பேச்சு:தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

இதுவொரு செய்தியாக மட்டும் இருப்பதால் விக்கியில் கட்டுரையாக இருக்கலாமா? நெகிழி மாசு(en:Plastic pollution) என்ற தலைப்பிற்கு ஒரு செய்தியாக மாற்றலாம் அல்லது தடை உருவான வரலாற்றுடன் சம்பவமாக விவரித்தால் கலைக்களஞ்சியக் கட்டுரையாகும் என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 03:29, 1 சனவரி 2019 (UTC)Reply

கருத்திற்கு நன்றி. கூடுதலாக தகவல்கள் சேர்க்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளத்தக்க கலைக்களஞ்சியக் கட்டுரையாக உருவாக்கிட முயற்சி செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:37, 1 சனவரி 2019 (UTC)Reply
தனிக் கட்டுரையாக இருப்பதற்குரிய குறிப்பிடு தகைமை எதுவும் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 07:28, 12 சனவரி 2019 (UTC)Reply

ஆம். போதிய தகவல்கள் இல்லாததாலும் இதுபோல ஒவ்வொரு தடையாணைக்கும் கட்டுரை எழுத இயலாது என்பதாலும் இக்கட்டுரையையும் நெகிழியின் தீமைகள் கட்டுரையையும் சேர்த்து மையத் தலைப்பில் நெகிழி மாசு(en:Plastic pollution) என்ற கட்டுரையாக மாற்றலாம். கவனிக்க @Selvasivagurunathan m:-நீச்சல்காரன் (பேச்சு) 08:56, 12 சனவரி 2019 (UTC)Reply

