பேச்சு:பௌத்தம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic தெளிவு தேவை
பௌத்தம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பௌத்தம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இணைப்பு தொகு

I propose this article be merged with பௌத்த சமயம், and the name changed to பௌத்தம். The contents are almost same as that of the other article. If no one objects within a week I will implement the suggestion. --Natkeeran 20:12, 2 ஏப்ரல் 2006 (UTC)

There is a Need to Re-write this Article. Its is incomplete compared to the Orginal English Wikipedia Article. Vinodh.vinodh 12:17, 16 நவம்பர் 2007 (UTC)Reply


நடுநிலைமை தொகு

விளக்கம் இடாமல் நடுநிலைமையை கேள்விக்குட்படுத்தி வார்ப்புருவை இடுவது வழக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் (ஒரு கிழமை) விளக்கம் சேர்க்கப்படவிட்டால், வார்ப்புவை நீக்கலாம் என்பது என் கருத்து. நன்றி. --Natkeeran 14:06, 25 நவம்பர் 2007 (UTC)Reply

பௌத்தம் போரை ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்ற கருத்துக்கு மாறாக, கௌதம புத்தர் அல்லது அவருக்கு முந்திய புத்தர் எவரோ சில எதிரிகள் கொல்லப்படுவதை ஆதரித்ததாகவும் அதனால் அது தேவையானவிடத்து போரை அனுமதிக்கிறது என்றும் இலங்கையில் வாதிடப்படுகிறது. இதனை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.--பாஹிம் 08:59, 11 நவம்பர் 2011 (UTC)Reply

Freethinking in Buddhism தொகு


Free thought was advocated by Buddha in the Buddhist text the Kalama Sutta. The following excerpt encourages freethought:

"It is proper for you, Kalamas [the people of Kesaputta], to doubt, to be uncertain; uncertainty has arisen in you about what is doubtful. Come, Kalamas. Do not go upon what has been acquired by repeated hearing; nor upon tradition; nor upon rumor; nor upon what is in a scripture; nor upon surmise; nor upon an axiom; nor upon specious reasoning; nor upon a bias towards a notion that has been pondered over; nor upon another's seeming ability; nor upon the consideration, 'The monk is our teacher.' Kalamas, when you yourselves know: 'These things are bad; these things are blameable; these things are censured by the wise; undertaken and observed, these things lead to harm and ill, abandon them."

புத்தர் போதனைகள் தொகு

எல்லாத் தீமைகளையும் கைவிடுதல்;
நன்மையே செய்தல;
ஒருவரின் உள்ளத்தைத் தூய்மையாக்கல்;
என்பனவே புத்தரின் போதனைகளாகும்.
(தம்மபதம், XIV, 5)


தெளிவு தேவை தொகு

'''புத்தமதப் பிரிவுகள்'

  • சுவாமி விவேகானந்தர் இரு பிரிவுகளை புத்தமதத்தில் குறிப்பிடுகிறார்.பர்மியர் மற்றும் சிங்களவர் இந்து தேவதேவியரை மதிக்காத ஒரு பிரிவினராகவும் வடபிரிவினர் உயர்வாக மதிக்கும் அமிதாப புத்தர் மற்றும் பிற தேவதேவியர் வேண்டுமென்றே தென்பிரிவினரின் நூல்களில் ஒழித்துக்கட்டப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறார்.[1]

புத்தமதப் பிரிவுகள் குறித்த சுவாமி விவேகானந்தரின் ஒருசில கருத்துகள் சேர்க்கப்பட்டதற்கு, "மற்றவர்களின் கருத்தால் புத்த மதப் பிரிவுகளை வகைப்படுத்த முடியாது" என்ற குறிப்புடன் அவை நீக்கப்பட்டன. அப்படியானால் யார் கருத்தின் அடிப்படையில் மட்டும் இவை வகைப்படுத்தப்பட வேண்டும்? விக்கி ஒன்றும் பாடபுத்தகம் அல்லவே? ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டுவது தானே விக்கி? சற்று தெளிவுபடுத்த இயலுமா?

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு இடத்திற்கு பிரயாணம் செய்தோரின் கருத்துக்கள் சேகரிக்கப்படக்கூடாது என்றால் பல சீன பயணிகளின் குறிப்புகளும், ஆங்கிலேயரின் வரலாற்று ஆதாரங்களையும் விக்கியில் கையாளலாமா? கூடாதா? எவை ஏற்புடையவை?

