பேச்சு:மலையாளிகள்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic மலையாளிகளின் பெயர்கள்

மலையாளிகளின் பெயர்கள் தொகு

மலையாளிகளின் பெயர்களைப் பற்றி கீழே பார்க்கவும். தற்போது வழக்கில் தமிழில் தவறாக எழுதி வருவதையும், மலையாளத்திற்கு ஏற்றவாறு தமிழில் எழுதும் முறையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1. பெயர்களுடன் ஊர்ப் பெயர் வேற்றுமை உருபுடன் வருதல்

எ.கா: தளிப்பறம்பு என்னும் ஊரில் நாராயணன் நாயர் என்பவர் வசிப்பதாகக் கொள்வோம்.

இவர் தன் பெயரை ”தளிப்பறம்பில் நாராயணன் நாயர்” என்று மலையாளத்தில் எழுதுவார். ஆங்கிலத்தில் எழுதுகையில் பட்டப்பெயர்/குடும்பப் பெயரை பின்னால் எழுதுகின்றனர். “நாராயணன் நாயர் தளிப்பறம்பில்” என்றாகிவிடுகிறது!
தமிழில் இவ்வாறு சொன்னால் காமெடியாகிவிடும். கும்பகோணத்தில் பிறந்த ராமசாமி செட்டியார், தன் பெயரை ஆங்கிலத்தில் “ராமசாமி செட்டியார் கும்பகோணத்து” என்று எழுதுவாரா? :D

மேலும் சில எடுத்துக்காட்டு

  • சிபி மலையில்

2. பெயர்களுடன் ஊர்ப் பெயர்கள் வருதல்

ஊர்ப் பெயர்களை பட்டப் பெயராக முன்னே குறிப்பிடுவதே வழக்கம். ஆங்கில முறையில் எழுதுவதால். பட்டப்பெயர்/குடும்பப் பெயர் என்ற முறையில் பெயரின் பின்பகுதிக்குச் சென்று விடுகிறது.
தரூரைச் சேர்ந்த சசி, தன் பெயரை ”தரூர் சசி” என்றே எழுதுவார். ஆங்கிலத்தில் எழுதும்போது, ”சசி தரூர்” என்றாகிவிடுகிறது.

3. இடப்பெயர்கள் பல இடப்பெயர்கள் ஆற்றைச் சார்ந்து வந்துள்ளன.

வயல்+ஆறு=வயலாறு
வயலாறு என்பதை வயலார் என்பதைப் போல் எழுதுகின்றனர். (குற்றியலுகர விதி)
ஒரே பெயரைக் கொண்ட ஊரையும் ஆற்றையும் வேறுபடுத்திக் காட்ட, வயலாறு(ர்) என்று ஊரையும், வயலாறு நதி/புழை என்று ஆற்றையும் குறிப்பிடுகின்றனர்.
எனவே, வயலாறு ராமவர்மா (வயலார் ராமவர்மா), வயலாறு ரவி (வயலார் ரவி) என்று குறிப்பிடுவதே சரி.

மலையாள முறையிலும், ஒவ்வாத போது தமிழுக்கு ஏற்ற முறையிலும் எழுதுதலே முறை. உங்கள் கருத்து என்ன? சரியான முறையில் எழுதினால் எளிதில் புரியும். அதெல்லாம் தேவையில்லை. பெயரை கண்டபடி படித்துவிட்டுப் போகலாம் என்றால் தற்போதைய முறையிலேயே தொடருவோம்! கருத்துகளை வேண்டுகிறேன். குறைந்தபட்சமாக சரியான பெயர்களுக்கு வழிமாற்றாவது இருப்பதே சரி. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:25, 21 சூலை 2014 (UTC)Reply

தமிழ்க்குரிசில், நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் பொதுவழக்கில் ஆங்கிலப் பெயரே புழக்கத்தில் இருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்க இப்போதுள்ள முறையையே பின்பற்றுவது நல்லது. நீங்கள் கூறுவது போல பெயரின் விளக்கத்தை முதற்பத்தியில் விளக்கலாம் (இதற்கான தனி வார்ப்புருவும் எழுதலாம்; காண்க வார்ப்புரு:Portuguese name). தாய்மொழியான மலையாள விக்கியிலேயே தரூர் சசிக்கு சசி தரூர் என்றே தலைப்பிட்டுள்ளார்கள்.--மணியன் (பேச்சு) 13:37, 21 சூலை 2014 (UTC)Reply
ஆம், நானும் கண்டேன். மலையாள விக்கியில் பெரும்பாலான கட்டுரைகளுக்கு ஆங்கிலவழியில் தலைப்பிட்டிருந்தனர். வழிமாற்று இருப்பதும் நல்லது என்று நினைக்கிறேன். கருத்திற்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:47, 21 சூலை 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலையாளிகள்&oldid=1695603" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலையாளிகள்" page.