பேச்சு:பாலியல் வசைச் சொற்கள்

பாலியல் வசைச் சொற்களுக்குத் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்படாது ஒரு பக்கத்தில் நிரற்படுத்துவதற்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுக்கள் முன்னைய பக்கங்களிலிருந்து இப்பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

தலைப்பை மாற்றுக தொகு

இக்கட்டுரைத் தலைப்பு விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் சிலருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். அத்துடன் இத்தகைய பிற சொற்களும் கட்டுரைத் தலைப்புகளாகத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. ஆதலால் இத்தகைய பாலியல் தொடர்பான சொற்களுக்கான பக்கமாக இதனை மாற்றிவிடலாம் என்று தோன்றுகின்றது. ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை "பாலியல் இழிசொற்கள்" என்று மாற்றலாம் என்று பரிந்துரைக்கிறேன். --கோபி 17:09, 24 ஜூன் 2006 (UTC)

பாலியல் உறுப்புச் சொற்கள் என பெயரிடலாம் என நினைக்கிறேன். பாலியல் தொடர்பான் சொற்கள் பலவும் பொது வழக்கில், பன் மொழிகளிலும், இழிவாகப் பயபடுத்தபடுகின்றன. இழிவாக பயன் படுத்துவது பற்றி கட்டுரையில் குறிக்கலாம். கட்டுரையைத் தொடங்கியவர் என்ன நோக்கில் தொடங்கினார் என்று தெரியவில்லை, ஆனால், தமிழில் பாலியல் உறுப்புகள் பற்றி பல சொற்கள் உள்ளன, அவற்றில் பலவும் இலக்கியங்களிலும் ஆளப்பெற்றுள்ளன.--C.R.Selvakumar 17:50, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
தமிழில் பிள் என்பது புள் என பேச்சு வழக்கில் மாறும். பிள்>புள்>புண். பிள்ளை என்பது புள்ளெ என்றும் மாறும், எனவே பிள் > புள் அறியலாம். பொள் என்றாலும் துளையுடையது என்றுதான் பொருள். போரில் அம்பால் தாக்குண்டால் ஏற்படும் பிளவுற்ற தசைக்குப் புண் என்று பெயர். பொள்ளுற்றதால் ஏற்படுவது புண். புழை என்றாலும் துளை என்று பொருள் படும். ள் > ண் என்று மாறுவது தமிழ் இயற்கை. வெள் வெள்ளை என்பது வெண், வெண்மை காண்க--C.R.Selvakumar 18:05, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இது தமிழில் பொதுவான வழக்கத்தில் உள்ள சொல். ஆங்கில விக்கிபீட்யாவில் இவ்வாறான சொற்கள் தனிப்பக்கங்களாக உள்ளன. பார்க்க [1]

இழி சொற்கள் என்ற பிரயோகம் சரியானதல்ல. சமூக அங்கீகாரம் பெறாத சொற்கள் என்றவாறு வகைப்படுத்தல் செய்யலாம். தமிழில் வழக்கிலுள்ள இவ்வாறான சமூக அங்கீகாரம் பெறாத சொற்களுக்கான தனிப்பக்கங்கள் உருவாக்கப்படுதல் வரவேற்கத்தக்கதே. முடியுமானால் சொற்களை தொகுக்க முயற்சிக்கிறேன். --மு.மயூரன் 20:49, 24 ஜூன் 2006 (UTC)

இது வசைச் சொல்லாகவே வழக்கில் இருக்கிறது. சில சமூகங்களில் இச்சொல்லின் பாவனை அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தமிழில் வழக்கிலுள்ள சமூக அங்கீகாரம் பெறாத சொற்களுக்குத் தனிப்பக்கங்கள் அமைவதில் எனக்குள ஆட்சேபணைக்கான காரணம் இதுதான். ஆங்கிலத்தில் fuck போன்ற சொற்கள் அகராதிகளிலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழ் அகராதிகளில் அவ்வாறில்லை. ஆங்கிலத்தில் இருக்கிறது என்பதற்காக வலிந்து தமிழிலும் அவ்வாறு அமைக்கவேண்டும் என்று இல்லைத்தானே!