--Kuzhali.india (பேச்சு) 15:40, 3 ஆகத்து 2014 (UTC)Reply

Kuzhali.india, தேவையான தகவல்களை மட்டுமே குறிப்பிடுங்கள். கட்டுரைக்கு எது தொடர்பானதோ அதை மட்டுமே முக்கியப்படுத்தி எழுத வேண்டும். ஒரு கட்டுரைக்கு அதிக முக்கியத்துவம் இல்லாதவற்றை சில வரிகளில் மட்டுமே குறிப்பிட வேண்டும். நீங்கள் எழுதும் எல்லா உரைகளிலும் விவேகானந்தனரை/இந்து மதத்தை முன்னிறுத்தி புகழ்ந்து எழுதுகிறீர்கள். நடுநிலையான பார்வையில் அது தவறு. நீங்கள் தேவையற்றவற்றை மிகைப்படுத்தி எழுதியதால் அவற்றை நீக்க வேண்டிவந்தது. விவேகானந்தரின் கருத்துகள் என்ற பெயரில் வேறு ஒரு நூலை ஆதாரம் காட்டுவதால், கருத்தை உண்மையென நிரூபிக்க முடியாது. சீன, ஆங்கிலேயப் பயணிகளின் கருத்துகள் எப்படி எழுதப்பட்டுள்ளன என கவனியுங்கள். உங்களைப் போல புகழ்ந்து எழுதவில்லை. ”கட்டுரைக்கு தொடர்புடைய அனைத்து தகவல்களையும் சேர்க்கலாம். மிகைப்படுத்தி எழுதக் கூடாது.” -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:56, 3 ஆகத்து 2014 (UTC)Reply

ஞானதீபம் விவேகானந்தரின் கருத்துத் தொகுப்பு நூல். அவரவர் படித்த தகவல்களைத் தானே சேர்க்க முடியும்? --Kuzhali.india (பேச்சு) 17:12, 3 ஆகத்து 2014 (UTC)Reply

நீங்கள் குறிப்பிட்ட கருத்தை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். “வேண்டுமென்றே ஒழித்துக் கட்டப்பட்டனர்” என்பது மிகையான கருத்து. நீங்கள் குறிப்பிட்ட கருத்தில் தெளிவு இல்லை. பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான தொடர்புகளை பற்றிய குறிப்புகள் எதுவும் கட்டுரையில் இல்லை. அவ்வாறிருக்க, பௌத்த மதத்தினர் இந்து சமய தேவதேவியரை வழிபட/மதிக்க வேண்டியதாக கூறப்பட்டிருப்பது சரியல்ல. இந்து மதத்தை பௌத்தம் சார்ந்திருந்தது என்பது போன்ற சர்ச்சையான கருத்தையே இட்டிருக்கிறீர்கள். இரண்டு மதங்களுக்கும் இடையிலான தகவல்கள் சரிவர சேர்க்கப்படவில்லை. ”ஒழித்துக்கட்டப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார்” - இந்த கருத்திற்கு வரலாற்று ஆதாரம் தேவைப்படும். தென்பிரிவினரின் நூல்களில் இந்துசமய இறைவர்களை பற்றிய கருத்து/குறிப்பு முற்காலத்தில் இருந்ததா என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் தரப்படவில்லை. எனவே, இந்த தகவலை அவரது சொந்த கருத்து என்ற முறையில் பதிய வேண்டும். ”.... கருதினார்” என்றோ, “முற்காலத்தில் இந்து தேவ தேவியரைப் பற்றிய குறிப்புகள் இருந்தன எனவும், பிற்காலத்தில் இல்லை எனவும் கருதினார்” என்றோ குறிப்பிட வேண்டும். எதன் அடிப்படையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதற்கான குறிப்பும் தரப்படவில்லை. பௌத்த சமயத்தை அவர் ஆராய்ந்ததற்கான சான்றுகள் இருந்தால் தகுந்த முறையில் அவற்றை சேர்க்கலாம். வரலாற்றாய்வாளர்களின் கருத்தை மட்டுமே ”குறிப்பிடுகிறார்” என்று எழுத வேண்டும். தற்போதைக்கு சேர்க்கப்பட்ட கருத்திற்கு பொருத்தமான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தால் தகவலைச் சேருங்கள். சான்றுகள் இல்லாத பட்சத்தில் கருத்து நீக்கப்படும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:18, 5 ஆகத்து 2014 (UTC)Reply

இதை வேறுவிதமாக கையாளலாம். புத்தத்தின் வகைகளை பற்றி விவேகானந்தர் குறிப்புகள் மட்டும் இருந்தால் அது உள்நோக்கத்தோடு சேர்க்கப்பட்டதாகவே தோன்றும். ஆனால் பௌத்தத்தின் வகைகள் பௌத்த (பாலி) நூல்களில் கூறப்பட்டுள்ளவையை தொகுத்துவிட்டு விவேகானந்தரின் கருத்தை 2 வரிகளில் சேர்த்தால் அது அப்படித்ப் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையில் பௌத்தத்தின் வகைகள் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:44, 5 ஆகத்து 2014 (UTC)Reply

