˘சால'ட் என்பதை பசுங்கறிஅல்லது இலைக்கறி எனலாம். பச்சையாக இலை, காய்களை தட்டில் வைத்து படைக்கும் உணவு. இலைக்கறி என்னும் சொல் vegetarian food என்னும் பொருளும் உள்ளதெனினும், இதற்கும் பொருந்தும். --செல்வா 00:35, 11 டிசம்பர் 2008 (UTC)

கறி என்பது சமைத்து உணவை முதன்மையாக குறிக்கும். கறி ஒரு தமிழ் உணவு. அவ்வளவு பொருந்தவில்லை. --Natkeeran 01:08, 11 டிசம்பர் 2008 (UTC)
கறி என்பது கறித்தல் = கடித்து உண்ணுதல் என்னும் வினைவழி வரும் சொல். கறி என்பதை பச்சையான காய்கறிகளுக்கும், சமைத்த பொருளுக்கும் கூறலாம். காய்கறி என்பதில் உள்ள கறி என்பதையும் நோக்குக. செ. ப அகராதியும் "2. Vegetables, raw or boiled;" என்று கொடுத்துள்ளது. --செல்வா 01:18, 11 டிசம்பர் 2008 (UTC)
நன்றி செல்வா. பிற பயனர் கருத்தும் அறியலாம். --Natkeeran 03:32, 11 டிசம்பர் 2008 (UTC)
ஆங்கில மொழியில் குறில் நெடில் என்று தனியாக உயிரெழுத்துகள் இல்லை. அவர்கள் Salad என்று எழுதினாலும், ˘சால'ட் முதல் உயிர்மெய் ஒலிப்பை நீட்டியே ஒலிப்பர். சலட் என்று எழுதினால் மிகவும் தவறாக பலுக்க நேரும். சாலட் என்றாவது எழுதுங்கள். --செல்வா 05:23, 11 டிசம்பர் 2008 (UTC)
இலைக்கறி என்பது சரியான சொல். மேலும் அடகு என்றாலும் இலைக்கறியே. செ.ப. அகராதி, அடகு என்பதர்கு " 1. Greens, edible leaves; இலைக்கறி." என்று பொருள் தந்துள்ளது. அதே போல அடை என்றாலும் "8. Greens; இலைக்கறி. (பிங்.) " என்று தந்துள்ளார்கள். பார்க்கவும். ஃவாபிரிசியசு தமிழ்-ஆங்கில அகராதியும் அடகு என்பதற்கு "அடகு - 2. leaves used as food, இலைக்கறி.' என தந்துள்ளார்கள்.--செல்வா 05:37, 11 டிசம்பர் 2008 (UTC)
முருங்கை இலை போன்றவற்றைச் சேர்த்துச் சுடும் தோசையை அடை தோசை என்று சொல்வதையும் ஒப்பு நோக்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:58, 11 டிசம்பர் 2008 (UTC)
இங்கு விதாண்டாவாதம் செய்வது எனது நோக்கில்லை. இலைக்கறி அல்லது பசுங்கறி என்பது Chicken salad க்கு எவ்வளவு பொருந்தும் என்று பாக்க வேண்டும். Puttu ஆங்கிலப்படுத்தவில்லை என்பதை இங்கு கவனிக்கலாம். --Natkeeran 22:31, 11 டிசம்பர் 2008 (UTC)
விதண்டா வாதமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை, நீங்களும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம். Chicken salad, tuna salad என்றெல்லாம் முன்னொட்டு இட்டு சொல்வதன் காரணமே இலைக்கறியுடன் பிறபொருட்கள் ஏதேனும் ஒரு வகையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதுதானே. தூனா இலைக்கறி, மீன் இலைக்கறி, கோழி இலைக்கறி என்றும் கூறலாம்தானே. பருப்புக் குழம்பு, மீன்குழம்பு என்று இருப்பதுபோல. இங்கே பெயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆங்கிலேயர்கள் புட்டு என்று கூறுவதாக நீங்கள் கூறுவது போல, நாமும் ஆப்பிள் என்றும் மேப்பிள் என்றும், காப்பி (கோப்பி) என்றும் கூறுகிறோம். சாலட் என்று கூறுவதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சாலட் என்பது இலைக்கறி, அடகு, அடை ஆகிய சொற்களுடன் ஒருவாறு நெருங்கிய தொடர்புடையது என்று நினைக்கின்றேன். இதனையும் குறிப்பிடுவதில் தவறு இல்லை. நம் உரையாடல்வழி கறி என்பது சமைத்த பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை என்பது முதற்கொண்டு பல தொடர்புடைய கருத்துகளை தெளிவுபடுத்திக்கொள்ள உதவியது. சுந்தர் சொன்ன அடைதோசை என்பதும் நான் முன்பு அறியாதது. கீரைத் தோசை என்று கேட்டிருக்கின்றேன், உண்டிருக்கின்றேன், ஆனால் அடைத்தோசை என்று கேட்டதில்லை. வெண்ணெய் உருக்கி நெய்யாக்கும் பொழுது முருங்கை இலையை இடுவதைக் கண்டிருக்கின்றேன். தனி மணம் ஊட்டும். இலைக்கறி (˘சால'ட்) மீது dressing என்று இடுவதற்கு என்ன சொல்லலாம்? டிரெசிங் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் அது மேலே இடுவது என்னும் பொருள் தெளிவாக அவர்களால் உணரப்படும். நாம் 'டிரெசிங் என்றால் அது ஏதோ புரியாத ஒன்றாக இருக்கும். மணத்தெளி, சுவைத்தெளி, சுவைக்குழை, சுவைத்தூவி, சுவைக்கூழ் என்று பல்வேறு சொற்களை நினைத்துப் பார்க்கலாம். எடுத்தாள வேண்டும் சொல்லவில்லை. கம்ப்யூட்டர் என்றுதான் கூறவேண்டும் என்று இருந்தால் இன்று கணினி என்னும் சொல் வழக்கூன்றியிராது. மாற்றுச் சொற்கள் கருத்தளவிலாவது எங்கேனும் இருந்தல் தவறல்ல. --செல்வா 23:16, 11 டிசம்பர் 2008 (UTC)
  • பச்சைக்காய்கறிக் கலவை
  • பழப்பச்சடி

--AntanO (பேச்சு) 19:16, 4 சூன் 2019 (UTC)Reply

வணக்கம். நான் இன்று "சாலட்" என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்துள்ளேன். "சாலட்" என்பதற்கு "இயற்கை உணவு" என்ற தலைப்பு பொருத்தமாக இருக்குமா? விளக்கம் தேவை. நன்றி. வசந்தலட்சுமி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாலட்&oldid=2914662" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாலட்" page.