பேச்சு:பரசிட்டமோல் நச்சுமை

செந்தி மிக நன்றாக இக்கட்டுரையை வரைந்துள்ளீர்கள். வலிநிவாரணி என்பதைவிட வலிநீக்கி, வலிவிடுப்பி, வலிகுறைப்பி என்பன எளிதாகப் புரியும். உள்ளே இன்னும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும், மாற்றாலாமா? --செல்வா 21:09, 11 அக்டோபர் 2010 (UTC)Reply

நன்றி செல்வா, தங்களால் மாற்ற முடியுமெனின் .தாராளமாக மாற்றவும், இல்லையெனின் பிழைகளைச் சுட்டினால் நானே மாற்றிவிடுகிறேன்; அப்போதுதான் தரமான கட்டுரை எவ்வாறு எழுதுவது என்பதைப் பயின்றவனாவேன். நன்றி --சி. செந்தி 06:03, 12 அக்டோபர் 2010 (UTC)Reply

மேலும், நச்சுத்தன்மையை நச்சுமை என்று குறிப்பது சரியா? -இமை ஒட்டுதானே தன்மையைக் குறிக்கும்? (ஓ, இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே வேற்றுமை நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் சில இடங்களில் மேட்டிமை என்று வருகிறது. இந்த இடத்தில் எது சரி?) -- சுந்தர் \பேச்சு 07:41, 12 அக்டோபர் 2010 (UTC)Reply

முதலில் poisoning என்பதற்கு "நஞ்சூட்டம்" என "http://ta.wiktionary.org/wiki/poisoning" இலிருந்து எடுத்தேன். அதேபோல toxicity என்பதற்கும் நிறைய சொற்பதங்கள் உண்டு. http://ta.wiktionary.org/wiki/toxicity - இங்கே நச்சுமை எனவும் குறிக்கப்பட்டிருந்தது. --சி. செந்தி 08:00, 12 அக்டோபர் 2010 (UTC)Reply

தகவலுக்கு நன்றி, செந்தி. -- சுந்தர் \பேச்சு 09:11, 12 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "பரசிட்டமோல் நச்சுமை" page.