பேச்சு:யுனைட்டட் இந்தியா காலனி

யுனைட்டட் இந்தியா காலனி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled தொகு

இந்தக் குடியிருப்பின் மக்கள் தொகை, பரப்பளவு எவ்வளவு? மாநகராட்சியில் இது ஒரு தனி வட்டமா? போன்ற தகவல்களைத் தர வேண்டுகிறேன். நகரம், மாநகரங்களில் வட்டம் (ward) அளவுக்கும், ஊர்ப்புறங்களில் ஊராட்சி அளவுக்கு உள்ள கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் பதியலாம் என்று கருதுகிறேன். அதற்கும் கீழ் நிலையில் உள்ள இடங்களை தனிக்கட்டுரைகளாக ஆவணப்படுத்தினால் directory போல் ஆகி விடும் வாய்ப்பு உண்டு. இக்குடியிருப்புக்கு என தனிச்சிறப்புகள் ஏதும் காணப்படாத நிலையில், இக்கட்டுரை கலைக்களஞ்சியத்தில் இடம்பெறலாமா என்பது குறித்து பிறர் கருத்தை வேண்டுகிறேன். கலைக்களஞ்சியத்துக்கும் தகவல்களைக் குவித்து வைக்கும் directory போன்றவற்றுக்குமான வேறுபாட்டைத் தமிழ் விக்கிபீடியா பேண வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். --Ravishankar 14:50, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

//கலைக்களஞ்சியத்துக்கும் தகவல்களைக் குவித்து வைக்கும் directory போன்றவற்றுக்குமான வேறுபாட்டைத் தமிழ் விக்கிபீடியா பேண வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.//:-) --கோபி 14:54, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ரவி, கோபி நீங்கள் இருவரும் கூறுவது மிகவும் சரியானது. ஆனால் விக்கிபீடியா சற்று வேறுபட்ட கலைக்களஞ்சியம். எல்லா நாட்டு எல்லா ஊர்களும், சிறுசிறு செய்திகளும் (அவை உண்மையாய் இருப்பின்) இடம் பெறுவதைப் பார்க்கலாம். ஆங்கில விக்கியிலும் பிற மொழி விக்கிகளிலும் இப்படி உண்மைகள் "குவி"க்கப்பட்டுளது. அச்சிடப்படும் கலைக்களஞ்சியங்கள் பணச்செலவுகளையும் தொகுப்பாளர்களின் நேரத்தையும் கணக்கில் கொண்டு, மிக விழிப்பாக சேர்க்கத்தகுந்தன யாவை என்று தேர்ந்தெண்ணி பதிவு செய்தார்கள். விக்கி அப்படிப்பட்டதல்ல. இது எதைவேண்டுமானாலும் குவிக்கும் இடம் இல்லை என்றாலும், உண்மைகள், "பயனுடைய" குறிப்புகள் பதிவு செய்து பகுத்து வைக்கும் இடம். இதில் பயன் நிறைந்தவையும், பயன் அருகியவையும் இருக்கும். எது பயன்படும் எப்பொழுது பயன்படும் என்பதெல்லாம் கணிப்பது அரிது. இப்புதிய