சுட்டிகள் தொகு

குறிப்புகளும் சில கேள்விகளும் தொகு

இலங்கையில் பனை சார்த உணவு வகைகள் முக்கியம் பெறுகின்றன. எடுத்துக்காட்டுக்கு,

  • பனங்கிழங்கு
  • நொங்கு
  • புளுக்கொடியல்
  • பனங்கட்டி
  • கள்ளு
  • பூரான் ???

இந்தியாவில் பனையின் முக்கியத்துவம் என்னவென்று தெரியவில்லை.

  • இறைச்சியை விட மீனே தமிழர்களால் பரவலாகவும் விரும்பியும் உண்ணப்படுகின்றது. இக் கூற்று சரியா?
  • குழம்பு, சாம்பார் இரண்டும் ஒன்றா?
  • பால், தயிர், மோர், நெய்
  • தமிழர் சமையல் வரலாறு
  • தமிழர் சமையல் முறைகள்
  • தமிழர் சமையல் கருவிகள்
  • தமிழர் சமையலில் தற்கால போக்குகள் (எ.கா: இடியப்ப Machine, ரெடி மேட் இட்லி, ஆப்பம் மிக்சர்)
நற்கீரன், குழம்பு, சாம்பார் இரண்டும் வேறானவை என நினைக்கிறேன். குழம்பு என்ற சொல் தமிழகத்தில் பாவனையில் உள்ளதா?--Kanags 02:01, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply


இந்தியாவின் பிற மாநில வழக்கங்களை அறியேன். தமிழ்நாட்டில் பனை சார் உணவுகள் முதன்மை உணவாகக் கொள்ளப்படுவதில்லை. நொங்கு இளைப்பாற்றும் உணவாகவும், பனங்கிழங்கு சிற்றுண்டி போலும் பயன்படுகிறது. நொங்கு, கிராமங்கள் நகரங்கள் அனைத்திலும் உண்ணப்படுகிறது. இளநீர் விற்பதை போல் நொங்கும் சுளை கீறி விற்கப்படுவதை நகரங்களில் காணலாம். பனங்கிழங்கு உண்ணும் வழக்கம் கிராமங்களில் மட்டுமே எனக் கொள்ளலாம். கள்ளு பெரும்பாலும் வயது வந்த அடித்தட்டு மக்கள் மட்டும் பருகுவதாக கருதலாம். எனினும், இப்படி பருகுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும், ஆர்வத்தின் பேரில் ஓரிரு முறை பருகுவோரே மிகை என்றும் கருதலாம். பனங்கட்டி (பனங்கற்கண்டு?) மருத்துவப் பயன்பாடுகளுக்கு உதவுகிறது. பூரன், புளுக்கொடியல் போன்ற சொற்களை நான் கேள்விப்பட்டதில்லை.


குழம்பு, சாம்பார் இரண்டும் ஒன்றல்ல. சாம்பாரில் பருப்பு, காய்கறிகள் மிகையாக இருக்கும். குழம்பில் நீர்த் தன்மை குறைவாகவும், புளிப்பு, காரம், மசாலா பொருட்கள் அதிகமாகவும் இருக்கும். கோழிக் குழம்பு, மீன் குழம்பு, (ஆட்டுக்) கறிக் குழம்பு, புளிக்குழம்பு, சுண்ட வற்றக் குழம்பு, முருங்கைக் காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார் போன்ற சொல் வழக்குகளிலிருந்து இவ்வாறான முடிவுக்கு வரலாம். எனினும் பேச்சு வழக்கில், சாம்பாரையும் குழம்பு என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், கறிக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றை ஒரு போதும் சாம்பார் என்று குறிப்பிடுவதில்லை.


