பேச்சு:தாலந்துகள் உவமை
டெரென்ஸ், இதிலுள்ள சில சொல்லாட்சிகள் புரியவில்லை. தாலந்து என்றால் என்ன? எடுத்துக்கபடும் என்பது எடுக்கப்படும் அல்லது எடுத்துக்கொள்ளப்படும் என்னும் பொருளில் உள்ளதா? மொழிநடை, ஏதோ தமிழே தெரியாத ஒருவர் தமிழில் விவிலியக் கருத்துக்களையும், கதைகளையும் சொலவ்து போல உணர்கிறேன். என் உணர்வுகள் என் கிறிஸ்தவ உரைநடையை போதிய அளவு அறியாமையினால் இருக்கலாம். பிற பயனர்களையும் கேட்டு, மொழிநடையை மாற்ற இயலுமா என சிந்திக்க வேண்டுகிறேன். நானறிந்த கிறிஸ்தவ, இசுலாமிய உரைநடைகள் நல்ல தமிழில் இருந்தன. வேறு யாரும் தற்கால கிறிஸ்தவ மொழிநடை அறிந்தவர்கள் இருந்தால் கருத்துக்கள் தெரிவிக்கவும்.--C.R.Selvakumar 23:03, 10 ஜூலை 2006 (UTC)செல்வா
செல்வா,மாற்ற்ங்கள் செய்துள்ளேன் பார்க்கவும். தாலாந்து பற்றி ஒரு பத்தியை சேர்த்துள்ளேன் இது தாலந்து என்ற சொல்லை விளக்கும் என நினைக்கிறேன்.
கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு பற்றி ஒரு கருத்து. பொதுவாக கத்தோலிக்க மொழிபெயர்ப்புகள் தற்கால தமிழில் உள்ளன அதேவேளை சீர்த்திருத்த மொழிபெயர்ப்புகள் பழந்தமிழில் உள்ளன. ஆனால் சீர்த்திருத்த சபைகளின் கருத்துப்படி (என்னோடு) கத்தோலிக்க மொழிபெயர்ப்புகள் "are too soft and varies with the original text". இது தமிழில் மட்டும் உள்ள பிரச்சினயல்ல ஆங்கிலத்திலும் இதே பிரச்சினை உள்ளது. நான் எழுதும் போது சீர்த்திருத்த சபைகளின் (KJV) விவிலியத்தை பின்பற்றுகிறேன். இதனால் இது பழந்தமிழ் வழக்கு என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் இது கிறிஸ்தவ சபைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை. இவை (உ+ம் தாலந்து) கிறிஸ்தவ கலை சொற்களாக ஏற்கப்படவேண்டுமே தவிர இவற்றை மொழிபெயர்ப்பது (உ+ம் தாலந்து=திறமை) is abtract not practicle. இது விக்கிபீடியாவின் usefilness ஐ கேள்விகுறியாக்காதா?
ஆனால் இனி என் கட்டுரைகளை மேலும் இலகு தமிழில் எழுத முயல்கிறேன். --டெரன்ஸ் 04:17, 11 ஜூலை 2006 (UTC)
- நன்றி, டெரன்ஸ். இப்பொழுது கட்டுரை படிக்க சற்று எளிதாகவும், புரிந்து கொள்ளும்படியாகவும் உள்ளது. தாலந்து என்பதன் விளக்கம் நன்றாக உள்ளது, அதே சொல்லை ஆளுவது நல்லது. சொற்பத்தில் என்பதை சிறியவற்றில் என்று மாற்றம் செய்துள்ளீர்கள். இந்த சிறிய பணியில் (பொறுப்பில், கடமையில்) என்று பொருளா? விளக்கங்களுக்கு நன்றி.--C.R.Selvakumar 09:11, 11 ஜூலை 2006 (UTC)செல்வா
ஆம்.சிறியவற்றில் என்பதை சிறிய பணியில் என மாற்றியுள்ளேன் --டெரன்ஸ் 09:34, 11 ஜூலை 2006 (UTC)
எளிய நடை
தொகுஎனக்கும் பழைய நடையில் உள்ள விவிலியம் தான் பிடிக்கும். ஆனால் இக்கட்டுரை குறுந்தட்டு திட்டத்தில் இடம் பெற உள்ளதால் புதிய விவிலிய நடையில் உள்ளடக்கத்தை எளிமைப்படுத்தி உள்ளேன். மறுப்பிருந்தால் மாற்றி விடலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:26, 19 சனவரி 2012 (UTC)