சமூக அங்கீகாரம் பெறாத சொற்களை நீங்கள் தொகுக்கும் போது அவற்றுக்கான ஒரு பக்கமே போதுமானது. இந்தப் பக்கத்தின் தலைப்பை மாற்றி அனைத்துச் சொற்களையும் பட்டியலிடலாம். இத்தகையதொரு பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_slang_and_swear_words

ஆங்கிலத்தில் 12 இலட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. தமிழில் வெறும் 3000 தான். தமிழில் தனிப்பக்கங்களாகத் தொகுக்கவேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. -- கோபி 03:57, 25 ஜூன் 2006 (UTC)

அகராதிகளில் இல்லை என்பதற்காக இருக்கவே கூடாது என்ன்றில்லைதானே கோபி. உண்மையாக இவ்வாறான சொற்களை பொதுப்புழக்கத்துக்கு கொண்டுவருவதன்மூலமே அதன் அதிர்ச்சி அளிக்கும் தன்மையை குறைத்துக்கொண்டு வரலாம். இன்றைய சிற்றிதழ் சூழலிலும் , தலித் இலக்கியங்களிலும் , நவீன இலக்கியங்களிலும் இச்சொற்களின் பிரயோகம் மிகச்சாதாரணமாக இடம்பெறத்தொடங்கிவிட்டது. இன்னமும் இவ்வாறான சொற்களை ரகசியமாகவும் தூசணமாகவும் வைத்திருக்கவே முயல்வது பழைமை பேணும் செயலாகவே இருக்கும். வேறில்லை.

விக்கிபீடியா போன்ற தரமான மூலங்களில் இவ்வாறான சொற்கள் தனிப்பக்கமாக தொகுக்கப்படுதல் நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும். உண்மையில் இவ்வாறான சொற்களுக்கு கட்டுரைகள் வருதல் தேவையான விடயமே அன்றி, தேவையற்ற விடயம் அல்ல. --மு.மயூரன் 05:37, 25 ஜூன் 2006 (UTC)

இந்தக்கட்டுரையை (ஓர் அநாமதேயப் பயனர்) என்ன காரணத்துக்காகத் தொடங்கினார் என்பதை ஓரளவு என்னால் ஊகிக்கமுடிகிறது. அ+து, இந்தச் சொல்லின் மூலம் வேறு ஒரு மொழியிலிருந்து வந்தது என்பதை எடுத்துக்காட்டவே என நினைக்கிறேன். அதற்காக அனைத்து இழிசொற்களையும் இதுதான் தருணம் என இங்கு பட்டியலிடுவதோ அனைத்து சொற்களுக்கும் ஒவ்வொரு பக்கங்கள் உருவாக்குவதோ தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த இழிசொற்கள் பாவனையில் இருக்கவே கூடாது என்பதே என்னுடைய கருத்து. நன்றி.--Kanags 06:02, 25 ஜூன் 2006 (UTC)

கட்டுரையையோ கட்டுரைத் தலைப்பையோ நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. மயூரனின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், இச்சொற்கள் குறிக்கும் உடல் உறுப்புக்களுக்கு தமிழ் மரபு சார் மருத்துவத்தில் என்ன பெயர் எனக் கண்டறிந்து அது குறித்த அறிவியல் ரீதியான கட்டுரைகளை உருவாக்கி அவற்றுக்கு இக்கட்டுரைகளில் இருந்து உள் இணைப்பு தர வேண்டும். தமிழ் நாட்டு, இலங்கை மரபு வழி சித்த மருத்துவர்கள், தொழில் முறை சித்த மருத்துவர்கள் இதற்கு உதவ் வேண்டும். (இலங்கையில் தமிழ் வழியிலேயே சித்த மருத்துவக் கல்வி உள்ளதாக எங்கோ படித்ததாக நினைவு.) இம்மாதிரி தலைப்புகள் பழமைவாதிகளுக்கும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடும் என்பது உண்மை தான். விக்கிபீடியாவைக் குழந்தைகளும் பள்ளிச் சிறார்களும் பயன்படுத்தக் கூடும் என்பதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து விக்கிப்பீடியாவை பயன்படுத்துவத்ற்கு வரும் எதிர்ப்பு, தடை ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறு பற்றியும் நினைவில் கொள்ள் வேண்டும். இயன்ற வரை இக்கட்டுரைகளை அறிவுப்பூர்வமாக எழுதுவதே அவர்களுக்கு நாம் அளிக்கும் பதில். ஆனால், குறைந்த பட்சம், இம்மாதிரித் தலைப்புகளை முதற்பக்கத்கில் காட்சிப்படுத்த வேண்டாம் என்பது என் நிலைப்பாடு.--ரவி 10:13, 27 ஜூன் 2006 (UTC)