பயனர் பங்களித்திருப்பதைப் பாராட்டுவோம். நன்றாகவும் நடுநிலையுடனும் எழுதியுள்ளார். இவர் பயனுடைய பல கட்டுரைகளை எழுதக்கூடியவர் என்று நினைக்கிறேன். இவருடைய இக்கட்டுரையை நான் வரவேற்கிறேன். அவர் தனக்குத் தெரிந்த செய்திகளை அழகாகவே தந்திருக்கிறார் என்பது என் கணிப்பு. ரவி கேட்டிருக்கும் செய்திகளையும் திரட்டி சேர்ப்பார் என நினைக்கிறேன்.--செல்வா 16:19, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செல்வா, கட்டுரையில் ஒரு குறையும் இல்லை. வரைபடத்துடன் நன்றாக எழுதி இருக்கிறார். அனேகமாக, இவர் இந்தக் குடியிருப்பில் வசிப்பவராக இருக்கலாம். ஆர்வ மேலீட்டில் சென்னை முதலிய கட்டுரைகளில் இருந்தும் இணைப்பு கொடுத்து இருக்கிறார். ஆனால், சென்னை கட்டுரையில் இருந்து இணைப்பு தரும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தெரியவில்லை. சென்னையில் 5 ஆண்டுகள் வாழ்ந்துள்ள நான் இன்று இப்பகுதி குறித்து கேள்விப்படுகிறேன். எனவே தான், இக்கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் தான் இடம்பெற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் சொல்வது போல் சிறிய இடங்களைக் குறித்த தகவல்களைத் தரலாம் தான். அடையாறு, கிண்டி, எழும்பூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை என்று கொஞ்சமாவது வணிக, ஆட்சி முக்கியத்துவம் வாய்ந்த சிறு பகுதிகள் குறித்து தாராளமாக எழுதலாம். ஆனால், குடியிருப்பு அளவுக்கு இறங்குவது தேவையா என்று முடிவெடுப்பது அவசியம். தமிழிணையத்தில் பயனுள்ள தகவல்கள் இடம்பெற வேண்டும் தான். ஆனால், அவை அனைத்துக்கும் தமிழ் விக்கிபீடியாவே மையக்களமாக அமையத் தேவை இல்லை. இப்படி நான்கு சாலைகளுக்குள் அடைபடும் குடியிருப்புகள் சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உள்ளனவே? பயனுள்ள நேர்த்தியான கட்டுரை என்றால் ஒவ்வொரு சாலை, குறுக்கு சாலைக்கும் கூட உண்மையான தகவல்களை வைத்து கட்டுரை எழுத முடியும். அச்சுக் கலைக்களஞ்சியத்தின் பணம், இட நெருக்கடிகளைத் தாண்டி இணையக் கலைக்களஞ்சியமாக இருந்தாலும் இன்னின்ன இடம்பெறலாம் என்ற குறைந்தபட்ச வரையறையாவது இருத்தல் நலம். புதுப்பயனர்களை நாம் அரவணைத்துச் செல்லும் வேளையில் அவர்கள் மனம் நோகக் கூடாது என்று ஒரேயடியாக கலைக்களஞ்சிய வரையறைகளில் இருந்து விலகிச் செல்லவும் இயலாது.

