பேச்சு:மத்திய கிழக்கு

மரபுநோக்கில் ???? யாருடைய --Natkeeran 16:04, 17 நவம்பர் 2006 (UTC)மரபுநோக்கில் ??? மேற்கத்தைய???Reply

மத்திய கிழக்கு என்பது மேற்கு ஆசிய நாட்டுத்தொதிகளை குறித்தி நிற்க்கின்றது. இதை விளக்கமாக தெரிவிக்க வேண்டும். இந்தக்கட்டுரையில் ஐரோப்பிய மையப்பார்வை இருக்கின்றது.

--Natkeeran 22:09, 16 நவம்பர் 2006 (UTC)Reply

நற்கீரன், மத்திய கிழக்கு என்ற தொடர் நீண்ட வரலாறு கொண்டதல்ல. அண்மைக்காலத்தது தான். யார் உருவாக்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர்களே உருவாக்கியிருக்கவும் கூடும். மத்திய கிழக்கு என்பதற்குப் பலரும் பல வரைவிலக்கணங்களைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் கூறுவது போல் ஒரு கருத்துக் கிடையாது. இவைகள் பற்றிக் கட்டுரை தெளிவாகக் கூறுகிறது. அதுமட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் உள்ளோரின் பிழையான கருத்துக்களைக் கட்டுரை மறுத்தும் உள்ளது. மத்திய கிழக்கு என்பதற்கு ஜி 8 நாடுகள் கொடுக்கும் வரைவிலக்கணம் அவர்களுக்கே உரிய பல்வேறு தேவைகளை ஒட்டியது. அப்படி ஒரு வரைவிலக்கணம் இருப்பது வெளிப்படையான உண்மை. அதைக் கட்டுரையில் மறைத்து விடமுடியாது. மத்திய கிழக்கில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இப்பகுதியை இன,மொழி, மத, பண்பாட்டு அடிப்படையில் தான் நோக்க விரும்புகிறார்கள். இதுவும் கட்டுரையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இக்கட்டுரையில் ஐரோப்பிய மையப்பார்வை இருக்கிறது என்ற உங்களது கருத்தைத் தெளிவாக விளக்கினால் நல்லது. Mayooranathan 07:48, 17 நவம்பர் 2006 (UTC)Reply

மீள்வாசிப்பில் கட்டுரை தெளிவாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது எந்த பிரதேசம் என்பது நன்றாக சுட்டப்பட்டுள்ளது. மரபுநோக்கில் என்றால் வழக்கமாக அல்லது பொதுவாக என்று இங்கு பொருள் படும் என்று நினைக்கின்றேன். எனது கருத்து மத்திய கிழக்கு என்ற பொது சொல்லாடலை நோக்கியது. இதைப்பற்றி மேலும் இங்கு நான் இழுத்தடிக்க விரும்பவில்லை. ஆனால் உங்கள் அக்கறைக்கு நன்றி. --Natkeeran 16:04, 17 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மத்திய_கிழக்கு&oldid=2983111" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மத்திய கிழக்கு" page.