பேச்சு:சிங்களப் புத்தாண்டு

தமிழ் சிங்களப் புத்தாண்டு??? இரண்டும் தொடங்கும் தேதி ஒன்று என்றாலும் தமிழ்ப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு என்று தனித்தனியாகச் சொல்வது தானே சரியாக இருக்கும்? சிங்கள ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு முறை அனைத்தும் தமிழ் முறையை ஒத்திருக்கிறதா?--ரவி 12:47, 14 ஏப்ரல் 2007 (UTC)

அது தெரியாது, ஆனால் ஒரே நாளிலேயே அமையும். ஒன்றாக சொல்வதுதான் சிறப்பு. இலங்கையில் ஒரு மரபும் கூட. விரும்பினால் தமிழ் புத்தாண்டு என்று ஒரு புதுக்கட்டுரை வரையலாம். --Natkeeran 12:51, 14 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் ஒரு பக்கம் ஏற்கனவே உள்ளது. எனவே இக்கட்டுரை தேவையில்லை. இரண்டும் ஒரே நாளில் வருவதால் கலண்டர்களில், பத்திரிகைகளில், மற்றும் பொதுவாக சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு (comma வைக் கவனிக்க) என்று வசதிக்காகக் கூறுவார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. வித்தியாசமான முறைகளிலேயே இருவரும் கொண்டாடுவர். வேண்டுமானால் சிங்களப் புத்தாண்டு என்று தனியான கட்டுரை தொடங்கலாம்.--Kanags 13:07, 14 ஏப்ரல் 2007 (UTC)

கனக்ஸின் கருத்துடன் உடன்படுகிறேன்--ரவி 13:20, 14 ஏப்ரல் 2007 (UTC)

//காலையில் எழுந்து மருத்து நீர் வைத்து முழுகி, புத்தாடை அணிந்து, கிரிபத் அல்லது பொங்கலும் பிற பலகாரங்களும் செய்து, உற்றார் உறவுனருடன் பகிர்ந்து உண்டு களித்து இருப்பது மரபு//

சிங்களவர்களும் மருத்து நீர் வைப்பார்களா? கேள்விப்படவில்லை. சிங்களவர் வெள்ளை ஆடை அணிந்து புத்த கோயில்களுக்கு செல்வர். சிங்களவர் பின்பற்றும் முறையையும் தமிழர் பின்பற்றும் முறையையும் வேறு வேறாகக் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரையை அநுமதிப்பதானால் தலைப்பில் இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். அத்துடன் கட்டுரையில் இலங்கை என்று குறிப்பிடப்படவில்லை. இக்கட்டுரை இலங்கைக்கு மட்டுமே பொருந்தும். மலையாளிகளும் இதே நாளிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும். அவர்களும் இதே முறையில் தான் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.--Kanags 13:47, 14 ஏப்ரல் 2007 (UTC)

மருத்து நீர்? கை விசேடம்?கிரிபத்? சிங்களவர் எல்லாரும் பௌத்தர்களா? பௌத்தர்கள் அல்லாதோர் இதைக் கொண்டாடுகிறார்களா? எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைக் குறிக்க வேண்டும்--ரவி 14:18, 14 ஏப்ரல் 2007 (UTC)

சிங்களவரில் 75% மேலானவர் பௌத்தர்கள் கூறப்படுகின்றது.மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடும் முறை என முக்கியமாக விகாரை செல்வது, புதுபானையில் சமைப்பது, வீடுகளுக்கு செல்வது, எண்ணை தேய்த்து முழுகுவது,றபான அடிப்பது விளையாட்டுபோட்டி வைப்பது அவுருது குமாரி எனும் அழகி போட்டி பற்றியெல்லாம என சில காட்சிகள தொலைக்காட்சியில் பார்ததுண்டு --கலாநிதி 17:08, 14 ஏப்ரல் 2007 (UTC)

  • சிங்களப் புத்தாண்டு என்று ஒன்று இல்லை. சிங்களவர் கொண்டாடுவது தமிழர் புத்தாண்டையே ஆகும். அதனாலேயே அவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர். அருண் 23:40, 8 ஜனவரி 2009 (UTC)

சில சொல் திருத்தங்கள்

தொகு

தீன் பண்டம் என்று கட்டுரையில் இருந்ததைத் தின்பண்டம் என்று மாற்றி இருக்கின்றேன். தின்னப் (உண்ணப்) பயன்படும் உணவுப்பொருள் தின்பண்டம். தின்பண்டம்வேறு தீன் பண்டம் என்பது வேறா ந்ன்றும் விளங்கவில்லை. நாற்களில் என்று இருந்ததை நாட்களில் என்ற்று மாற்றியுள்ளேன். வேறுப்பாடு --> வேறுபாடு.--செல்வா 20:44, 11 ஜனவரி 2009 (UTC)