Vagina என்பதற்கான தமிழ் மொழிபெயர்ப்புகளுள் ஒன்றாக தமிழ் இணையப் பல்கலைக்கழக மருத்துவ கலைச்சொல் பட்டியலில் தரப்பட்டுள்ளது. புண்டை, மடலுறை, புணர்புழை போன்றவை தூய தமிழ் சொற்கள். ஆம், இன்றைய வழக்கில் இது இழிசொல்லாக மாறிப்போனது உண்மையே. pee, shit போன்றவை ஆங்கிலத்தில் தூய்மையான சொற்களாகக் கருதப்பட்ட காலம்போய் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தினால் வேறு சொற்கள் அறிவியல் சொற்களாக ஏற்பட்டது எனப் படித்துள்ளேன். எத்தலைப்பாயினும், கலைக்களஞ்சிய நடையில் கட்டுரை எழுதினால் தவறில்லை. -- Sundar \பேச்சு 10:39, 27 ஜூன் 2006 (UTC)

சமூக அங்கீகாரம் பெறாத சொற்கள் கட்டுரைத் தலைப்புக்களாக இடம்பெறுவது குறித்துத் தொடர்ந்தும் ஆட்சேபணை தெரிவிக்க விரும்புகின்றேன். குறித்த சொற்களின் கருத்தும் தாக்கமும் பயன்படுத்துவோரைப் பொறுத்து வேறுபடுகின்றது. புண்டை என்பது வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்தப்படுவதையும் அதற்கு மாறாக அதிகபட்ச கேவலப்படுத்த அச்சொல் பயன்படுவதையும் நான் அவதானித்திருக்கிறேன். நான் பழகிய மிகச் சிறிய வட்டங்களுக்குள் எனது அவதானிப்பு இது. அதன் கருத்து இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. இச்சொல்லை விக்கிக் கட்டுரைத் தலைப்பாகக் காணும் - குறிப்பாக ஒரு குழந்தை இப்பக்கத்தைப் படிப்பதை பெற்றோர் அவதானிக்கும் - போது குறித்த குடும்பத்தில் விக்கிப்பீடியா பார்க்கப்படாத ஒரு வலைத்தளமாக மாறிவிடும் அபாயமுண்டு.

தமிழ் ஒரு குறித்த பிரதேச மொழியல்ல. ஏழு கோடி மக்களால் பேசப்படுவது. தமிழில் வட்டார வழக்குகள் நிறையவே உண்டு. சிலருக்கு சாதாரணமாகத் தெரியும் சொற்கள் பிறருக்கு அதிர்ச்சியளிக்கலாம். இதனை விக்கிப்பீடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பேச்சுப் பக்கத்திலேயே "இச்சொற்களுக்குக் கட்டுரை வருதல் தேவையான விடயம்" என்றும் "இச்சொற்கள் பாவனையில் இருக்கவே கூடாது" என்றும் இரு துருவங்களான கருத்துக்கள் வந்துள்ளதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனது கருத்து என்னவெனில் "இச்சொற்கள் பற்றி விக்கிப்பீடியாவில் வருவது தவறல்ல. ஆனால் கட்டுரைத் தலைப்பாகப் பெரிய எழுத்துக்களில் காட்சியளிப்பது பொருத்தமானதல்ல" என்பதாகும்.

குறித்த சொற்கள் தொடர்பாக பெரிய கட்டுரைகள் எழுதப்பட வாய்ப்பில்லை என்பதனால் குறித்த சொற்களை எல்லாவற்றுக்குமான புதிய பக்கமொன்றை அமைக்க பரிந்துரைக்கிறேன். அத்துடன் புண்டை போன்றவற்றைக் குறித்த புதிய பக்கத்துக்கு redirect செய்துவிடுவதே பொருத்தமானது. ஏனெனில் குறித்த தலைப்புக்களில் கட்டுரைகள் இனி வருங்காலங்களில் விசமத்தனமாகத் தொடங்கப்படுவதை அது தடுக்கும். -- கோபி 16:38, 27 ஜூன் 2006 (UTC)

மீள்வழிப்படுத்தல் தவறானது தொகு

இம்மீள் வழிப்படுத்தல் மிகத்தவறானது. கட்டுரையின் தலைப்பும் உள்ளடக்கமும் பெருமளவில் முரண்படுகின்றன. பெண்குறி கட்டுரையை தேடி வருபவர் முன் இந்த கட்டுரை காட்சியளிக்கும் வாய்ப்பு உண்டு. இம்மீள் வ்ழிப்படுத்தலை மறுபடி பழைய நிலைக்கு திருப்பி விடவும்.