விக்கியா தளத்தில் சென்னைக் குடியிருப்புகளுக்கு என்று தனி விக்கியா தொடங்கி அங்கு எழுதினாலும் இணையத்தில் கிடைக்கும். தேடு பொறிகளில் சிக்கும். அங்கு கலைக்களஞ்சிய வரையறைகள் தேவைப்படாது. முழு சுதந்திரத்துடன் உண்மையான தகவல் என்ற அடிப்படை ஒன்றைக் கொண்டு மட்டும் உருவாக்கி எழுதலாம். உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு இப்படி தனி விக்கியா அமைத்து எழுதலாம். அதனால், ஒருவர் முக்கியமானவரா என்று நிர்ணயிக்கும் சங்கடமான விவாதங்களை விக்கிபீடியாவில் தவிர்க்கலாம். --Ravishankar 16:56, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ரவி, நீங்கள் சொல்வது எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சிறுறு இடங்களும் ஆங்கில விக்கி முதல் பல மொழி விக்கிகளில் பதிவாகி உள்ளது. கணபதிபாளையம் பற்றி ஒரு கட்டுரை உள்ளது. என் உறவினர் அமெரிக்காவில் உள்ள கான்சஸ் மாநிலத்தில் லார்னடு என்னும் ஒரு சிற்றூரில் வாழ்ந்திருந்தார் (அப்பொழுது ஊரின் மக்கள் தொகை 1200) இப்பொழுது 3800. குத்து மதிப்பாக ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன். (பார்க்கவும்: en:Larned, Kansas). நூறுபேர் வாழும் சிறு இடங்கள் பற்றியும் "கட்டுரை"கள் இருக்கும். நீங்கள் ஏன் இப்படி கவலைப்படுகின்றீர்கள் என எனக்கு விளங்க வில்லை. நோபல் பரிசு பெற்றவர்கள் பகுப்பில் சென்று படிப்பவர்களும் இருப்பர், மேடை நாடக நடிகர்கள் பட்டியலில் சென்று படிப்பவர்களும் இருப்பர். இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டாம் (இப்போதைக்காவது) என்பது என் வேண்டுகோள். மிகுந்த தேவை இல்லாமல் தடைபோட வேண்டாமே. ஆங்கில விக்கியில் உள்ள அத்தனையும் சேர்த்தாலும் சில `கிகா `பைட்டுகளே ஆகும். ( பார்க்கவும்). நீங்களும் கோபியும் சொல்வதை நான் மிகவும் நன்கு உணர்பவன். "தகவல்" உலகில் இதெல்லாம் ஒரு புதிய போக்குதான் -இதன் பயன்-இடர், தேவை-தேவையற்றது என்பதெல்லாம் பற்றி நிறைய கருத்தாடலாம்தான். களைவது நொடிப்பொழுதில் நிகழும், ஆக்குவது கடினம். எனவே எதை ஆக்க வேண்டும் என்பதை ஆர்வலர்கள் தேர்ந்து கொள்ளட்டுமே. அது அவர்கள் நேரம், உழைப்பு. நல்ல தமிழில், நல்ல நடையில், கருத்துகளுடன் இருந்தால் அவற்றை வரவேற்போமே. அருள்கூர்ந்து சற்று இறுக்கம் தளர்த்தி, வளர்முகமாக எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 17:23, 28 செப்டெம்பர் 2007 (UTC) (ஆங்கில விக்கியிலும் நெதர்லாந்து மொழி விக்கியிலும், பிற விக்கிகளிலும், கன்சாஸ் மாநிலத்தில் பாஸ்ஸெடில் 22 பேர் உள்ள "நகரம்" பற்றி உள்ள கட்டுரையைப் பாருங்கள் (Basset, Kansas))--செல்வா 21:53, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நானும் செல்வாவின் கருத்துடன் முற்றிலும் ஒத்துப்போகின்றேன். ஆங்கில விக்கியில் பார்த்தால் தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரை, தமிழர் ஒரு சிறப்புக் கட்டுரை. ஆனால் ஆங்கிலமோ, ஆங்கிலேயர்களோ சிறப்புக் கட்டுரைகள் இல்லை. ஆங்கில விக்கியில் நிகழபட விளையாட்டுக்கள் பற்றி நிறைய துல்லியமான கட்டுரைகள் உண்டு. என்ன சொல்ல வருகின்றேன் என்றால், கலைக்களஞ்சியம் என்றால் இதுதான் என்று ஒரு ஆக இறுகிய வரையறையக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதல்ல, அதற்குரிய ஒரு வழிக்காட்டலும் எம்மிடம் இல்லை. எனவே, பரந்த உள்வாங்கலை மேற்கொள்ளுவதே தற்போதைய நிலையில் தமிழ் விக்கிபீடியாவிற்கு நன்று. ஒழுங்குபடுத்தல் செய்வது, சீரமைப்பது, அதுவே எமக்குரிய உண்மையான கடினமான பணியாகும். --Natkeeran 20:54, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செல்வா, நற்கீரனின் கருத்துடன் உடன்படுகிறேன். ஒழுங்குபடுத்தல் செய்வது, சீரமைப்பது, அதுவே எமக்குரிய உண்மையான கடினமான பணியாகும்.--Kanags 22:24, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

  யுனைட்டட் இந்தியா காலனி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  யுனைட்டட் இந்தியா காலனி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "யுனைட்டட் இந்தியா காலனி" page.