திருத்தங்களுக்கு நன்றி.--அருண் 21:48, 11 ஜனவரி 2009 (UTC)

விளக்கம் தேவை

தொகு

இக்கட்டுரையின் ஆரம்பப் பகுதியில் “விளக்கம் தேவை” என கேட்கப்பட்டிருந்தது. தற்போது போதிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன். எனவே ஆரம்பப் பகுதியை திருத்திவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்துப் புத்தாண்டு எதிர் தமிழர் புத்தாண்டு

தொகு

சித்திரைப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என்று கூறுவதே தகும். தமிழர் புத்தாண்டு தை 1 என தமிழ்நாடு அரசு உத்யோகபூர்வமாக 2008 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. --Natkeeran 21:44, 11 ஜனவரி 2009 (UTC)

நற்கீரனின் கருத்து சரியானதே. அதற்கேற்ப கட்டுரைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்துப் புத்தாண்டு என்றும் தமிழ்ப் புத்தாண்டு என்றும் இரு கட்டுரைகள் தேவை.இப்போதுள்ள தமிழ்ப் புத்தாண்டு கட்டுரையை இந்துப் புத்தாண்டுக் கட்டுரைக்கு வழிமாற்றி புதிதாக தமிழ்ப் புத்தாண்டு கட்டுரை எழுத வேண்டும்.--Kanags \பேச்சு 22:12, 11 ஜனவரி 2009 (UTC)
    • தமிழர்களுக்கென தனித்துவமான ஓர் ஆண்டு முறைமை இருக்க வேண்டும் என எண்ணி 1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலமையில் செய்த ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் என்பதால், அவர் பிறந்த ஆண்டிலிருந்தே “திருவள்ளுவர் ஆண்டு” என காலக் கணிப்பீட்டு முறையை ஆரம்பிப்பது என முடிவெடுத்தனர். இருப்பினும் தமிழக அரசு இந்த திருவள்ளுவர் ஆண்டு முறையை 1972 ஆம் ஆண்டே ஏற்றது. அதனையே தற்போது தமிழர் புத்தாண்டு தை 1 என தமிழ்நாடு அரசு உத்யோகபூர்வமாக 2008 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

அது எனக்கும் உடன்பாடானதே.

ஆனால் இந்தக் கட்டுரையில் தமிழர் காலகாலமாக கொண்டாடி வந்தப் புத்தாண்டைப் பற்றியே பேசப்படுகின்றது. இதன் பிறகு எதனைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிப் பேசப்படவில்லை.

தமிழர் புத்தாண்டுப் பிறப்பு தை மாதத்திலா? சித்திரை மாதத்திலா என்பது தமிழ் புத்தாண்டு கட்டுரையில் விவரிக்கலாம் என்றே நினைக்கின்றேன்.--அருண் 22:36, 11 ஜனவரி 2009 (UTC)

தமிழரோடு ஒன்றிவிட்ட தமிழனது பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் வேறு படுத்த முனைவதால், நாளை “தமிழ் சிங்களப் புத்தாண்டு” எனக் கூறிவரும் சிங்களவனும் தமிழ் எனும் சொல்லை அகற்றிவிட்டு, அதற்கான ஒரு வரலாற்று கதையையும் உருவாக்கிவிட்டு, இது சிங்கள இனத்துக்கே உரிய சிங்களப் புத்தாண்டு எனக் கூறிக்கொள்ளப் போகின்றான். அதனை அரசு உத்யோகபூர்வமாக அறிவிப்பு மட்டுமன்றி சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டாலும் ஆச்சரியப் பட வேண்டியதில்லை. நாமோ 1921 இல் முடிவெடுத்து 2008 அறிவிக்கப்பட்ட “தை” தான் தமிழரது புத்தாண்டு எனக் கூறிக்கொள்ளப் போகின்றோம். --அருண் 22:54, 11 ஜனவரி 2009 (UTC)

தமிழ் புத்தாண்டு என்று தை ஒன்றைக் குறிப்பிடுவதில் சில குழப்பங்கள் உண்டு. தமிழ்நாடு அரசு இட்ட ஆணை தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்டதே. இதை முழுமையான அனைத்துத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டனர் என்று சொல்ல இயலாது. அதே போல், தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்கள், நாடுகளில் வாழும் தமிழர்களின் பழக்கத்தையும் இது மாற்றாது. இக்குழப்பங்களைக் கட்டுரையில் குறிப்பிட வேண்டும்--ரவி 17:30, 12 ஜனவரி 2009 (UTC)

