செம்மரம் அல்லது சிவப்புச் சந்தனம் என அழைக்கப்படும் மரம் (ஆங்கிலத்தில் red sanders, அல்லது red sandalwood ), ( தெலுங்கு: రక్తచందనము ரக்த சந்தனமு) என்று அழைக்கப்படும் மரமாகும் இது சே மரம் அல்ல என்று கருதுகிறேன். இந்த செம்மரம் சந்தன மர இனத்தைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. ஆராய்ந்து பார்க்கவும்.

செஞ்சந்தனம் (Pterocarpus santalinus / Red Sandalwood), சே மரம் (Soymida febrifuga / Indian Redwood) இரண்டும் வெவ்வேறானவை. ஆங்கில விக்கிப் பக்கத்தைத் தர முடியுமா? --AntonTalk 15:57, 8 ஏப்ரல் 2015 (UTC)
தொடர்பானது: விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 7#redwood --AntonTalk 18:10, 8 ஏப்ரல் 2015 (UTC)

செஞ்சந்தனமும் செம்மரமும் ஒன்று என தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இருளாண்டி இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதையும் பரிசீலிக்கவும்.--இரா.பாலா (பேச்சு) 08:45, 9 ஏப்ரல் 2015 (UTC)

செஞ்சந்தனம் (Pterocarpus santalinus / Red Sandalwood), சே மரம் (Soymida febrifuga / Indian Redwood) இரண்டும் வெவ்வேறானவை. எனதான் நானும் கூறினேன் Anton அவர்களே ஆனால் தமிழ் விக்கியில் செம்மரத்தைத் தேடினால் வழி மாற்றில் சே மரத்தின் பக்கத்தில் வந்து நிற்கிறது அந்த வழிமாற்றை எடுத்து செஞ்சந்தனத்திற்கு திருப்பலாம் அருளரசன்Arulghsr (பேச்சு) 14:34, 10 ஏப்ரல் 2015 (UTC)
ஆனால், இக்கட்டுரை சே மரமும் செம்மரமும் ஒன்றே என்கிறது. இதுபற்றி மிகச் சரியாக அறிந்தவர்களின் கருத்துத் தேவை. அத்துடன் en:Sequoioideae, en:Redwood (disambiguation) என்பதிலும் பல "செம்மரங்கள்" உள்ளதையும் கவனிக்க வேண்டும். --AntanO 18:20, 10 ஏப்ரல் 2015 (UTC)
  • ஆன்டன் கருத்து சரியானது எனக் கருதுகிறேன். ரோட்டுசெம்மை தொடர்புடைய செய்திகளையும், படங்களையும் இக்கட்டுரையிலிருந்து களையலாம். செஞ்சந்தனம் தொடர்புடைய படங்களை இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 23:15, 10 ஏப்ரல் 2015 (UTC)

வழிமாற்றை மாற்றவேண்டும் தொகு

செம்மரம் என்பது செஞ்சந்தனம் மரத்தைக் குறிப்பது என்பதை [1] இதனால் அறியலாம் எனவே சேமரத்துக்கு தரப்பட்ட செம்மர வழிமாற்றை மாற்றி செஞ்சந்தனத்துக்கு தரவேண்டும்.--அருளரசன் (பேச்சு) 03:47, 20 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்று. ஏற்கிறேன். சீர் செய்யுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:02, 20 அக்டோபர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சே_மரம்&oldid=2430528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சே மரம்" page.