கோபியின் கருத்துக்களோடு எனக்கு எந்தவிதமான உடன்பாடுகளும் இல்லையாயினும், முதற்கட்டமாக இவ்வாறான சொற்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பக்கத்தை உருவாக்கி இச்சொற்களை அங்கே வழிப்படுத்திவிடுதல் தற்போதைக்கு சரியான தீர்வாக அமையலாம்.

புண்டை போன்ற சொற்கள் தொடர்ச்சியாக பலராலும் விக்கிபீடியாவில் எதிர்காலத்தில் சேர்க்கப்பட்டவண்ணமே இருக்க வாய்ப்புண்டு. இத்தகைய தலைப்புக்களில் சரியான ஆய்வு முறையிலமைந்த உள்ளடக்கத்தை நாம் வழங்கினோமாக இருந்தால் விஷமிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

விக்கிபீடியா பழைமைபேணும் நிலையில் இல்லாமல் முற்போக்கானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். கோபியின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. உதாரணமாக இஸ்லாம் என்ற கட்டுரையில், குர் ஆன் இறவனால் அருளபட்டது என்று சொல்லப்படுகிறது என்பது போன்ற வசனங்கள் உள்ளன. இது இஸ்லாத்துக்கு முரணானது. இஸ்லாம் மாணவர்கள் விக்கிபீடியாவை அணுகுதலை இது தடைசெய்யப்பண்ணலாம். அதற்காக நாம் கட்டுரைகளை மாற்ற முடியாதல்லவா?

சொல்லப்போனால் தமிழில் இருக்கும் "அவமானப்படுத்த பயன்படும் வார்த்தைகள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. இவை பெரும்பாலும் பாலியலை சுற்றி இருப்பதால் பழைமை பேணுபவர்களால் இவற்றை அங்கீகரிக்க முடியாது. பறையன் என்று கட்டுரை வருவதை ஒருவேளை கோபியால் ஏற்றுக்கொள்ள முடியும். வேசை என்பதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் கூதி ,புண்டை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன் அடிப்படை, பாலியல் தொடர்பான குற்ற உணர்ச்சிகளும், தொடர்ந்து எமது அடுத்த சந்ததியை இதே குற்றவுணர்ச்சிக்குள் வைத்திருக்க விரும்புவதுமேயாகும்.

காத்திரமான உள்ளடக்கங்களோடு இவ்வாறான கட்டுரைகள் வருவது எப்போதும் சரியானதே.

--மு.மயூரன் 18:04, 27 ஜூன் 2006 (UTC)

கோபியால் என்ன கட்டுரைகளை ஏற்றுக் கொள்ள முடியும் அல்லது முடியாது என்பது தொடர்பான தனிப்பட்ட உங்கள் கருத்துக்களுக்கான பக்கமாக இதனைப் பயன்படுத்துவது நல்லது மயூரன். பெரிய எழுத்திலான கட்டுரைத் தலைப்பு தரும் அதிர்ச்சி தொடர்பானதாகவே எனது கருத்தை முன்வைக்கிறேன்.

மேலும் இம் மீளவழிப்படுத்தல் தவறானது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். பொதுவாக புண்டை என்பது vulva அல்லது vagina வைக் குறிப்பதாக இருக்கிறது.--கோபி 18:40, 27 ஜூன் 2006 (UTC)

Wikipedia is not censored தொகு

விக்கிப்பீடியா தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதை நான் அறிவேன். எனது கருத்து புண்டை எனும் கட்டுரை இருப்பது தொடர்பானது அல்ல. அதனை ஒரு கட்டுரைத் தலைப்பாகக் கொண்டிருப்பதிலுள்ள சிக்கல்களாகும்பின்வருவது ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து:

Wikipedia may contain content that some readers consider objectionable or offensive. Anyone reading Wikipedia can edit an article and the changes are displayed instantaneously without any checking to ensure appropriateness, so Wikipedia cannot guarantee that articles or images are tasteful to all users or adhere to specific social or religious norms or requirements. While obviously inappropriate content (such as an irrelevant link to a shock site) is usually removed immediately, some articles may include objectionable text, images, or links if they are relevant to the content (such as the article about pornography) and provided they do not violate any of our existing policies (especially Neutral point of view), nor the law of the U.S. state of Florida, where Wikipedia's servers are hosted.