இறைச்சியை விட மீனே தமிழர்களால் அதிகம் உண்ணப்படுகிறது என்ற கூற்று சரியென்று சொல்லவோ உறுதி செய்யவோ வாய்ப்புகள் குறைவு. நகரங்களில் மீன் விரும்பிச் சாப்பிடும் போக்கு உண்டென்றாலும், கிராமங்களில் மீன் எப்போதும் கிடைப்பதில்லை. ஏழை எளியோர் வீட்டில் வளர்க்கும் கோழிகளை உண்பது உண்டு. திடுதிடுப்பென்று வரும் விருந்தினர்களை உபசரிக்க பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் பலியாவதுண்டு. மேலும், கோழிக் கறிக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவற்றின் availabilityயும் அதிகம். வாரம் ஏழு நாளும் கிடைக்கும் என்று சொல்லலாம். வாரம் ஒரு முறை கறி உண்போர் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கறி சமைப்பர் என்பதால் அன்று ஆட்டுக் கறி அதிகமாக கடைகளில் கிடைக்கும். பிற நாட்களில் சிறிய கடைகளில் ஆட்டுக் கறி கிடைக்காது. அல்லது, காலையில் மட்டும் மிகச் சிறிய அளவில் கிடைக்கும். ஆட்டுக் கறியின் விலை காரணமாக, நகரம், கிராமம் இரண்டிலும் இவற்றை வாங்கி உண்போர், வாங்கும் frequency குறைவு என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை. ஆனால், மாட்டுக் கறி உண்பதுண்டு. கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் (அனைத்து மதத்தினரும்) மாடுகளை தெய்வமாகக் கருதுவதால் மாட்டுக் கறி உண்பதில்லை. இந்துக்களும் மாடுகளை வணங்குவதால், பெரும்பாலும் வீடுகளில் மாட்டுக் கறி சமைப்பதில்லை. எனினும், சில இந்துக்கள், சமய நம்பிக்கை அற்றவர்கள், அடித்தட்டு மக்கள், குடிப்பழக்கம் உடையோர் மாட்டுக் கறி உண்பதுண்டு. மாட்டுக் கறி விலை குறைவாக இருப்பதும், உடல் வலிமை தரும் என்ற நம்பிக்கையும் சிலரை ஆர்வத்தின் பேரில் ஒருமுறையோ தொடர்ந்தோ உண்ணச்செய்கின்றன.
நாய்க் கறி உண்ணும் வழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லை. எனினும், சில தரமற்ற உணவு விடுதிகளில் இவை கலப்படம் செய்யப்படுகிறதோ என்று அச்சமுறுவோரும் உண்டு. பெரும்பாலான தமிழ் இந்துக்கள் பன்றிக் கறி உண்பதில்லை. காலங்காலமாக இவை உண்ணப்படுவதில்லை என்றாலும், தமிழ்நாட்டில் பன்றிகளின் பொதுவான வாழ்விடங்கள் அருவருப்புக்கு உரியதாக இருப்பதும், பன்றிகளில் இருந்து நோய் தொற்றும் அபாயம் அதிகம் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். பன்றிகளைப் பற்றிய இவ்வருவருப்பு, வெளிநாடுகளில் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட பன்றிகளை உண்பதற்குக் கூட மனத்தடையை உண்டு செய்கின்றன. இந்த விலங்குகள் போக, காடை, முயல், நண்டு, கொக்கு, மைனா, வான்கோழி, போன்ற விலங்குகளின் கறிகளும் வீடுகளிலும் உணவகங்களிலும் சமைக்கப்படுகின்றன. கிராமங்களில் முயல், பறவைகள் வேட்டைக்கு போதல் ஒரு வழக்கமாகும். பறவைகளை பகலிலும் முயல்களை இரவிலும் வேட்டையாடுவர். பொதுவாக வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு அரசிடம் உரிமம் வாங்குவது அவசியம். முயல்களை பிடிக்க கன்னிகள் வைப்பதும் உண்டு. சில சமயங்களில் முயலுக்கு வைத்த கன்னியில் நரிகள் மாட்டினால், அவற்றையும் சந்தையில் விற்கும் வழக்கம் உண்டு. நரியின் மூளைக்கு தனி விலை வைக்கப்பட்டாலும், உண்மையில் அதை உண்பவரின் அறிவு வளர்ச்சி அடைகிறதா என்பது கேள்விக்குறியது.
