தலைப்பிட வேண்டும் அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அது மட்டுமில்லாமல் என் பெயரை தமிழ் படுத்துகிறேன் என்று என்னுடைய பெயரை இராசாசி என்று எழுதிவிடாதீர்கள் என்று தமிழ் மக்களை வேண்டிக்கொண்டார். அவர் பெயரை இராஜாஜி என்றே அழைத்தனர். அது மட்டுமில்லாமல் ஒருவருடைய பெயரை தமிழ் படுத்துகிறேன் என்று அவருடைய ஒப்புதல் இல்லாமல் செய்யமுடியாது. அவர் அம்மா அப்பா வைத்த பெயரை நாம் யார் மாற்றுவதற்கு. நீங்கள் சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள் பல பயனர்கள் வடமொழி அல்லது ஆங்கில பெயரை வைத்துக்கொண்டு அவர்கள் பெயரை மாற்றாமால் தலைவர்களின் பெயரை மாற்றுகிறார்கள் இது குற்றமும் கூட சாதிப் பெயரை நீக்கலாம் அது கூட சில இடங்களில்தான். அவரே மாற்றசொல்லியிருப்பார்.--செல்வம் தமிழ் 16:34, 7 பெப்ரவரி 2009 (UTC)

பேச்சு:இராமானுசன்

தலைப்பை சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 21:31, 7 பெப்ரவரி 2009 (UTC)
தலைப்பு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இவரது முதற்பெயர் சக்கரவர்த்தி அல்லவா? முதற்பெயர் அல்லது முதலெழுத்துக் கொண்டு அழைப்பதே முறை.--Kanags \உரையாடுக 21:11, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply


இவர் தந்தை பெயர் சக்ரவர்த்தி அய்யங்கார் (முனிசீப்- தமிழில் என்ன?), தாயார் சிறிங்காரம்மா பிறந்த இடம் தொரப்பள்ளி (அப்போதைய சேலம் மாவட்டம்) இப்ப தர்மபுரி மாவட்டமா அல்ல கிருஷ்ணகிரி மாவட்டமா?, பிறந்த தேதி டிசம்பர் 8, 1878 . கனகு சொல்வதே என் கருத்தும் இவர் பெயர் சக்ரவர்த்தி இராசகோபாலச்சாரி அல்லது ச. இராசகோபாலச்சாரி என்று இருக்கவேண்டும். சக்ரவர்த்தி இராசகோபாலச்சாரி என்பதே சரியானது என்பது என் கருத்து. அப்படி தான் பல இடங்களில் இவர் பெயர் உள்ளது. --குறும்பன் (பேச்சு) 01:09, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to "சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி" page.