கோபி 19:00, 27 ஜூன் 2006 (UTC)

இஸ்லாம் தொடர்பான கட்டுரையில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அதனை அங்கேயே தெரியப்படுத்தலாம். அல்லது கட்டுரை நடுநிலமையை மீறியிருப்பதாகச் சுட்டிக் காட்டலாம். இங்கே நான் சுட்டிக் காட்டியது குறித்த சொற்களைக் கட்டுரைத் தலைப்புக்களாக வைத்திருப்பதைத் தவிர்த்தலேயேகும். பாலியல் தொடர்பான குற்றவுணர்ச்சிகளை அடுத்த சந்ததிக்குக் கடத்தாமலிருப்பதோடு பாலியல் தொடர்பான அதிர்ச்சிகளையும் அடுத்த சந்ததிக்குக் கொடுக்காமலிருக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. அத்துடன் விக்கிப்பீடியாவின் பரவலான அறிமுகத்துக்குக் கட்டுரைத் தலைப்புக்கள் குந்தகம் விளைவிக்காமலிருத்தல் நல்லது --கோபி 19:20, 27 ஜூன் 2006 (UTC)

குழந்தைகள் இத்தலைப்பை பார்ப்பதனால் பெற்றோர்கள் விக்கிபீடியாவைத் தடை செய்யும் நிலை வரலாம் என்ற கோபியின் கவலை உண்மை தான். அதே சமயம் இம்மாதிரி விதயங்களை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மயூரனின் கருத்துடன் உடன்படுகிறேன். இது மாதிரி தலைப்புக்கள் ஒவ்வொன்றை பற்றியும் ஒரே மாதிரியான குறுங்கட்டுரைகளே பெரும்பாலும் எழுத இயலும் என்பதால், இம்மாதிரி சொற்கள் அனைத்திற்கும் ஒரு பட்டியல் பக்கம் ஒன்றை உருவாக்கி (ஆங்கில விக்கிபீடியா பட்டியல் போல), அங்கு அவற்றுக்கான மருத்துவப் பெயர்களுக்கான கட்டுரைகளுக்கு உள்ளிணைப்பு தரலாம். சமூகத்தில், இலக்கியத்தில் இவற்றுக்கான இடம் குறித்த வர்ணனைகளையும் தரலாம். தற்பொழுது உள்ள நிலையில், மீள்வழிப்படுத்தலும் உள்ளடக்கமும் முரணானதே.--ரவி 08:05, 28 ஜூன் 2006 (UTC)

இதுபோன்ற பாலுறுப்புக்களின் பெயர்களையும், அவற்றின் மருத்துவத் துறையில் ஏற்பு பற்றியும், தற்போதைய சூழலில் சமுதாயத்தில் இவற்றைப் பற்றிய கருத்து மற்றும் பயன்பாடு பற்றியும், பண்டைய தமிழ் இலக்கியத்தில் அல்குல் போன்றவை பயன்படுத்தப்பட்டது பற்றியும், தற்கால இலக்கியத்தில் இவற்றின் பயன்பாட்டைப் பற்றியும், பிற பண்பாடுகளிலும், மறைநிலைப் பண்பாடுகளிலும், இச்சொற்களின் பயன்பாடு பற்றியும் விரிவான ஒரு கட்டுரையை யாராவது எழுத் முயல வேண்டும். நானும் என்னால் முடிந்த தகவல்களைத் தருகிறேன். எடுத்துக்காட்டாக, அல்குல் என்ற சொல் ஆண்டாளால் பயன்படுத்தப்பட்டுள்ளது என சந்தோஷ்குரு என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
மற்றபடி, இவற்றை இப்போதைக்குத் தலைப்புகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம். -- Sundar \பேச்சு 08:38, 28 ஜூன் 2006 (UTC)
Return to "பாலியல் வசைச் சொற்கள்" page.