கிராமங்களில் மழை பெய்து குளம் நிரம்பும் காலங்களில், அதிகமாக மீன் உணவு உண்ணப்படுவதை காணலாம். குளம் நிரம்பியுள்ள காலங்களில் சிறுவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது ஒரு பொழுதுபோக்கு ஆகும். தூண்டில் தவிர, வாய்கால்களில் பரி (ஒரு வகை கூடை) வைத்தும் மீன் பிடிப்பது உண்டு. செழிப்பான காலங்களில் குளத்தில் இருந்து வாய்க்கால் வழி வரும் மீன்கள், வாய்க்கால் நீர் வற்றியவுடன் வாய்க்கால் மண்ணிலேயே தங்கி விடுவதால், காத்திருந்து அவற்றை அள்ளிக் கொண்டு போவோரும் உண்டு. பாசன நீர் வழியாக வயலுக்கு வரும் மீன்களை, வயலில் நீர் வற்றியவுடன் உயிருடனோ இறந்தோ பிடிக்க எளிதாக இருக்கும். (மேற்கண்ட scenarioக்கள் மாநிலமெங்கும் மழை பெய்து மிகச் செழிப்பாக இருக்கும் காலங்களில் காணலாம். 1994ஆம் ஆண்டு இது எனக்கு கிடைத்த அனுபவம். அனைத்து சிற்றூர்களிலும், இன்றும் இவ்வழக்கம் உண்டு என்று உறுதியாக கருதலாம். தமிழ்நாட்டில் குளங்கள் வழிந்தோடும் காலங்களில் யாரேனும் இக்காட்சிகளை படமாக்கித் தந்தால், தமிழர் வாழ்க்கை முறைக்கு அருமையான ஆவணமாகவும் பார்த்து ரசிக்கத் தக்கதாகும் இருக்கும்) குளம் கலங்கி மிகை நீர், தடுப்புகளைத் தாண்டி வழிந்து ஆற்று வழியில் செல்லும்போது வரும் மீன்கூட்டங்களை பிடிக்க ஊர்மக்கள் கூட்டம் அலைமோதும். பெரும்பாலும் சேலைத்துணிகளை பாய்ந்தோடும் நீருக்கு எதிர்த் திசையில் பிடித்து, மீன்களை சிறைப்படுத்துவர். சிறிய குளங்களில் குளம் வற்றும் காலங்களில் ஊர்மக்கள் கூடி சேலை, வலை போன்றவற்றை வைத்து குளத்தை அரித்து மீன் பிடிப்பதுண்டு. பிடித்த மீன்களை விற்பனைக்கோ வீட்டுச்சமையலுக்கோ கொண்டு செல்வர். உயர் ரக மீன்களை தத்தம் கேணிகளில் விட்டு, குளம் செழித்திராத காலங்களில் அவற்றை பிடித்து உண்பதுண்டு. எனினும், கேணி மீன், கடல் மீனை காட்டிலும் குளத்து மீன் சுத்தமானதாகவும் சுவையானதாகவும் கருதப்படுகிறது. பெரிய குளங்களின் மீன்களை பிடிக்க குத்தகை விடப்படுவதும் உண்டு.
நற்கீரன், seriousஆன விதயங்களைத் தாண்டி ஆவணப்படுத்தப்பட வேண்டிய அருமையான தலைப்பு ஒன்றைத் துவக்கி வைத்ததற்கு மிகவும் நன்றி. பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்ததை பேச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளேன். தேவையான இடங்களில் தகவல்களை கட்டுரையில் இடுவதை நீங்கள் கவனிப்பீர்கள் தானே?--ரவி 08:56, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இது விரிவாக வளர்த்து எடுக்கப்படக்கூடியதும், வளர்த்தெடுக்கப்பட வேண்டியதுமான ஒரு கட்டுரை. எங்களுடைய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களிலொன்றான உணவு வகைகள் பற்றித் தமிழில் மிகக் குறைவான தகவல்களே மக்களுக்குக் கிடைக்கக்கூடியவையாக உள்ளன. தமிழரின் உணவு என்பது பற்றிப் பல கோணங்களிலுமிருந்து பார்த்துக் கட்டுரைகள் உருவாக்கப்படலாம். சமைத்தல் என்று ஒரு சொல்லில் சொல்லிவிடுகிறோம். ஆனால் உணவு சமைத்தல் என்பது, ஊறவைத்தல் (ஊறுகாய்), காயவைத்தல் (வத்தல்), இடித்தல், குழைத்தல், வறுத்தல், அவித்தல், பொரித்தல், துவைத்தல், அரைத்தல், சுடுதல், காய்ச்சுதல், கடைதல், கலத்தல், கரைத்தல் எனப் பல வகையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, தோசை சுடுகிறோம், இட்டிலி அவிக்கிறோம், வறை வறுக்கிறோம், வடை பொரிக்கிறோம். இவ்வாறாகச் சமையல் பக்குவமுறைகள் பல தமிழர் சமையலில் இருக்கின்றன. இவைபற்றியும் இக்கட்டுரையில் மேலோட்டமாகக் குறிப்பிடலாம். விரிவாக வேறு தனிக்கட்டுரையும் எழுதமுடியும். பண்டைத் தமிழர் உணவு பற்றி, மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் புத்தகம் ஒன்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது. நான் பார்க்கவில்லை. தமிழர் உணவுப் பழக்கத்தின் வரலாறும் ஒரு சுவாரசியமான விடயம்தான். அது போல தமிழர் மத்தியிலேயே உணவுப் பழக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் இட்டிலி, தோசை என்பன அன்றாட உணவுகள், இலங்கையில் அவற்றின் இடத்தை இடியப்பம், பிட்டு என்பன பிடித்துள்ளன. பயத்தம் பணியாரம் என்பது யாழ்ப்பாணத்தவருக்குப் பிடித்தமான ஒரு சிற்றுண்டி. யாழ்ப்பாணத்தில் ஏதாவது கலியாணம், பண்டிகை, திருவிழா போன்றவற்றுக்காகப் பலகாரங்கள் செய்யத் தொடங்கும்போது பால்ரொட்டி என்றொரு சிற்றுண்டி செய்வார்கள். இது தமிழ்நாட்டில் உள்ளதோ தெரியவில்லை.

