பேச்சு:செதிலூரிகள்

There are no discussions on this page.

இக்கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி, த*உழவன். இது கட்டாயம் இருக்க வேண்டிய உயிரின வகை. -- சுந்தர் \பேச்சு 07:50, 29 திசம்பர் 2010 (UTC)

  • உங்களின் மகிழ்ச்சி எனக்குப் புத்துணர்வு தருகிறது. த.வி.க்கு வந்து செல்வது எனது கடமை. எனது மனத்தவிப்புகளை இங்கு களைகிறேன். எனக்கு இதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைப்பதில்லை. எனவே, எனக்கு நன்றி கூறுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
Squamata என்ற இலத்தீனியச் சொல்லுக்கு, செதிலூர்வன என்று மாற்றினால் சிறியதாகவும் சிறப்பாகவும் இருக்குமென எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன?
கட்டுரையில் வரும் note என்பதனை, குறிப்பு என்பதனைக் குறிக்கும் கு என்று மாற்ற இயலுமா?
தமிழாலும் முடியும் என்பதற்காக பல்வேறு கணினியியல் பணிகளைச் செய்யும் உங்களின் செயல்களுக்குத் தலைவணங்குகிறேன். --த* உழவன் 04:56, 30 திசம்பர் 2010 (UTC)
த*உழவன், ஊர்வது விலங்கு, செதில் இல்லை என்பதால் செதிலூர்வன என்பது மயக்கம் தரக்கூடும். செதில் ஊர்வன எனப் பிரித்து எழுதினால் சரியாக இருக்குமோ என்னவோ. செதிற்றோல் ஊர்வன என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன். பிறர் கருத்தையும் அறிய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:02, 30 திசம்பர் 2010 (UTC)
  • சிறிது எண்ணங்கள் விரிவடைந்தன.அறிவோம்.ஆராய்வோம்.இனி, பிறரின் கருத்துக்குக் காத்திருப்போம்.--த* உழவன் 00:26, 3 சனவரி 2011 (UTC)

இன்றுதான் இப்பக்கத்தைக் காண்கின்றேன். இதனைக் கட்டாயம் செதிளூர்வன அல்லது செதிலூர்வன எனக் கூறலாம். இப்படித்தான் நானும் குறிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று செதிளூர்வன (squamata) என்பது பற்றிக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கியபொழுது பார்த்தால் ஏற்கனவே இப்படி ஒரு கட்டுரை இருப்பதைப் பிடரிக்கோடன் கட்டுரையில் இருந்தும் ஆங்கில விக்கி squamata என்னும் கட்டுரையில் இருந்தும் அறிந்தேன்! மகிழ்ச்சியும் கொண்டேன்! Amphisbaenia என்பதைத் செதிற்புழுக்கள் எனலாம்.--செல்வா 02:52, 24 பெப்ரவரி 2012 (UTC)

வெகுநாள் கழித்து மீண்டும் பார்க்க நேரிடுகின்றது. squamata என்பதைச் செதிலூரி என்றே சொல்லாம் என்று நினைக்கின்றேன். செதிலுடைய ஊர்வன வகை உயிரினம் என்று பொருள் தரும். --செல்வா (பேச்சு) 03:53, 17 ஆகத்து 2020 (UTC)
ஆம், எளிதாகவும் பொருளைச் சட்டென உணர்த்துவதாகவும் உள்ளது. செதிலூரி என்றே பயன்படுத்துவோம். -- சுந்தர் \பேச்சு 17:59, 17 ஆகத்து 2020 (UTC)
எனது முந்தைய தயக்கம் தேவையற்றது என உணர்கிறேன். பொடியிட்டிலி என்றால் பொடியான அளவிலான இட்டிலியாகவும் பொடியில் தோய்ந்த இட்டிலியாகவும் கொள்ளலாம். இடத்துக்கேற்றாற்போல புரிந்துகொள்வதுபோல செதிலூர்வன, செதிலூரி எல்லாம் பொருந்தும். மேலே கருத்திட்ட மற்ற இருவரும் இதில் இணங்குவதால், பக்கத்தை நகர்த்திவிடுகிறேன். @செல்வா மற்றும் தகவலுழவன்: -- சுந்தர் \பேச்சு 05:48, 18 ஆகத்து 2020 (UTC)
நன்றி @Sundar: --செல்வா (பேச்சு) 13:58, 18 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செதிலூரிகள்&oldid=3022504" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செதிலூரிகள்" page.