பேச்சு:தமிழகத் தலைமை நீதிபதி

தலைப்பு தொகு

நல்ல கட்டுரை செல்வம். தலைப்பு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி அல்லது தமிழகத் தலைமை நீதிபதி என்றிருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. அரசு, பேரவைகள், நீதித்துறை இம்மூன்றும் முறையே நாடு அல்லது மாநிலத்தின் உறுப்புகளே அன்றி அரசின் கிளைகள் அல்ல (இந்தியாவில்). -- சுந்தர் \பேச்சு 05:59, 20 ஏப்ரல் 2009 (UTC)

நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கும் உடன்பாடு இல்லை ஆனால் தமிழக அரசு தமிழ் இணையப்பல்கலைகழகத்தில் உள்ள அரசாட்சி சொல் அகராதியில் அட்வகேட் ஜெனரல் என்ற சொல்லுக்கு அரசுத் தலைமை வழக்குரைஞர் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து இதற்கும் தவறுதலாக வைத்துவிட்டேன். கருத்துக்கள் வந்தால் மாற்றலாம் என்று இருந்து விட்டேன் கருத்து வந்து விட்டது மாற்றி விட்டேன். தங்கள் கருத்துக்கு நன்றி--செல்வம் தமிழ் 17:04, 20 ஏப்ரல் 2009 (UTC)
மாற்றத்துக்கு நன்றி செல்வம். அட்வகேட்டு செனரல் அரசு சார்பில் அறமன்றத்தில் வழக்குரைப்பவர் என்பதால் அவ்வாறு தந்திருக்கக் கூடும். தவிர, அந்த அகரமுதலியில் சில பொருத்தமற்ற மொழிபெயர்ப்புகளும் உள்ளன. -- சுந்தர் \பேச்சு 17:20, 20 ஏப்ரல் 2009 (UTC)

அதில் பல பிரிவுகள் உள்ளன. தமிழக அரசு அதற்காக பலக் குழுக்கள் வைத்து செயல்படுத்துகின்றது ஒன்றிரண்டு நம் கட்டுரைக்கு பொருத்தமில்லாமல இருக்கலாம். ஆட்சி சொற்களை பொதுவாகவேப் பயன் படுத்துவது நல்லது அதை அரசாணை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்விணையம் அவ்வளவு எளிதில் தொடர்பு கிடைப்பதில்லை பலர் பயன்படுத்துவதில்லை, அது இன்னும் செப்பனிடப்பட்டுகொண்டிருக்கின்றது.--செல்வம் தமிழ் 21:33, 21 ஏப்ரல் 2009 (UTC)

Return to "தமிழகத் தலைமை நீதிபதி" page.