பேச்சு:நந்தன் நிலெக்கணி

இப்பக்கத்தில் Unique Identification Authority எனபதற்கு வேறில்லா அடையாளவெண் ஆணையம் என மொழிபெயர்த்துள்ளேன். Unique என்பதற்கு தனித்த அல்லது தனித்துவ என இடலாமெனிலும் இந்த சூழலில் வேறில்லா - ஒன்றே ஒன்றுதான் இருக்கவியலும் என பொருள்பட இருப்பதாக எண்ணினேன். --06:16, 16 ஜூலை 2009 (UTC)

வேறற்ற எனலாம். வேறிலிய எனலாம். வேறிலித்தனி எனலாம்.--செல்வா 12:38, 16 ஜூலை 2009 (UTC)
வேறிலித்தனி சிறப்பாகப் பொருந்துகிறது.'வேறில்லா அடையாளவெண் ஆணையம்' என்பதை 'வேறிலித்தனி அடையாளவெண் ஆணையம்' என மாற்றிவிடுகிறேன்.----மணியன் 05:09, 22 ஜூலை 2009 (UTC)
நன்றி, ஆம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.--செல்வா 12:38, 22 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்தன்_நிலெக்கணி&oldid=408036" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நந்தன் நிலெக்கணி" page.