பனை ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்து உணவு பழக்கத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இப்பொழுது அதன் செல்வாக்குப் பெரிதும் குறைந்துவிட்டது. இந்தப் பனைக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவிலுள்ள மொத்தப் பனைகளில் 60% பனைகள் தமிழ் நாட்டிலேயே உள்ளன. இலங்கையில் இருக்கும் பனைகளில் 95% க்கும் மேல் தமிழர் பகுதிகளிலேயே இருக்கும் என நினைக்கிறேன். எனவே முற்காலத்தில் பனை தமிழர் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பது தவறாகாது. பாரிமகளிர் திருமணத்துக்கு வந்த சேர, சோழ, பாண்டியர் பனம்பழம் தின்றது தொடர்பான ஔவையாரின் பாடல் நாம் அறிந்ததே. ஒருகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பனாட்டு போன்ற பனம் பண்டங்கள் சாக்கிலேட் போன்ற மேனாட்டு உணவுவகைகளால் செல்வாக்கிழந்து வந்ததைக் குறித்து,

திங்கட்குடையுடைச் சேரனும்சோழனும் தென்னவனும்ஔவை சொற்படியே
மங்கலமாய்ண்ட தெய்வப்பனம்பழம் மரியாதையற்றதோ ஞானப்பெண்ணே

என்று சோமசுந்தரப் புலவர் பாடியது, யாழ்ப்பாணத்திலே தேசிய உணர்வின் சின்னமாகப் பனை திகழ்ந்ததையும் காட்டுகிறது. Mayooranathan 14:32, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply


ரவியும் மயூரநாதனும் நல்ல தகவல்களைத் தந்துள்ளனர். (ரவி சிறுவயதில் நான் கையாண்ட மீன்பிடி முறைகளை மீண்டும் நினைவூட்டியுள்ளார்!)
கடல் மீன்கள் கடலோர மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் கூடுதலாகக் கிடைப்பதில்லை என்பதாலும், அவற்றின் விலை கோழிக்கறியைக் காட்டிலும் பல மடங்குள்ளதாலும் அவற்றின் நுகர்வு குறைவு. கடலிலிருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களில் கருவாடு உட்கொள்ளப்படுகிறது. கெண்டை, கெளுத்தி, குறவை, அயிரை போன்ற நன்னீர் மீன்கள் ஓரளவு உண்ணப்படுகின்றன. (முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன்-ராதா மீன்பிடித்து சமைத்து உண்பதைப் பார்த்தவர்கள் அறியலாம்!)
பனை பொருட்களும் கடலோரப் பகுதிகளில் வெகுவாக நுகரப்படுகின்றன. நுங்கும், பதனீரும் தமிழகம் முழுவதும் கோடையில் உட்கொள்ளப்படுகின்றன.
கருப்பட்டி கடலோர மாவட்டங்களில் சுக்கு நீர், பஞ்சாமிர்தம், முதலியவற்றிற்கு இனிப்பூட்டப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி மிட்டாய் எங்கள் ஊரில் இன்றும் மிட்டாய்க்கடைகளில் பெரிதும் விற்கப்படுகிறது. இங்கு பிறந்து வெளியூரில் பணிபுரிபவர்கள் இங்கிருந்து கருப்பட்டி வாங்கிச் செல்வதையும் காணலாம்.
பனங்கிழங்கு பொதுவாக பொங்கல் பண்டிகையின்போது பெரிதும் விற்பனை செய்யப்படுகிறது. ரவி குறிப்பிட்டதுபோல் சிற்றுண்டியாகவே பெரிதும் உண்ணப்படுகிறது.
திருச்செந்தூர் பகுதியில் சில்லுக்கருப்பட்டி என்றழைக்கப்படும் கருப்பட்டி அல்லது பனைநீர், சுக்கு, முதலியன சேர்த்து செய்யப்பட்ட பண்டம் பனையோலைப் பெட்டிகளில் அடைக்கப்பெற்று விற்பனை செய்யப்படுகிறது. வெளியூராரும் விரும்பி வாங்குகின்றனர்.
தற்போது காதி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனைபொருட்கள் வாரியம் ஆகியவை இப்பொருட்களைத் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யத் துவங்கிய நிலையில் இவை பரவலாக நுகரப்படப் படுகின்றன.
இறைச்சியைப் பொருத்தவரை காட்டெலி உட்பட பல்வேறு விலங்குகளை உண்பவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கோழிக்கறியே கூடுதலாக உட்கொள்ளப்படுகிறது. ஆட்டு இறைச்சியும் விலை காரணமாக சற்று குறைந்த அளவில் உண்ணப்படுகிறது. (ஆட்டு மூளையின் சுவையே தனி. [சப்புக் கொட்டுகிறேன்]) பன்றி இறைச்சி எங்கள் ஊரில் ஓரளவு உண்ணப்படுகிறது. அது மூல நோய் குணமாக உதவுகிறது என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். -- Sundar \பேச்சு 08:51, 18 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சில பதிற்குறிகள் தொகு

ரவி தொகு

ரவி, பல நல்ல தகவல்களை சுவையுடன் பகிர்ந்துள்ளீர்கள். சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்த போது கண்ட காட்சிகள், வயல்கள், வளவுகள், தோட்டங்கள், கடற்கரைகள் நினைவில் வந்து போகின்றன. எனக்கே இப்படி நினைவுகள் இருக்கும் பொழுது சுமார் 30-40 வருடங்கள் அம்மண்ணுடன் வாழ்ந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்று சற்று நினைத்து பார்க்கின்றேன்.


வயலில் மீன்கள் நிற்பது வழக்கம். மழை பெய்து பின்னர் காய்ந்த போது நிலமெங்கும் சிறு நண்டுகள் செத்து கிடப்பது வழமை. வாழை மரத்தை இரண்டு பக்கமும் வைத்து கட்டுமரம் கட்டி விளையாடிதாகவும் ஒரு நினைவு. சிறுவர்கள் மத்தியில் மரங்களில் ஏறுவது ஒரு போட்டி. வேகமாக, உயரமாக ஏற வேண்டும். நாவல் மரத்தில் ஏறி கிளைகளை உலிக்கி பழங்களை புறக்கி கழுவி உண்டதாக ஒரு நினைவு. நெல்லிக்காய் பறிக்கப்போய் இரத்த எறும்புகள்/அட்டைகள்? கடி வாங்கிய அனுபவம். (இப்படியான செயல்பாடுகளில் எப்படி சாதிய கட்டமைப்பு, சமூக அந்தஸ்துக்கள் பேணப்படுகின்றன என்பது வேறு ஒரு கட்டுரைக்கு. குறிப்பாக யாருடன் சேருவது, யார் சேருவார்கள், இது எது ஏன் செய்யக்கூடாது என்று வெற்று மனங்களில் ஏற்றப்படும் வேற்றுப்பாட்டு விதை அல்லது கட்டுப்பாடுகள் சாதியின் நிலைநிறுத்தலுக்கு மிகவும் பயன்படுகின்றது. பல விடயங்களை வெளிப்படையாக் சொன்னால் இங்கே த.வி. பொருந்தாது என்று நினைக்கின்றேன்.)


கிளிநொச்சியில் வாழ்ந்த போது ஒரு சில நாட்கள் காட்டுக்கு சென்ற நினைவு. அப்போது அது பெரும்பாலும் காடுதான். எப்பொழுதும் வீட்டை அண்மித்து பல மிருகங்கள் நிக்கும். குறிப்பாக, மாமரத்தில் குரங்குகள் நீக்கும்.


