பேச்சு:மொழிபெயர்ப்பு (உயிரியல்)

மொழிபெயர்ப்பு (உயிரியல்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஈனியல் கோடல் தொகு

@5anan27: ஈனியல் கோடல் என்பதில் ஈனியல் என்பதன்மூலம், மரபியல் என்பதைக் குறிக்கிறீர்கள் என்று கண்டுபிடித்தேன். ஆனால், கோடல் என்பது எதைக் குறிக்கிறது? இந்தக் குறிப்பிட்ட துணைத் தலையங்கத்தின் உள்ளேயும், இதற்கான விளக்கத்தைக் காணோம். எதைக் குறிக்கிறது என்று கூறுவீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 13:57, 13 ஏப்ரல் 2017 (UTC)

அடைப்புக்குள் ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிடாதது தவறு தான். கோடல் = Coding. ஒலிப்பு ஒற்றுமை கொண்ட கலைச்சொற்களே நினைவுகூர்வதற்கு இலகுவானவை என்பது என் (தனிப்பட்ட  ) கருத்து. கோடல் என்பதற்கு தமிழில் கொள்ளுதல், படித்தல் என்று பொருள் சொல்லப்படுகின்றது. எனவே, தாயனைச் செய்திகள், அமினோவமிலச் செய்திகளாக பொருள்கோடல் நிகழ்கின்ற செயற்பாடான codingஐ "கோடல்" என்று மொழியாக்கினேன். தங்கள் கருத்தைச் சொல்லுங்கள். --5anan27 (பேச்சு) 15:20, 13 ஏப்ரல் 2017 (UTC)
Code என்பதைக் குறியீடு என்பதுவும், Coding என்பதைக் குறியாக்கம் என்பதுவும், மிக எளிமையான, பரவலாகப் பயன்படுத்தப்படும் நல்ல தமிழ்ச் சொற்களாகவே உள்ளன. எனவே Genetic code என்பதை மரபுக்குறியீடு என்றும், Coding sequence என்பதை குறியீட்டு வரிசை என்பதும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய சொற்களாகவே உள்ளன. மேலும் மரபுக்குறியீடு என்பதற்கு ஏற்கனவே கட்டுரையும் உள்ளது. எனவே 'ஈனியல் கோடல்' என்பதற்குப் பதில் 'மரபுக்குறியீடு' என்பதையே பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. எனக்கு தமிழ்ச் சொற்களின் பரிச்சயம் குறைவா, அல்லது 'ஈனியல்', 'கோடல்' என்பவை உண்மையிலேயே சிறிது கடினமான, பொது வழக்கில் அதிகம் பயன்பாட்டுக்கு உட்படாத சொற்களா எனத் தெரியவில்லை. எனக்கு இந்தச் சொற்கள் தெரிந்திருக்கவில்லை. என்னைப் பொறுத்தளவில், கலைச்சொல்லாக்கத்தில், மிக எளிமையாக, அனைவராலும் புரிந்துகொள்ளப்படக் கூடிய, முடிந்த வரையில் நல்ல தமிழ்ச் சொற்களாக இருந்தால் நல்லது. எ.கா. உயிரணு, நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி. அப்படி சரியான பொருளுடன் கலைச்சொல்லாக்குவதற்கு நேரம் கிட்டாதபோது, குறிப்பிட்ட ஆங்கிலச் சொற்களையே ஒலிப்பு ஒற்றுமையுடன், ஒலிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். எ.கா. பாக்டீரியா, டி.என்.ஏ. என்பன. ஆனால் ஒலிபெயர்ப்புச் செய்யும்போது அவை கூடியவரையில் குறிப்பிட்ட ஒலிப்பைத் தருவது நல்லது எனத் தோன்றுகிறது. செல்வா அவர்கள் பேச்சு:தூதாறனை இல் இதையே குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஆர்.என்.ஏ யை ஆறனை என்னும்போது, சரியான ஒலிப்பும் வராமல், பொருளும் புரிந்துகொள்ளப்பட முடியாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது. அதனால்தான் இந்தக் குழப்பம். மேலும் பல கலைச் சொற்கள் முன்னரே உரையாடப்பட்டு, கட்டுரைகள் உருவாக்கப்பட்ட பின்னர், அல்லது தலைப்பு மாற்றம் செய்யப்பட்ட பின்னர், ஒரு சீர்மைக்காகக் குறிப்பிட்ட சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.--கலை (பேச்சு) 21:00, 13 ஏப்ரல் 2017 (UTC)
Return to "மொழிபெயர்ப்பு (உயிரியல்)" page.