இதைத் தானே நானும் சொன்னேன், தென்கா. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:28, 5 ஆகத்து 2014 (UTC)Reply


ஞானதீபம்;சுடர் ஒன்பது; பக்கம் 141,142; - இதன் சமானமான ஆங்கிலப் பக்கம் இங்குள்ளது. படித்துப் பார்த்து தேவை எனில் சுருக்கிச் சேர்க்கலாம். சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி புத்தரின் கருத்துக்கள் வேதம் சார்ந்தவை. http://www.advaitaashrama.org/cw/volume_6/epistles_second_series/023_akhandananda.htm

இதில் புத்த மதம் புத்தருக்குப் பின்னர் தாழ்வுற்ற சமயம் நேர்ந்தவற்றை இரு பிரிவாக சுருக்கிக் கூறுகிறார்.வட பகுதியான திபெத்தில் தாந்திரீக சாதனைகள் அதிகமாயின என்றும் தென் பகுதி இந்து தேவதேவியரை மதிக்காத பிரிவாக மாறிற்று என்றும் பிரிக்கிறார். சுவாமி அகண்டானந்தர் புத்த மதம் பரவியிருந்த திபெத்தில் பலமுறை பிரயாணம் செய்தவர் என்பதும் சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கும் பிரயாணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றை மதிப்பவர் என்ற விதத்தில் சுவாமி விவேகானந்தரின் கருத்து நடுநிலையாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. அவரது கருத்துக்களைப் பதியாமல் நாம் இழந்துவிடக்கூடாது. யாருக்கும் வேண்டியதில்லை எனில் நீக்கலாம்.

மேலும் சுவாமி விவேகானந்தர் இலங்கை வரலாற்றைத் தனது பார்வையில் விரிவான அளவில் பதிவு செய்துள்ளார். அதில் சிறு அளவே நான் பதிவு செய்ய முயன்றது. அவரது கருத்தை பிரித்துச் சேர்க்கும்போது ஏற்படும் தவறு அவரை ஒருபக்கச் சார்பாளராக காட்டியிருந்தால் தவறு எனது. மேலும் அவரது கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் அவர் பயன்படுத்தும் போது நகைச்சுவையாகவும் நான் பிரித்துச் சேர்க்கும்போது ஒருதலை பட்சமாகவும் தெரிகின்றன. முயற்சி கைவிடப்பட்டது.

புத்தமதம் குறித்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள்: http://www.advaitaashrama.org/cw/volume_1/addresses_at_the_parliament/v1_c1_buddhism.htm

--Kuzhali.india (பேச்சு) 16:38, 5 ஆகத்து 2014 (UTC)Reply

குழலி: ஆவணப்படுத்தும் உங்கள் முயற்சியை கைவிட வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் குறைந்தது 20 பேராவது உங்களைப் போல எழுதிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உதவக்கூடும். உதவி தேவைப்பட்டால் மற்றவர்களைக் கேளுங்கள். கண்டிப்பாக உதவார்கள். கட்டுரை தொடர்பான சந்தேகங்களை, குறைகளை கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் பதியுங்கள். (இந்த பக்கமும் பேச்சுப் பக்கம் தான்!!) கட்டுரையில் படம் சேர்ப்பது, படத்தை பதிவேற்றுவது, ஆங்கில கட்டுரையுடன் இணைப்பது, கட்டுரையில் வடிவமைப்பு போன்ற சந்தேகங்களை மற்ற பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடுங்கள். உங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம். :) நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் கவனிப்பார்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நேரமிருந்தால் உரையை விரிவாக்குங்கள். ஒருவருக்கு பிடிக்கவில்லை/தேவையில்லை என்பதால் கட்டுரையை நீக்கிவிட முடியாது. நீக்குவதற்கும் விதிகள் உள்ளன! நீக்கப்பட்ட கட்டுரைகளை திரும்பப் பெறும் வசதியும் விக்கிப்பீடியாவில் உண்டு. மேலே நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் தெளிவாக உள்ளன. இவற்றை தகுந்த முறையில் கட்டுரையில் சேர்க்க முயலுங்கள். மற்றவர்கள் உதவுவார்கள். புரிந்துகொண்டமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:07, 5 ஆகத்து 2014 (UTC)Reply
  1. ஞானதீபம்;சுடர் ஒன்பது; பக்கம் 141,142;
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பௌத்தம்&oldid=3747856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பௌத்தம்" page.