பேச்சு:மின்னிலையாற்றல்

Add discussion
There are no discussions on this page.

இந்த பக்கம் மின்திறன் என்ற பக்கத்தை போலவே இருப்பதால் இதை மற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் . யாரேனும் உதவி செய்ய வேண்டுகிறேன்.--−முன்நிற்கும் கருத்து Inbamkumar86 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆமாம், நீங்கள் எழுதியுள்ள கட்டுரை மின் திறன் (electric power) என்பது பற்றி உள்ளது. மின் ஆற்றல் அல்லது மின் சக்தி பற்றிய கட்டுரை தனியாக எழுதப்பட வேண்டும். இவை பற்றி நீங்கள் எழுத விரும்பினால் தலைப்பு அப்படியே இருக்க கட்டுரையில் உள்ளவற்றை நீக்கி விட்டு புதிதாக எழுதலாம்.--Kanags \பேச்சு 09:23, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
மின் திறன் வேறு, மின் ஆற்றல் வேறு. ஆனால் மின்னாற்றல் என்னும் கட்டுரை முற்றிலுமாக மாற்றி எழுதவேண்டும். நான் எழுத எண்ணிய கட்டுரைதான், ஆனால் நெடுநாட்களாக எழுதாமல் உள்ளது. விரைவில் சுருக்கமாகவேனும் இக்கட்டுரையை எழுதுகிறேன். --செல்வா 12:46, 11 ஆகஸ்ட் 2009 (UTC)

நான் விக்கிக்கு புதியவனாக இருப்பதால் சில இடங்களில் எனக்கு தடுமாற்றங்கள் ஏற்படுகிறது . எனது கட்டுரைகள் மிகவும் சிறிதாக உள்ளது. எனினும் நான் அதனை சரி செய்து விடுவேன் . ஆனால் மிக அவசரமாக தெரிந்து கொள்ளவேண்டியது என்ன வென்றால் எப்படி ஒரு தலைப்பை மாற்றுவது. அதாவது நரம்பு இழை என்ற தலைப்பை நரம்பிழை என்று எப்படி மாற்றுவது என்று எனக்கு யாராவது சொல்ல வேண்டும் .

கட்டுரைப் பக்கத்தின் மேலே உள்ள பிரிவுகளில் (tab), நகர்த்துக என ஒரு பிரிவுப்பட்டை இருக்கும். அதனைச் சொடுக்கித் தலைப்பை மாற்றலாம். தக்க காரணங்களும் தருதல் நல்லது.--செல்வா 13:20, 11 ஆகஸ்ட் 2009 (UTC)

மின்னாற்றல், மின்னிலையாற்றலுக்கு வழிமாற்றுப் பக்கமாக உள்ளது. மின்னாற்றல் என்பது electric energy. ஆனால் மின்னிலையாற்றல் என்பது electrostatic energy. இரண்டும் வேறுவேறாதலால் இவ்வழிமாற்றை நீக்குமாறு வேண்டுகிறேன். --பிரவீன் (பேச்சு) 08:56, 16 சனவரி 2014 (UTC)

Return to "மின்னிலையாற்றல்" page.