பேச்சு:துடுப்பாட்ட சொல்லியல்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

நன்றி@Selva15469:

சில சந்தேகங்கள்

1.அடி விகிதம் (strike rate) என்பதற்கு மட்டையாளர் விகிதம் எனவும், பந்துவீச்சு விகிதம் அல்லது இழப்பு விகிதம் என கூறலாமா?

2. ஆட்டமுறை முடிவு (end of an innings)-

ஆட்டப் பகுதிமுடிவு

3. இரட்டை அடி (hit the ball twice)

இரட்டையடி

4. இலவச அடி (free hit), இழப்பு அடி (hit wicket)

எனக்கு இதற்கு பொருத்தமான வார்த்தை கூறத் தெரியவில்லை. ஆனால் இந்த வார்த்தை சரியாக பொருந்தவில்லை.

5. இழப்பு முன் கால் (leg before wicket/lbw)

முன்னங்கால் இழப்பு.

@Fahimrazick, Info-farmer, and Kanags: ஆகியோர் இந்த விசயத்தில் உதவினால் சிறப்பாக இருக்கும். தலைப்பிடல் பற்றி நன்கு அறிந்தவர்களில் எனக்கு தெர்ர்ந்தவர்கள் இவர்கள். நன்றிஸ்ரீ (✉) 15:46, 5 திசம்பர் 2019 (UTC)Reply

@ஞா. ஸ்ரீதர்:,
1. strike rate- திறன் விகிதம் (மட்டையாளர் அல்லது பந்துவீச்சாளரின் திறனை மதிப்பிடும் முறை)
2. leg before wicket- முன்னங்கால் இடைமறிப்பு (இழப்பை விட இடைமறிப்பு பொருத்தமாக இருக்கும்)
இதுபோல் துடுப்பாட்டச் சொற்களை உருவாக்குவதில் இயன்றவரை உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் வேறு ஏதாவது சொற்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கலாம். தங்களுக்கு நன்றி. Selva15469 (பேச்சு) 02:13, 8 திசம்பர் 2019 (UTC)Reply
Wicket Keeper - இழப்புக் காப்பாளர் என்பதை விட இலக்குக் காப்பாளர் என்று அழைக்கலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 05:17, 20 சனவரி 2020 (UTC)Reply
👍 விருப்பம் Selva15469 (பேச்சு)
@கி.மூர்த்தி: இழப்புக் கவனிப்பாளர் என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற உரையாடலைக் காணவும். மேலும் இங்குள்ள சொற்களை படிப்படியாக கட்டுரையாக்க எண்ணியுள்ளோம் தங்களது மேலான கருத்துக்களைக் கூறவும் நன்றி.ஸ்ரீ (✉) 13:28, 20 சனவரி 2020 (UTC)Reply
Return to "துடுப்பாட்ட சொல்லியல்" page.