பேச்சு:தற்கொலைத் தாக்குதல்

இந்தக் கட்டுரை தற்கொலைத் தாக்குதல் என்றே அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். தற்கொலை விடயத்தை விபரிக்கிறது. தற்கொடை என்ற சொல்லுக்கு ஒரு வித சார்பு இருக்கிறது. --Natkeeran 18:59, 22 ஏப்ரல் 2008 (UTC) தற்கொலைத் தாக்குதல் என வரவேண்டும். தற்கொடை தாக்குதல் என்பது தற்கொலைத் தாக்குதல்களின் ஒரு உட்பிரிவாகக் கொள்ளலாம் (தற்கொலைத் தாக்குதல்காரர்கள் தாமாகவே முன்வரும் போது) தட்கொடைத்தாக்குதல் POV போல உள்ளது.--Terrance \பேச்சு 01:23, 23 ஏப்ரல் 2008 (UTC)

இந்தக் கட்டுரையில் யுத்த களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்களாக பயன்படும் தமிழ் சொற்களையே குறிக்கப்பட்டுள்ளது. அதாவது பொருள் நிறைந்த ஒரு தமிழ் சொல். தவிர யுத்தத்தைப் பற்றியோ, சார்பு நிலைப்பற்றியோ அல்ல.

இதுப் போன்ற தாக்குதல்களை மேற்கொள்ளும் அரச தரப்பானாலும் "தற்கொடைத் தாக்குதல்" என்று தானே குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டு யப்பான் யுத்தத்தின் போது. எதிரிக்கு எதிரி எதிரான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது இயல்பானதல்லவா?

அதையும் (குறிப்பாக தற்கொலையை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்க. HK Arun

மேலும் ஒரு விளக்கம்

விரக்தி மற்றும் வேறு காரணங்களினால் தன்னை தானே கொல்லும் "தற்கொலை" வேறு. கழுத்தில் கயிறை மாட்டி, நஞ்சருந்தி, மாடிகளில் இருந்து குதித்து, தொடரூந்து வண்டியில் தலையை வைத்து என இன்னும் எத்தனையோ விதங்களில் தன்னைத் தானே கொன்றுக்கொள்ளும் செயலுக்கு "தற்கொலை" எனும் வார்த்தை பொருத்தமானது.

தன் உயிரை தானே ஒருவன் விருப்புடன் தன் நாட்டிற்காகவோ, விடுதலைக்காகவோ கொடையாக அர்ப்பனிப்பதை "தற்கொலை" என்று குறிப்பிடுவது பொருத்தமானதல்ல. (அது விடுதலை அமைப்புகளாக இருக்கட்டும், இலங்கை, இந்திய மற்றும் வேறு நாடுகளாக இருக்கட்டும்) பொருள் நிறைந்த ஒரு போர்க்கள தமிழ் சொல்லாகவே "தற்கொடைத் தாக்குதல்" எனும் சொல் இருக்கிறது.



தற்கொலைத் தாக்குதல் என்றே பெயர் மாற்றப்பட வேண்டும். காரணம் - 1. விடுதலைப் போர் அல்லாத பயங்கரவாதச் சூழல்களிலும் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. 2. ஒரு பயங்கரவாதி கூட தான் கொண்ட கொள்கைக்காக தன் உயிரைக் கொடையாகக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், அவர் முழு மனத் தெளிவுடன் தானாக இந்த முடிவை மேற்கொண்டார் என்று 100% எல்லா இயக்கங்களுக்கும் உறுதி அளிக்க இயலாது. மன, உடல் நலம் குன்றியவர்களை இத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டப்படுவதை கவனிக்க வேண்டும் (குற்றச்சாட்டு உண்மையா என்பது வேறு விதயம். இத்தகைய தாக்குதல்களுக்கு வழமையை விடக் கூடுதல் மன உறுதி, திறன் தேவை என்று எதிர்த்தரப்பில் வாதம் வைக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது). தீவிர வாத இயக்கங்கள் தங்கள் உறுப்பினர்களை மூளைச் சலவை செய்து இத்தகைய தாக்குதல்களுக்குத் தயார் செய்யக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்கொடைத் தாக்குதல் போன்ற சொற்கள் ஒரு நாட்டின் விடுதலைப் போர்ச் சூழலில் அத்தகைய போராளிகளுக்கு உரிய மரியாதை தரும் பொருட்டு உருவாக்கப்படும் சொற்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஈழத்தில் புழங்கும் இத்தகைய சொற்களை குறித்த கட்டுரைகளில் ஒரு பகுதியில் குறிப்பிடலாம். ஆனால், மொத்தக்கட்டுரையின் தலைப்புகளையும் இப்படி வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.--ரவி 17:12, 23 ஏப்ரல் 2008 (UTC)

Return to "தற்கொலைத் தாக்குதல்" page.