பேச்சு:சத்திமுத்தப் புலவர்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தலைப்பு
தலைப்பு
தொகுசத்திமுற்றம் என்று கற்ற ஞாபகம்.--பாஹிம் (பேச்சு) 14:51, 15 மார்ச் 2015 (UTC)
- @Parvathisri: ஆம், சத்திமுற்றப் புலவர் என்றே பாடநூலில் கற்றேன். தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் சத்திமுத்தப் புலவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. @Sengai Podhuvan and செல்வா: --மதனாகரன் (பேச்சு) 10:46, 8 செப்டம்பர் 2015 (UTC)
- //சத்தி முற்றம் என்ற பெயர் பிற்காலத்தில் பேச்சு வழக்கில் சத்தி முத்தம் ஆயிற்று. பிறகு அதற்கு ஒரு கதையும் எழுந்தது. சத்தி இறைவனுக்கு முத்தம் கொடுத்ததால் சத்தி முத்தம் ஆயிற்றாம். இது முற்றிலும் படைத்ததொரு கதையாகும். சத்திமுற்றப் புலவர் என்ற இவ்வூரைச் சேர்ந்த புலவர். சத்தி முற்றப்புலவர் என்றே அழைக்கப்படுவதிலிருந்தும் திருமுறைகளில் ஏழாம் பாடலில் இக் குறிப்பு சத்தி முற்றம் என்றே பயின்று வருவதிலிருந்தும் மேற்கூறிய கதை இத்தகையது என்பதை நனி விளக்கும். இத் தலத்திற்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகம் ஒன்று உள்ளது.//[1].--Kanags \உரையாடுக 11:12, 8 செப்டம்பர் 2015 (UTC)
- நன்றி சிறீதரன். சத்திமுற்றப் புலவர் என்றே நகர்த்தி விடவா? --மதனாகரன் (பேச்சு) 12:20, 8 செப்டம்பர் 2015 (UTC)
சத்திமுத்தப் புலவர் - என்பதே சரி --Sengai Podhuvan (பேச்சு) 21:29, 8 செப்டம்பர் 2015 (UTC)
- கூகுள் தேடுதல் சரியான முடிவாக இராது. வலுவான ஆதாரங்கள் வேண்டும்.--Kanags \உரையாடுக 21:34, 8 செப்டம்பர் 2015 (UTC)
தக்க ஆதாரம் எதுவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கூகுள்தேடல் முடிவுகளைக் கொண்டு கருத்துகளைச் சரியெனக் கொள்ளமுடியாது. சத்திமுற்றப் புலவர் என்று அழைக்கலாம் என நினைக்கின்றேன். முற்றம் என்பதே சரியான சொல்லாக இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு.--செல்வா (பேச்சு) 03:05, 10 செப்டம்பர் 2015 (UTC)
சத்திமுற்றம் என்பவது இவரது ஊர். அவ்வூரைச் சேர்ந்தவரைச் சத்திமுற்றப் புலவரென்று கூறாமல் சத்திமுத்தப் புலவரென்று கூறுவதற்கு நியாயமில்லை. எனவே, தமிழ் இணையக் கல்விக்கழகம் கூறுகின்றவாறு சத்திமுற்றப் புலவர் எனும் தலைப்புக்கு நகர்த்தி விடுவதே முறை.--பாஹிம் (பேச்சு) 13:33, 2 சூன் 2016 (UTC)