பேச்சு:தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு
இதில் இட்டிருக்கும் தலை பிழை!! (தெல்லிப்பளை)சரியானது!!!! பிழைகளை விக்கி நண்பர்கள் திருத்தவும்--−முன்நிற்கும் கருத்து Niwesh (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- வணக்கம் நிவேஷ், இரண்டு சொற்களுமே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. இதனால் குழப்பம். ஆனாலும், இங்குள்ள தகவலின் படி தெல்லிப்ழையே சரியானது.--Kanags \உரையாடுக 23:33, 13 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம். இதில் உள்ள எழுத்துப்பிழையையும் திருத்த வேண்டுகிறேன். --சிவம் 20:36, 26 அக்டோபர் 2012 (UTC)
- எழுத்துப்பிழை ஏதும் இல்லை. தெல்லிப்பழை சரியானதே.--Kanags \உரையாடுக 20:46, 26 அக்டோபர் 2012 (UTC)
அந்த ஊரில் பிறந்த ஒரு பயனரே பிழை என்று சொல்லுகிறார், அதற்கான ஆதாரத்தையும் இட்டுள்ளார், இதற்க்கு மேல் நான் ஒன்றும் சொல்ல முடியாது. பழை என்று நான் கேள்விப்படவில்லை, பளை,புலோப்பளை,தெல்லிப்பளை,வற்றாப்பளை, என்றுதான் வட மாகாணத்தில் பெயர்கள் உள்ளன. நன்றி. இனி உங்கள் விருப்பம்.--சிவம் 21:04, 26 அக்டோபர் 2012 (UTC)
- வரலாற்றை நாம் மறக்கவும், மறைக்கவும் கூடாது. கலாநிதி இ. பாலசுந்தரமும் இடப்பெயர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். என்னிடம் இல்லை. அவர் என்ன கூறியிருக்கிறார் எனவும் பார்க்க வேண்டும். நூலகத்தில் இருக்கலாம். ஆனாலும் நான் தந்த இணைப்பில் தகுந்த ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 21:10, 26 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் கனக்ஸ். உங்களிடம் நான் போட்டிக்கு வரவில்லை. உண்மை இதுதான், அதில் எந்த மாற்றமும் இல்லை. உதாரணம்: ஆரம்பத்தில் பூமியானது தட்டை என்றார்கள், அதன் பின் பல நூறு ஆண்டுகளுக்கு பின் உருண்டை என்றார்கள். அதன் பின், அதுவும் பிழை கோளம் என்றார்கள், இப்போ கோளமும் இல்லை தட்டையும் இல்லை உருண்டையும் இல்லை கொயட் என்கிறார்கள், இதற்க்கு நான் என்ன செய்வது?? உள்ளதைத்தான் என்னால் சொல்ல முடியும். உங்கள் விருப்பம்.--சிவம் 21:47, 26 அக்டோபர் 2012 (UTC)
கனக்ஸ் வணக்கம். நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.!!!!!! இதை நான் சொல்லவில்லை!!!! எங்கள் விக்கிப் பயனர் நக்கீரன் சொன்னது.!! எங்கள் ஊரின் பெயர் எங்களுக்கே தெரியாதென்றால், வேறு யாருக்குத்தான் தெரியும்?? --31.164.105.6 22:18, 26 அக்டோபர் 2012 (UTC)
- ஆமாம் தெல்லிப்பளை சரியானது. --88.176.98.15 22:34, 26 அக்டோபர் 2012 (UTC)
என்ன ஆதாரம் தருகிறீர்கள்? தமிழ்நெட்டில் உள்ளது தவறென்கிறீர்களா?--Kanags \உரையாடுக 09:54, 27 அக்டோபர் 2012 (UTC)
- கூகுள் படிமத் தேடலில் தெல்லிப்பளை என்று எழுதியுள்ள பதாகைகளும் சிக்குகின்றன. இவை அந்த ஊரிலேயே நிறுவனங்களைச் சேர்ந்தவை.
http://srimuthumariamman.org/images/muthumariamman.jpg
http://www.newjaffna.com/epanel/uploads/news/thumbs/1320685193098470446.jpg
ஆக, இந்த ஊரின் பெயர் இரண்டு வகையாகவும் குறிப்பிடப்படுகிறது என அறியலாம். தமிழகத்திலும் இது போன்று சில ஊர்ப்பெயர்கள் காலப்போக்கில் திரிந்து விடுகின்றன. எது சரியானது என்பதை தமிழ், வரலாறு அறிந்தவர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். காலத்தால் முந்திய ஆவணங்கள், படிமங்கள் கிடைத்தால் ஒப்பு நோக்க உதவியாக இருக்கும்.--இரவி (பேச்சு) 15:12, 27 அக்டோபர் 2012 (UTC)
- நான் முன்னர் தந்த [இணைப்பு போதுமான ஆதாரமாகவே நான் கருதுகிறேன். அத்துடன் நூலகம் தளத்தில் உள்ள பல பழைய நூல்கள அனைத்திலும் தெல்லிப்பழை என்றே எழுதப்படுகின்றன. பளை என்ற ஊரும் யாழ்ப்பாணத்தில் உண்டு. அதனுடன் குழம்பிப்போய் தெல்லிப்பழையும் தெல்லிப்பளை ஆகியதாகவே நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:31, 27 அக்டோபர் 2012 (UTC)