தமிழ் நாட்டில் உள்புற கிராமங்களில் மீனுக்கு தட்டுப்பாடு என்றால், கடற்கரையே இல்லாத மாநிலங்களில்? நீங்கள் அதை சுட்டிகாட்டியது நன்று. தமிழீழத்தில் எல்லா இடங்களிலும் மீன் தாராளமாக கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். குறிப்பாக தமிழர் வாழ் பிரதேசங்களில் எல்லாம். தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையை கொண்டுள்ளது. இலங்கையில் வேட்டை சென்று உண்ணுவதில் எனக்கு அனுபவம் மட்டு. ஆனால் காடு சார் வன்னி பகுதியில் அப்படியிருக்கலாம் என்பது என் அனுமானம்.

ஈழத்தில் பல வீடுகளில் வீட்டுத்தோட்டம் இருக்கும். பலதரப்பட்ட மரக்கறிகள், கீரைகள், கரும்பு, பழமரங்கள் போன்றவை அங்கு எப்பொழுது இருக்கும். ஈழத்தில் மரங்களோடும் இயற்கையோடும் மக்கள் நன்கு வாழ பழகி கொண்டவர்கள். இப்பொழுது எப்படியோ தெரியாது. எல்லாம் நகர (நரக !!!) மயம்!!

இலங்கையில் பனையியல் என்பது வளர்ச்சியடைந்த ஒரு கல்வித்துறை. பனை அதன் பயங்கள் பற்றி சீரிய அறிவு ஈழத்தமிழரிடம் உண்டு. பூரான் என்றால் பனங்கொட்டை கிழங்காக்க பத்தியில் இடும்பொழுது சிலவற்றை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கிளறி எடுத்தால் கிடைக்கும். மிக நல்ல சுவை. மேலதிக தகவல்கள் கேட்டு சொல்கின்றேன். புளுக்கொடியல் dehydrated பனங்கிழங்கு.

மயூரநாதன் தொகு

மயூரநாதன், நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பல முனைகளில் இக்கட்டுரை விரிவடைய கூடியது. அல்லது பல பிற கட்டுரைகளுடன் தொடர்புடையது. சமையல் முறைகள் (பொதுவாகவும், தமிழிருடையதும்), சமையல் உபகரணங்கள் (பராம்பரிய, தற்கால, தமிழருடைய) போன்ற தலைப்புக்களில் தனிக்கட்டுரைகள் தேவை. தமிழர் சமையல் வரலாற்றைக்கூட நுட்பமாக ஆராய முடியும். காட்டாக மிளகாய் (ஒரு வகையாக இருக்கலாம்!) ஒரு வட அமெரிக்க பயிராகும், எனவே அது தமிழர் சமையலில் 1500 பிற்பட்டே சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழர் சமையலை திராவிட சமையிலுடன், சிங்களவர் சமையலுடன் ஒப்பிட்டும் ஆயலாம். மயூரநாதன் பனை இன்னும் ஈழத்து மக்களின் சுவையில் இருப்பதாகத்தான் தெரிகின்றது. இங்கு தமிழ்க்கடையில் பனங்கிழங்கு நல்ல விலை போகின்றது.


சுந்தர் தொகு

உணவாக உண்ணப்படும், மீன்களை பற்றியும் பிற உணவுவகைகளைப் பற்றியும் மேலும் தகவல்களை ஆவணப்படுத்தினால் (பட்டியலிடல்/அடையாளம் காணல், படம், குறிப்பு, பிற மேற்கோள்கள்) நன்று. நம்மில் பலருக்கு இன்னும் எதோ ஒரு கிராமத்து தொடர்பு உண்டு. ஆனால் அடுத்துவரும் தலைமுறைக்கு (தங்கை!!) அது அறவே இல்லை. உணவு Super market இருந்து வருகின்றது. கோழி packet இல் வருகின்றது. உணவுக்காக மனிதன் செய்யும் உழைப்பை பற்றியும், அதில் இயற்கையுடன் எமக்குள்ள் தொடர்பை பற்றியும் அவர்களுக்கு அறிய வாய்ப்புக்கள் குறைவு. குறிப்பாக மேலைநாடுகளில் இதுதான் கதி. ஆனால், இதனால் ஒரு வித தேடலும் ஏற்படுகின்றது. அந்த தேடல்கள் சிலரை நாட்டுப்புற வாழ்வுக்கு இட்டு செல்கின்றது...இதைப்பற்றி ஒரு தனிக்கட்டுரை எழுத வேண்டும்,..பார்க்கலாம்.