ரவியின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழக அரசின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இது தமிழக அரசின் முடிவு மட்டுமல்ல, தமிழறிஞர்கள் பலர் ஒன்று கூடி 1921 ஆம் ஆண்டில் எடுத்த முடிவு. இன்று தான் அது அரச ஆணையாக வந்துள்ளது. இதனை உலகத் தமிழர்கள் ஏற்க வேண்டியது அவர்களது கடமை. சித்திரைப் புத்தாண்டு ஆரியர்களால் கொண்டு வரப்பட்டது. 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்ற வடநாட்டு மன்னனின் பெயரால் எற்படுத்தப்பட்டவை. தமிழ் மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதனை இந்நாள் வரையும் தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடியது எவ்வளவு மடமை. இன்றாவது தமிழக அரசு விழித்துக்கொண்டுள்ளது. ஏற்கனவே ஈழத்தமிழர்கள் (எங்கிருந்தாலும்) தை 1 ஐ தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். சித்திரைப் புத்தாண்டை இந்துப் புத்தாண்டு (அல்லது வேறு ஏதாவது பெயரில்) ஏற்க வேண்டியது தான். இந்துக்கள் அதனையும் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை.--Kanags \பேச்சு 00:08, 13 ஜனவரி 2009 (UTC)
சித்திரை மாத தொடக்கத்தை பழைய தமிழ்ப்புத்தாண்டாகக் கொள்ளலாம். தமிழர்களின் மாதங்கள் கதிரவனின் "நகர்ச்சியை" (நில உலகில் இருந்து பார்க்கும் பொழுது விண்மீன் கூட்டங்களின் இடையே கதிரவன் நகர்வதாக உணர்வதை)ப் பொருத்தது. எனவே தைமாதம், சித்திரை மாதம் இரண்டுமே விண்மீன் கூட்டம் கொண்ட வெவ்வேறு "வீட்டில்" நுழைவதே. --செல்வா 01:02, 13 ஜனவரி 2009 (UTC)

//தமிழக அரசின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.// - இது விருப்ப நிலை. என்னுடைய தனிப்பட்ட ஆதரவும் தை ஒன்றைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொள்வது தான். ஆனால், அரசு கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் தற்கால நிலையைக் குறிப்பதாகவும் விக்கிப்பீடியா இருக்க வேண்டும். அரசின் கொள்கைகள் எல்லாமே சரியுமல்ல. தவறுமல்ல. அரசின் கொள்கைகளுக்கு உட்படாத எத்தனையோ சமூக வழக்கங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுக்க 100% மக்கள் தை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடத் தொடங்கவில்லை என்பது உண்மை நிலை. இந்த இரட்டை நிலை, குழப்பத்தைக் கட்டுரையில் முக்கியமாக குறிப்பிட வேண்டும்--ரவி 04:50, 13 ஜனவரி 2009 (UTC)

//தமிழக அரசின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.// தமிழக அரசின் நிலையை அனைத்து தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனில் முதலில் ஈழத்துக்கான கோரிக்கையை விட வேண்டும். ஏனினில் தமிழ்நாட்டில் சுதந்திர ஈழத்தைப் பற்றி பேசுவது இன்று குற்றமென்று கருதப்பட்டு பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அருகில் உள்ள தமிழர் பெரும்பான்மை மாநிலமான புதுச்சேரியே இன்னமும் தமிழ்ப்புத்தாண்டாக சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் போது, உலகத்தமிழர் தமிழக அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்பது சரியல்ல. எந்த மக்களும் தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் ஆணைகளையே மதிப்பர். தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள 90% தமிழர்களாலும் 10% பிற மொழியினராலும் தேர்ந்தெடுக்கபடுவது. இதில் ஈழத்தமிழருக்கோ, மலேசியத்தமிழருக்கோ, சிங்கப்பூர் தமிழருக்கோ, இங்கிலாந்து, தென்னாபிரிக்க, கனடிய, பர்மிய, பிரெஞ்சு, அமெரிக்க தமிழருக்கோ எந்த பங்கும் இல்லை. எனவே தமிழக அரசின் ஆணைகளை இவர்கள் எல்லோரும் மதிக்கவேண்டும் என்று எண்ணுவது சரியல்ல.

Return to "சிங்களப் புத்தாண்டு" page.