பேச்சு:துளுவம்
சொற்கள்
தொகுதுளு சொற்கள் ஆங்கிலக் கட்டுரையில் உள்ள ரோமன் எழுத்துகளில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவ சரியானதுதானா என அறியேன். துளி அறிந்தவர்கள், திருத்தி அமைக்கவும். பிறகு நல்ல அட்டவணையாய் பதிவு செய்ய வேண்டும்.--C.R.Selvakumar 17:43, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
- துளு என்பது ஒரு திராவிட மொழியாகும் ஆகும். இது கன்னட மொழியின் ஒரு திரிந்த நிலையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட புதிய மொழி ஆகும். இந்த மொழிக்கு இன்னும் சரியான எழுத்துக்கள் உருவாக்கப் படவில்லை. இது தற்போது கன்னட எழுத்துக்களையே பயன்படுத்தி வருகிறது. --−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மேற்கூறிய கருத்து பொய்யானது. இது கன்னடத்தில் இருந்து திரிந்தது இல்லை. கன்னடம், சமசுகிருதம், மலையாளத்தின் தாக்கம் உள்ளது என்றே கூறப்படுகிறது. கன்னடம், துளு இரண்டும் கன்னட எழுத்துகளிலேயே எழுதப்படுகின்றன என்பது உண்மைதான். மொழியளவில் இரண்டும் வேறு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:58, 12 செப்டம்பர் 2013 (UTC)