பேச்சு:பிடரிக்கோடன்

பிடரிக்கோடன் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பிடரிக்கோடன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பெயரைப்பற்றி தொகு

இந்த விந்தையான விலங்குகளைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். இவற்றுக்கான தமிழ்ப்பெயராக பிடரிக்கோடன் பொருத்தமாக உள்ளதா? இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர்கள் இருப்பின் பரிந்துரைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:31, 6 திசம்பர் 2010 (UTC)Reply

மிக அருமையாக வடித்துள்ளீர்கள் இக்கட்டுரையை சுந்தர்! இப்பொழுதுதான் படித்தேன். வியப்பூடும் உயிரினம். தமிழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை இது என்றே எண்னுகிறேன். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!--செல்வா 01:12, 22 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி, செல்வா. ஊர்வனவற்றைப் பற்றியும் நில நீர் வாழிகளைப் பற்றியும் அருமையான நூல்[1] ஒன்றை அண்மையில் வாங்கினேன். அதில்தான் இவ்விலங்குகளைப் பற்றிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகான, தெளிவான வண்ணப் படங்களையும் தகவல் சட்டம் போன்ற எளிதில் படித்தறியக்கூடிய உரையமைப்பையும் கொண்ட அந்த நூல் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பதிப்பகத்தாரின் அனுமதி கிடைத்தால் வெகு எளிதாகத் தமிழில் மொழிபெயர்க்க முடியும். முதல் முறையாக பாலூட்டிகளைக் கடந்து மற்ற விலங்குகள் மீதான ஆர்வம் வெகுவாகக் கூடியுள்ளது. :)
ஊர்வன வரிசையில் வரும் அறிவியல் பெயர்களை ஒழுங்கு செய்ய உங்கள் உதவி தேவை, செல்வா. (ஊர்வன கட்டுரையில் உள்ள இனக்கிளைப்புப் படத்தைத் தமிழாக்கினால் போதுமானது.) அதைச் செய்தால் பல கட்டுரைகளை நாம் எழுதலாம். -- சுந்தர் \பேச்சு 05:48, 22 திசம்பர் 2010 (UTC)Reply

இவ்விலங்கைப் பிடரிவரையன் என்றும் அழைக்கலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:20, 20 மார்ச் 2014 (UTC)

தமிழ் இந்து நாளிதழில் சனவரி 2014-இல் வந்த கட்டுரையொன்றில் பிடரிக்கோடன் என்ற பெயரை ஏற்றுப்பயன்படுத்தியுள்ளார்கள். -- சுந்தர் \பேச்சு 10:34, 24 செப்டம்பர் 2014 (UTC)

துணைவரிசை "Lacertilia" பற்றிய உரையாடல் தொகு

கலையரசியும், சுந்தரும் பல்லி என்னும் சொல் பற்றியும் அதன் பொருத்தம் பற்றியும் பேயிருந்தனர் அண்மையில். சுந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க கீழ்க்காணுமாறு வேறு இடத்தில் இட்டிருந்தேன். இங்கும் இருந்தால் பயனுடையதாக இருக்கும் என்று நினைத்து இடுகின்றேன்.

சுந்தர் Lacertili என்றால் "plural of Lizard tribe" என்கிறது ஆக்ஃசுபோர்டு அகராதி. இதுவொரு இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. Lacertilian என்றால் "Belonging to Lacertilia" என்கிறது. ஆங்கிலத்தில் 1854 இல், Lacertilian வரிசை (order) பற்றி முதலில் பதிவாகியது, பின்னர் இன்று புகழ் பெற்றிருக்கும் நேச்சர் ஆய்விதழில், அன்றைய 1881 இல் பதிவவன ஒரு தொடரைக் குறிக்கின்றது அவ் அகராதி, "Nature 14 Apr. 551/1 Its lacertilian affinities are well shown in its long and rat-like tail.". இச்சொல்லின் மூலம் Lacert (இலத்தீன்) = A. Lizard (ஆங்கிலம்) என்பதுதான். இச்சொல் வைக்கிளிஃவு (Wycliff) விவிலியத்தில் கி.பி. 1382 இல் பதிவாகியது (OED: "1382 Bible (Wycliffite, E.V.) Lev. xi. 30 A lacert, that is a serpent that is clepid a liserd."). எனவே அடிக்கருத்து நீளமாக இருப்பது என்பது போல் தெரிகின்றது. இன்னொரு பொருள் சதைப் பற்றுள்ள என்பதாகும் (lacert என்றால் சதைப் பற்றுள்ள தசை என்றும் இன்னொரு பொருள் உண்டு). எனவே Lacertilia என்பது "பல்லி வரிசை" என்பதுதான். நாம் "தட்டுமுட்டு", "அடிதடி" என்று கூட்டாகப் பேர் வைப்பது போல பல்லியோந்தித் துணைவரிசை எனப் பெயரிடலாம். செதிளூர்வன (Squamata) என்னும் வரிசைக்குள் இருக்கும் பழைய பகுப்பின் படி மூன்று துணைப்பகுப்புகள் உண்டு (1) பல்லியோந்திகள், (2)பாம்புகள், (3) மண்புழு போல் தோற்றமளிக்கும் ஆனால் செதிளுடைய புழுக்கள் = செதிற்புழுக்கள் Amphisbaenia. இவை தவிர, இப்பொழுது பொது ஒப்புதல் இல்லாத உடும்பு இனங்கள் (ஓந்தியுடும்புகள் (Iguania))முதலிய வேறு நான்கு விதமாகவும் பகுப்புகள் கூறுகின்றார்கள். எப்படியாயினும் பல்லி என்பதைத் துணைவரிசை என்று கொள்வது தவறாகாது. Cat family என்பதில் புலி, அரிமா (சிங்கம்) எல்லாம் இருப்பது போலக் கொள்ளலாம். நாம் புலிப்பூனைப் பேரினம், பல்லியோந்தித் துணைவரிசை எனக் குறிக்கலாம் என்பது என் கருத்து. Lacert என்றால் பல்லிதான் (lizard).

--செல்வா 17:47, 23 பெப்ரவரி 2012 (UTC)

ஆழமான அலசலுக்கு நன்றி செல்வா. ஆங்கிலத்திலும்கூட அந்தத் துணைவரிசையை பல்லி என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் தெளிவுபொருட்டு நீங்கள் சொன்னதுபோல் 'பல்லியோந்திகள்' என அழைக்கலாம். அதற்கேற்றாற்போல கட்டுரையிலும் மாற்றம் செய்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 04:31, 24 பெப்ரவரி 2012 (UTC)
மகிழ்ச்சி சுந்தர். சிந்திக்கத் தூண்டியதற்கு உங்களுக்கு நன்றி :) --செல்வா 05:09, 24 பெப்ரவரி 2012 (UTC)

குறிப்புகள் தொகு

  1. O'Shea, Mark; Tim Halliday (2010). Reptiles and amphibians. London: Dorling Kindersley. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781405357937. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிடரிக்கோடன்&oldid=3725991" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிடரிக்கோடன்" page.