@Fahimrazick: வணக்கம் பாஹிம்! என்ன தகுதி இல்லை என குறிப்பிட இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 12 சனவரி 2019 (UTC)Reply
@Selvasivagurunathan m: இப்போதும் இதற்குத் தனிக் கட்டுரையாக இருப்பதற்கான குறிப்பிடு தகைமை கிடையாது. நீங்கள் ஒரு பட்டியலைக் கொடுத்து இப்பொருட்கள் தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்கிறீர்கள். இதைத் தனிக் கட்டுரையாக ஏற்க வேண்டுமென்கிறீர்கள். பின்னர், இலங்கையில், இந்தோனேசியாவின் ஒவ்வொரு நகரத்திலும் (இலங்கை, இந்தியா போலன்றி இங்கு நகர ஆட்புலங்களுக்குக் கூடிய அதிகாரம் உள்ளது), சிங்கப்பூரில், மலேசியாவில், இன்னுமுள்ள ஏனைய பகுதிகளில் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு இவ்விப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பட்டியல் சேர்ப்பது கலைக்களஞ்சியமாகாது. கலைக்களஞ்சியம் என்பது கண்ட கண்ட செய்திகளையெல்லாம் வரலாறு என்று கூறி ஆவணப்படுத்தும் ஆவணக் காப்பகமல்ல என்பதே என் கருத்து. தனிக் கட்டுரையாக இருப்பதானால் அதற்குத் தனித்துவம் இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டமை சர்வதேச மட்டத்தில், அல்லது இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்தால் தனிக் கட்டுரையாக இருப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. இது ஏனைய தடைகளைப் போன்று வெறுமனே ஒரு தடையாணை. ஏற்கனவே இத்தகைய தடையாணைகள் இன்னும் பல நாடுகளிலும் ஆட்புலங்களிலும் இருக்கின்றன. அவை தனித்துவம் பெற்றாலேயன்றி தனிக் கட்டுரையாக இருப்பதற்கு எத்தகுதியும் கிடையாது. எனவே, இப்பக்கத்தை பொருத்தமான வேறொரு கட்டுரையில் இணைக்க வேண்டும் அல்லது நீக்கி விட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:08, 13 சனவரி 2019 (UTC)Reply
@Neechalkaran: வணக்கம் நீச்சல்காரன்! என் தரப்பு வாதங்கள்:-
1. //போதிய தகவல்கள் இல்லாததாலும்// - உங்களின் கருத்தினை ஏற்று, மேலும் விரிவுபடுத்துகிறேன். ஒரு பயனராக இது எனது கடமை. கால இலக்கு: 13 சனவரி 2019 (23:00 ஜி. எம். டி). அதற்குப் பிறகு இங்கு தெரிவிக்கிறேன் (notice). அதன் பிறகு உங்களின் கருத்தினை மீண்டும் தெரிவிக்கலாம்.
2. //ஒவ்வொரு தடையாணைக்கும் கட்டுரை எழுத இயலாது என்பதாலும்// - எவ்வகையான தடையாணைக்கு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ளுங்கள். இது வெறும் ஆணை மட்டுமல்ல; வணிகம் பாதிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு விசயம் எவ்வாறு அறிவிக்கப்பட்டது / நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதனை விளக்கும் ஒரு கட்டுரை. நடைமுறைப்படுத்தப்பட்டாலும், திரும்பப் பெறப்பட்டாலும் வரலாற்றில் இருக்கவேண்டிய ஒரு ஆவணம்தானே இது. நீங்கள் சனவரி 1 அன்று கருத்திட்ட பிறகு, கட்டுரையில் பின்னணி சேர்த்தேன். கட்டுரையின் வடிவமைப்பையும் மாற்றினேன்.
3. மாநிலம் முழுவதிற்குமான நெகிழித் தடை இந்தியாவில் சிக்கிம், மகாராட்டிர, கர்நாடக மாநிலங்கள் என இப்போது தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரை என்றே கருதுகிறேன். எனக்கு மராத்தியமும் கன்னடமும் தெரியாததால், அந்த மொழிகளுக்கான விக்கிப்பீடியாவில் கட்டுரை ஏதேனும் எழுதி இருக்கிறார்களா என்பதனை அறிய இயலவில்லை.
4. ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Phase-out of lightweight plastic bags in Australia எனும் கட்டுரை இருக்கும்போது தமிழ் விக்கிப்பீடியாவில் அந்த மொழியோடு முதன்மைத் தொடர்பினைக் கொண்டுள்ள ஒரு மாநிலம் குறித்த கட்டுரைக்கு ஏன் குறிப்பிடத்தக்கமை இல்லை?
5. உலகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று, Use and throw நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுகள். அதற்காக விக்கிப்பீடியாவை ஒரு பிரச்சாரத் தளமாகக் கருதி இந்தக் கட்டுரையை நான் இங்கு எழுதவில்லை. சார்பற்ற முறையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போதும் குறிப்பிடத்தக்கமை குறித்து பலமுறை யோசித்தே தொடங்குகிறேன்.
6. 'இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படலாம் அல்லது விலக்கிக்கொள்ளப்படலாம். அவ்வாறு இருக்கையில் இது ஒரு செய்திக் கட்டுரை' என நீங்கள் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் இது ஆவணப்படுத்தப்பட வேண்டியது என்பது எனது கருத்து. இக்கட்டுரை தொடர்ந்து இற்றைப்படுத்தப்படக்கூடியது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்தக் கட்டுரையை மேம்படுத்த இப்போது மீண்டும் என்னால் இயன்றவற்றை செய்வேன். அதன்பிறகு விக்கி சமூகத்தின் முடிவு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:01, 12 சனவரி 2019 (UTC)Reply
எனக்குத் தெரிந்து கொள்கைப்படி Depth, Diversityயும் இருந்தாலும் Duration இல்லாமல் இருந்தது. ஒரு முறை நடந்த தடை செய்தியை மட்டுமே விவரிப்பதாக இருந்தது. இதை முன்மாதிரியாகக் கொண்டு மணல் சுரங்கத்தடை, மணல் இறக்குமதிக்குத் தடை, திரைப்படத் தடை, பட்டாசுத் தடை, ஸ்டெர்லைட் தடை, இ- சிகரெட்டுகளுக்கு தடை என ஆண்டுக்கு ஆறு தடை ஆணைகள் வெளிவரும் சூழலில் அத்தனையையும் கட்டுரையாக ஏற்கமுடியாதென எண்ணினேன். நெகிழி மாசு பற்றிய ஒரு நிறைவான கட்டுரை இங்கே இல்லை என்பதால் இதை மாற்ற பரிந்துரைத்தேன். இருந்தும் நீங்கள் உறுதியாக மேம்படுத்த முனைவதால் என் பங்கிற்கு மேம்படுத்தியுள்ளேன்-நீச்சல்காரன் (பேச்சு) 21:13, 12 சனவரி 2019 (UTC)Reply
@Neechalkaran: கட்டுரையை சிறப்பான முறையில் சீரமைத்து, விரிவாக்கம் செய்துள்ளீர்கள். எனது உளமார்ந்த நன்றிகள். தந்த உறுதிமொழியின்படி குறிப்பிட்ட காலத்தில் கட்டுரையை என்னால் முடிக்க இயலவில்லை. தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறேன். இதனை முடித்த பிறகு நெகிழி மாசு கட்டுரையை மேம்படுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 14 சனவரி 2019 (UTC)Reply
Return to "தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் மீதான தடை" page.