பேச்சு:பயனெறிமுறைக் கோட்பாடு

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

மா என்பது விலங்கு தானே?--Sivakumar \பேச்சு 15:08, 4 மே 2007 (UTC)Reply

மக்களும் மாக்களும் என வெகுகாலமாக வேறுபடுத்தி வருகின்றனர். அது விலங்குகளை மட்டுமா அல்லது அதற்கு மேலும் இருக்கும்/இருக்க வாய்ப்புள்ள உயிர்அல்லது உயிர் போன்றவைகளையும் உள்ளடக்குமா எனத் தெரியவில்லை. செல்வாவிடம் கேட்டுப் பார்க்கலாம். -- Sundar \பேச்சு 15:11, 4 மே 2007 (UTC)Reply
மா என்றால் விலங்கு. மாக்கள் என்னும் சொல் மக்களையும் குறிக்கும். சில இடங்களில் அறிவில் குறைவான மக்களைக்குறித்தாலும், மாக்கள் என்னும் சொல் பொதுவாக மக்கள் என்னும் பொருள் உடையதே. மண்டலமாக்கள் என்பது அரசர்களை. பொன்வினைமாக்கள் (பொன்வினை செய்யும் கலைஞர்கள்), தோல்வினைமாக்கள், நகரமாக்கள், முல்லைநிலமாக்கள் என பற்பல இடங்களில் மாக்கள் என்னும் சொல் மக்கள் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. --செல்வா 14:16, 15 மே 2007 (UTC)Reply

கிழக்கில் இக்கோட்பாடு தொகு

இன்னெறிமுறை வெகு இயல்பாகத் தோன்றவல்லது என்பதால் இதுபற்றி கிழக்கத்திய மெய்யியலாளர்களும் கருத்து தெரிவித்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். வள்ளுவத்தில் இது பற்றி? -- Sundar \பேச்சு 13:46, 15 மே 2007 (UTC)Reply

Return to "பயனெறிமுறைக் கோட்பாடு" page.