பேச்சு:பனி

Add topic
Active discussions

சொற்கள் பற்றிய உரையாடல்தொகு

Icicle, Frost, Ice cap, Ice sheet என்பவற்றிற்கு தமிழ்ச் சொற்கள் தேவை.--கலை (பேச்சு) 14:58, 17 ஆகத்து 2012 (UTC)

  1. icicle = பனிக்கூரி, பனியூசி, பனியுறும்பு (உறும்பு என்றால் உறுதியான கூரிய கட்டி, பெரிம்பாலும் களிமண் பற்றிப் பயன்படுத்தும் சொல், இங்கு பனி பற்றிக் கூறுகின்றோம்), பனிக்கருக்கு என்றும் சொல்லலாம். கருக்கு என்னும் சொல் பல் போல் கூரிய ஓரங்கள் உள்ளதைக் குறிக்கப் பயன்படுத்துவர், கருக்குவாள் என்றால் கூரிய முனை உடைய வாள், பனியாணி, பனிமுள், பனிக்குனை எனவும் சொல்லலாம் (குனை என்றால் கூரிய நுனி, பேச்சு வழக்கில் கொனை என்பர்)
  2. frost = பனிப்பூச்சு (பனித்தூளாக மேவி இருப்பது);
  3. ice cap = பனிப்பாகை (தலைப்பாகை போல்), வடமுனை தென்முனையில் உள்ள உறைபனி மூடி இருக்கும் பரப்பைக் குறிக்கும். பாகை என்றால் பிரிவு, இங்கே சிறப்பாக இங்கே உறைபனி மூடிப் பிரிந்து இருக்கும் பகுதியை குறிக்கும்).
  4. ice-sheet = பனிப்பாய் எனலாம் (ice-mat என்பது போல ஆனால் மெதுவாகப் பாயும் பையாறு (கிளேசியர்) போல் நகரக்கூடியது என்னும் குறிப்பும் கொன்டது).

--செல்வா (பேச்சு) 16:55, 17 ஆகத்து 2012 (UTC)

நான் கொடுத்திருந்த சொற்களையும் பார்த்தீர்களா தெரியவில்லை. நான் கொடுத்திருந்த சொற்கள்>
  • Icicle - பனி ஈட்டி (ஆனால், இதனைவிட நீங்கள் சொன்ன பனிக்கூரி பொருத்தமாக உள்ளது. பனிக்கருக்கு என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. அனேகமாக அவை அழுத்தமாக வழுவழுப்பாகத்தானே இருக்கும். கருக்கு போன்று இருப்பதில்லைத்தானே? நீங்கள் கூறிய ஏனைய சொற்களும் பொருத்தமாக இருப்பினும், பனிக்கூரி என்பது எளிமையாகவும், பொருளை இலகுவாக சொல்வதாகவும் தோன்றுகின்றது.)
  • Frost - உறைபனி (எங்கேயோ அப்படி இருந்த நினைவில் எழுதினேன். அது பொருத்தமில்லையா?)
  • Ice cap - பனிப்படுக்கை (ஆற்றுப்படுக்கை போன்று பனிப்படுக்கை என்று சொல்லலாமோ என்றெண்ணினேன். பனிப்பாகை பொருத்தமான சொல்லாகவே இருக்கின்றது.)
  • Ice sheet - பனிவிரிப்பு (Ice cap ஐப் போன்றதே ஆயினும், அதனை விட அதிகமான பரப்பளவை உள்ளடக்கி இருப்பதனால் பனிவிரிப்பு என்றேன்.)--கலை (பேச்சு) 18:38, 17 ஆகத்து 2012 (UTC)

கலை, நீங்கள் கொடுத்த சொற்களைப் பார்காமலே முதலில் இட்டுவிட்டேன். பனியீட்டி என்று நீங்கள் கூறியதும் மிகவும் பொருத்தமே (பிறகுதான் பார்த்தேன்!). Frost என்பது காலையில் காணும்பொழுது குளிர்நாடுகளில் பனித்தூள்களால் மூடப்பட்டிருப்பது, பனித்தூள்தான் Frost. ஆனால் மாவுப்பனி, தூவிப்பனி, பனித்தூள், மணற்பணி, குருனைப்பனி முதலான பலவும் வீழ்பனியின் வெவ்வேறு வடிவங்கள், எனவேதான் பனிப்பூச்சு (பனித்தூளால் தூவப்பட்டு மூடி இருப்பது போல் இருப்பது) எனப்பரிந்துரைத்தேன். உறைபனி என்பது திண்மநிலையில் இருக்கும் பனி அல்லது பனிக்கட்டி. பனிவிரிப்பு நன்றாக உள்ளது. ஆனால் ice sheet என்பது நகரக்கூடியது, எனவேதான் நான் பனிப்பாய் என்று இருபொருள் பொருந்த சூட்டினேன். பனிவிரிப்பு என்றே இருக்கலாம். பனிப்படுக்கை என்பது சரியே. அப்படியே இருக்கலாம், கோளத்தின் முனைப்பகுதியில் தொப்பி வைத்தாற்போல் இருபப்து. பனித்தொப்பி என முதலில் நினைத்தேன். ஆனால் ஏறத்தாழ அதே பொருளுடன் சற்று கூடுதலான பொருத்தத்துடன் -பிரிவு, பகுப்பு- என்னும் பொருள் இருந்ததால் பனிப்பாகை என்றேன். தலைப்பாகை என்பது போல் மேலே உச்சியிலே சூடி இருப்பதாலும் (தென் முனையும் தலைகீழாய்ப் பார்த்தால் உச்சியே :) ) பனிப்பாகை என்றேன். --செல்வா (பேச்சு) 18:49, 17 ஆகத்து 2012 (UTC)

தலைப்புதொகு

இந்தப் பக்கத்தின் தலைப்பு பனிக்கட்டி என்பதை விடப் பனி என்று இருப்பது அதிக பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. கருத்துக்களைக் கூறினால் கட்டுரையை நகர்த்தலாம்.--கலை (பேச்சு) 21:58, 22 ஆகத்து 2012 (UTC)

மறுப்பேதும் இன்மையால் கட்டுரையை நகர்த்துகின்றேன்.--கலை (பேச்சு) 11:14, 2 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனி&oldid=1249353" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனி" page.