பேச்சு:தனிமங்களின் பெயர்ப் பட்டியல்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கோபி, தனிமங்களில் எண் படியலை ஏன் நீக்கினீர்கள்?! அக்கட்டுரை அணுஎண் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டது. இப்பொழுது அந்த தொடர்பு அறுந்துள்ளது. தனிமங்களின் பெயர்ப்பட்டியல் பெயரின் ஆங்கில எழுத்துப்படியான அகரவரிசை. தனிமங்களில் எண் பட்டியல், அணு எண்ணிணின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல். இதே போல குறியெழுத்து, அணுப் பொருண்மை அடிப்படையிலும் வரிசைகள் உண்டு. இவைகளுக்குப் பயன் உண்டு எதை அடிப்படையாகக்கொண்டு வரிசைப்படுத்தப்பாடுள்ளது என்பதைக் கொண்டு ஆக்கப்பட்டன. இவை வெறும் பட்டியல் அல்ல வரிசைப் படுத்தப்பட்ட பட்டியல்கள்.--C.R.Selvakumar 20:27, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
- செல்வா, பக்கங்களை நகர்த்தும் போது, வரலாறுகளை ஒன்றிணைக்கும் பொருட்டு, சில சமயம் பக்கங்களை நீக்கி மீண்டும் இணைக்க வேண்டி வரும். இது விக்கி நுட்பக்காரணங்களால் உள்ள நடைமுறை. இதன் காரணமாகவே, கோபி தனிமங்களின் எண் பட்டியல் கட்டுரையை நீக்கிப் பின் திரும்பவும் மீட்டு எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன் (நீக்கல் மற்றும் மீட்பு பதிகைகளில் அவரது குறிப்புகளில் இருந்து அறியக்கிடைப்பது). அக்கட்டுரை தற்போது மீண்டும் உள்ளது. நன்றி--ரவி 20:40, 29 செப்டெம்பர் 2006 (UTC)