பேச்சு:முடுக்கம்

Add topic
There are no discussions on this page.

திசைவேகம் என்பது vector velocity என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதனை நெறிவிரைவு அல்லது திசைவிரைவு அல்லது விரைவு திசையன், விரைவு நெறியன் என்னும் சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து எடுக்கலாம். விரைவு என்னும் சொல் விர்ரென்று விரைவது என்று தெளிவாகா உணர்த்துவது. இயல்பாகவே நெறி/திசைப் பண்பு கொண்டிருப்பதை உணர்த்துவது. பொது மக்கள் பேச்சில் விரைசலா (விரசலா வா, விரசலாப் போனான்) என்னும் ஆட்சி பெருவழகாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒலிக்குறிப்பாக VROOM என்று எழுதிக்காட்டுவதும், தமிழில் விர் என்று கூறுவதும் பொருந்தி வருவதும் நோக்கத்தக்கது. தமிழ்நாட்டுப் போக்குவரத்துத் துறையிலும் விரைவுந்து என்னும் சொல்லாட்சி உள்ளது. விரைவு என்பது இயல்பான சொல். எனவே விரைவு என்னும் சொல்லை ஆளப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 15:59, 19 செப்டெம்பர் 2008 (UTC)

ஆங்கில விக்கிக் கட்டுரையில் velocity, speed என இரு சொற்கள் ஆளப்பட்டுள்ளன. தமிழ் விக்சனரியில் velocity என்பதற்குத் திசைவேகம் என்றும், speed என்பதற்கு வேகம், விரைவு ஆகிய சொற்களும் தரப்பட்டுள்ளன. விரைவு என்பது நான் அறிந்தவரை fast என்ற பொருளில்தான் வருகிறது. velocity என்ற பொருள்படுவதாகத் தெரியவில்லை. சென்னைப் பல்கலை அகரமுதலியும் விரைவு என்பதற்கு Swiftness, celerity ஆகிய பொருள்களைத்தான் தருகிறது. மயூரநாதன் 16:19, 19 செப்டெம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முடுக்கம்&oldid=291539" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முடுக்கம்" page.