சோறு கறி http://en.wikipedia.org/wiki/Rice_and_curry என்று ஒரு கட்டுரையை ஆரம்பிகலாம் என்று இருக்கின்றேன். சேர்த்து பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதால் அதை ஒரு சொல்லாக பார்கலாமா!! --Natkeeran 01:35, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மனிக்கவும் நற்கீரன். தங்கள் எண்ணத்தை முதலில் புரியாமல் தனித்தனியாகப் பிரித்து விட்டேன். தாராளமாகத் தொடங்குங்கள்.--Kanags 02:01, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply
சோறும் கறியும் என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம். சோறு கறி என்பது எங்கோ இடிக்கிறது ;)--ரவி 08:18, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மேலும் சில குறிப்புகள் தொகு

  • கிராம நகர வேறுபாடுகள்
  • தமிழர்கள் எப்படி உணவை பெறுகின்றார்கள்? எப்படிப்பட்ட உணவுவகைகள் இலகுவில் கிடைக்கின்றன?
  • உணவு பழக்கவழங்களில் சாதிய பிரதிபலிப்புகள்
  • சிரட்டையில் உணவு உண்பது, சில்வரில் உணவு உண்பது
  • சமபந்தி, சமபோசணம்
  • யார் யார் வீட்டில் உணவு உண்ணலாம்...
  • கருவாடு, அப்பளம், கட்லட், பகோடா, பஜ்ஜி,
  • பால், தயிர், மோர், பழச்சாறு, கள்ளு, தேன், கோப்பி, தேநீர், தண்ணீர், இள்நீர், நொன்கு,
  • கர்ப்பணிப் பெண்கள், பூப்யெதிய மாதர், வருத்தமுற்றோர் - விசேட உணவு கவனிப்பு
  • முதுமையில் பலர் மாமிசம் தவிர்ப்பது வழக்கம்
  • சாப்பிட்ட பின்னர் கோப்பை கழுவ விடாமை
  • அனைவரும் சாப்பிட்ட பின்னர் எழுதல்

விரதம் தொகு

  • விரத உணவை காகத்துக்கு பகிர்ந்து உண்பது; பகிர்ந்து சாப்பிடுதல்; நஞ்சுணர்ந்து சாப்பிடுதல்
  • கடவுளுக்கு உணவு படைத்தல்
  • தண்ணீர் தெளித்து உண்ண தொடங்குதல்/கடவுளை நினைத்தல்

விருந்த்தோம்பல் தொகு

  • விருந்தினாரக செல்கையில் உணவு வாங்கி செல்வது
  • விருந்தினருக்கு போனவுடன் எதாவது குடிக்கவும், உண்ணவும் தருதல்

வெத்திலை போடல் தொகு

  • தினசரி ?
  • கொண்டாட்டங்களில்
  • பீடா

வாழ்க்கை நிகழ்வுகள் தொகு

  • பிறப்பு பிற நல்நிகழ்வுகள் - இனிப்பு வழங்கல்
  • பல்லு ? - கொழுக்கட்டடை கொட்டல்
  • கல்யாணம் - உணவு தட்டு மாற்றல்
  • சாவு - 8 ம் நாள் - விரும்பிய உணவு படைத்தல்
  • சாவு - 31 ம் நாள் - உணவு


தமிழரிடையே வழங்கும் உணவு சார் கதையாடல்கள் தொகு

  • வள்ளுவர் ஊசியும் தண்ணீரும் உணவு உட்கொள்ளும் பொழுது எப்பொழுதும் அருகில் வைத்திருப்பாராம், ஏன் என்றால் மனைவி பரிமாறும் பொழுது சோறு தவறி நிலத்தில் விழுந்தால் கழுவி உண்பதற்கு. அவருடைய மனைவி ஒருநாளும் சோறு கீழே விழும்படி பகிரவில்லையாம்.

(விரியும்)

குறிப்புகள், ஆலோசனைகள் தொகு

தமிழர் சமையல் என்று தலைப்பு இருந்தாலும், உணவு உண்ணும் முறைகள் பற்றியே கட்டுரை தகவல்கள் உள்ளன. இருந்தாலும் பாதகமில்லை. தகுந்த கட்டுரைத் தலைப்புக்கு உள்ளடக்கங்களை பின்னர் மாற்றாலாம். உணவுண்ணும் வழகத்தில் எது வீட்டில் கிடைக்கும், கடையில் கிடைக்கும் என்பதும், தமிழகத்தில் என்ன உணவுப் பழக்கம் என்பதும் தமீழீழத்தில் என்ன என்பதும், கிராமத்தில் என்ன நகரத்தில் என்ன என்பதும் நிச்சயம் தெளிவுபடுத்த வேண்டும். தோசை, இட்லி ஆகியவற்றை அன்றாட உணவுகள் போல் பொதுமைப்படுத்த முடியாது. grinder, mixi இல்லாத தமிழர், கிராமத்தினர் வீடுகளில் பொங்கல், தீபாவளிக்கு மட்டுமே இவற்றை காண்பதும் உண்டு (இப்போக்கு மாறி வருகிறது என்றாலும்). 10 வயது வரை நகரத்தில் இருந்து விட்டு அதற்கு பிறகு கிராமத்துக்கு வந்து இந்த தீபாவளிக்கு என்ன சிறப்பு இனிப்பு என்று கேட்ட போது, இட்லி என்று பூரிப்பாக சொன்னார்கள் என் அபத்தா..இன்னும் அப்படி நிறைய அபத்தாக்கள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்..மூன்று வேளை சலிக்காமல் சோறும் கறியும் மட்டும் உண்ணும் பலர் இருக்கிறார்கள். கிராமங்களில், சிறப்பாக ஏதாவது செய்தால் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இப்படி பலருக்கும் சமைத்துப் போட்டு மாள முடியாது என்று சிறப்பு உணவுகள் சமைக்காமல் காலத்ததை ஓட்டுவோரும் உண்டு. இது போன்ற அன்றாட வாழ்க்கை சார் குறிப்புகள் கட்டுரைப் பக்கத்தில் சேர்க்கப்படாமல் போனாலும் கூட, இவ்வாறான வழக்கங்கள் உள்ளன என்பதற்கு சான்றாக, இது போன்ற குறிப்புகளை பேச்சுப் பக்கத்தில் இடுவது அவசியமாகிறது.--ரவி 19:49, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ரவி, என்னிடமும் மேலதிக குறிப்புகளும் தகவல்களும் உள்ளன. விரைவில் இடுகின்றேன். உணவுக்கு வழியின்றி பலர் இன்னும் இருக்கும் சமூகத்தை சார்ந்தவர்கள் நாம், அந்தக் குறிப்பும் இங்கு இட வேண்டும். --Natkeeran 19:55, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

படிமங்கள் தொகுப்பு தொகு

சுளகு தொகு

புடைப்பதற்கு பயன்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சுளகு என்பது முறமா?--சிவகுமார் \பேச்சு 14:12, 20 பெப்ரவரி 2008 (UTC)

ஆமா. எங்க ஊர்ல சொலவு என்று பேச்சுத் தமிழ்ல சொல்வாங்க--ரவி 15:44, 20 பெப்ரவரி 2008 (UTC)
ஆம். எங்க ஊரிலயும்தான். -- சுந்தர் \பேச்சு 15:45, 20 பெப்ரவரி 2008 (UTC)
தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் ஒவ்வொரு ஊர் வழக்குத் தெரியல பாருங்க இணையமும் விக்கிப்பீடியாவும் வரும் வரைக்கும்.--சிவகுமார் \பேச்சு 15:49, 20 பெப்ரவரி 2008 (UTC)

சிவா, சரியான ஒரு சிற்றூரில் வளர்ந்ததால், சில நல்ல தமிழ்ச் சொற்களை அறிய முடிந்தது. நகரத்தில் வளர்ந்திருந்தா இந்த வாய்ப்பு கிடைச்சிருக்காது. சுந்தரின் ஊர், எங்க ஊர் எல்லாம் தென் தமிழகப் பகுதிகள்ல வரலாம். அதனால உங்க ஊர்ப்பகுதிகள்ல இருக்க சொற்கள்ல இருந்து வேறுபடலாம். ஒவ்வொரு ஊர்லயும் என்னென்ன சொற்கள் வழங்குது போன்ற தரவுகள் கண்டிப்பா ஆயப்பட்டு புத்தக வடிவங்கள்ல இருக்கும். அதை இணையத்துக்கு எப்படி கொண்டு வரதுன்னு பார்க்கணும். --ரவி 16:10, 20 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_சமையல்&oldid=286068" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழர் சமையல்" page.