பேச்சு:மாந்தவுருவகம்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
தலைப்பு
தொகுஉருபியம் எனபதைவிட இலக்கியத்தில் வழங்கும் உருவகம் (உருவக அணி) சரியாகப் பொருந்துமா ? --மணியன்
- உருவகம் நன்றாகத்தான் உள்ளது. வேறு உரையாடலில் செல்வா பரிந்துரைத்த தலைப்பையும் வரையறையும் கொண்டே இக்கட்டுரையைத் தொடங்கினேன். அவரது கருத்தையும் மற்ற பயனர்களின் கருத்தையும் அறிந்து தேவைப்பட்டால் மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 15:07, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
- அதாவது -இயம் என்னும் பின்னொட்டு ஒரு கருத்துருவாக்கத்தை அல்லது இயலைக் குறிக்கும். இங்கு மாந்தவுருவகம் என்னும் சொல் பொருந்தி வருவது போல இருப்பதால், மணியன் கூறியது போல மாந்தவுருவகம் என மாற்றலாம். --செல்வா 19:53, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
சந்தேகம்
தொகுகழுதை முகமும் மனித உடலும் கொண்ட இந்த இளைஞி இளைஞனுடன் உறவாடு இந்த சிற்பம் பேளூரில் உள்ளது. இச்சிலையின் கருத்தாக அங்கிருந்த வழிகாட்டி கூறியது "இளமைபருவத்தில் கழுதை முகத்தை ஒத்த முகம் கொண்ட பெண்ணையும் இளைஞர் விரும்புவர்" என்றுர். இந்த படம் இந்த கட்டுரைக்கு தகுந்ததா?--கார்த்திக் 12:42, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
மாந்தவுருவகம் என்பது மாந்திரியம், மந்திரித்தல், மாந்த சக்தி, மாந்திரீகம், சூனியம், செய்வினை போன்ற சொற்களுடன் தொடர்புடையவையா? மாந்தர்=மனிதர்? -- மாஹிர் 16:42, 27 மே 2010 (UTC)
- மாந்தர் என்ற சொல் மனிதர்களைக் குறிப்பது தான். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலும் வடமொழிச் சொற்களோடு இதற்கு தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை. இந்தக் கட்டுரையின் முந்தையத் தலைப்பைப் பரிந்துரைத்தது செல்வா தான். அவர் தெளிவுபடுத்தக்கூடும். -- சுந்தர் \பேச்சு 04:32, 28 மே 2010 (UTC)
- மாஹிருக்கு ஏற்பட்ட சந்தேகம் எனக்குமுள்ளது. மாந்தர்+உருவகம் = மாந்தருருவகம் என்று வரலாம். மாந்தவுருவகம் எப்படி? என்பது புரியவில்லை... செல்வா விளக்கமளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:41, 6 சூலை 2011 (UTC)
- மனிதத் தன்மையை மாந்தம் என்பதால் ஒருவேளை மாந்தம்+உருவகம் எனக் கொள்ள வேண்டுமோ என்னவோ? -- சுந்தர் \பேச்சு 18:56, 24 சனவரி 2012 (UTC)
- மன்னிக்கவும், இவ்வுரையாடலை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். மாந்தர் என்பது பெயரடையாக (பெயர் உரிச்சொல்லாக வரும் பொழுது, adjective) மாந்த என ஆகும். மாந்த உணர்ச்சி, மாந்த அறிவு என்பதுபோல. சொந்த ஊர் என்பது சொந்தவூர் என்பதுபோல் மாந்தவுருவகம். மாந்தவுணர்ச்சி, மாந்தவுரு என்பது போல. கந்தன்/ர் + சட்டி = கந்தசட்டி (கந்தசஷ்டி). மந்தம்+கதி (மந்தமான கதி, விரைவு) = மந்தகதி.
- மாகிர், "மாந்திரியம், மந்திரித்தல், மாந்திரீகம்" என்பன மந்திரம் (மந்த்ர) என்பதன் வடமொழி-தமிழ்மொழி கலப்பு ஆக்கம். "மாந்த சக்தி" = மனித சத்தி என்பது சரியே. "மாந்தர்=மனிதர்?" ஆம்! வடமொழியில் சொல்லலக்கங்களிலும் சந்திகளிலும் பல வகைகள் உண்டு. சுகம் என்பது சௌக்யம் ஆகும், அதே போல பல வகை சந்தி விதிகளும் உண்டு. தீர்க்க சந்தி என்பது தேச + அபிமானம் = தேசாபிமானம்,; சிவ + ஆலயம் = சிவாலயம் என்பது போல வரும். அதாவது அ, ஆ என்று கடைசியாக முடியும் நிலைமொழிகள் (முதலில் வரும் சொல் நிலை மொழி) ஆ என நீள்தல். அதுபோல் குணசந்தி, விருத்தி சந்தி என்றெல்லாம் பல வகை உண்டு. உண்டு. மன்+ தர்மம் என்பது வடமொழி புணர்ச்சியின் படி மனோதர்மம் ஆகும். மந்த்ர என்பது முதலெழுத்து நீண்டு தமிழில் மாந்திரீகம் ஆகும். தந்த்ர என்பது தாந்த்ரீகம் > தாந்திரீகம் ஆகும். தேனி சுப்பிரமணி, மன்னிக்கவும் வெகுநாட்களுக்குப்பின் இப்பக்கத்தைப்பார்ப்பதால் காலம் கடந்த விடை!--செல்வா 21:28, 24 சனவரி 2012 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, செல்வா.
- என் சொந்த ஊர் எட்டயபுரத்துக்கு அருகேயுள்ள அறுபடை வீடான திருச்செந்தூரில் கந்தசட்டி சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்பகுதி மக்களும் சட்டிக்குப் போறியா? எனக் கேட்பது வழக்கம். ஏனத்தைச் சட்டி எனச் சொல்லிப் பழகிய எனக்கு விந்தையாக இருந்தது. பின்னர், குற்றாலக் குறவஞ்சியில் இந்த ஒரு சொல் (சட்டி) இருபொருள் நிலையை வைத்து ஒரு அழகான இரட்டுறமொழிதற் பாடலைப் படித்துக் களித்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:46, 25 சனவரி 2012 (UTC)
- சட்டி, கொக்கு ஆகிய இருபொருட் சொற்களை வைத்து இருபொருள் தரும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்.
மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி ஒரு கொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமுங்க் கொண்டார் சைவர் தாமுங் கொண்டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதைப்
பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே