பேச்சு:யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7
1. தலைப்பில் யூ ஈ எஃப் ஏ என்றே இருக்கலாமே?
2. வெற்றியாளர் கோப்பை என்பதை விட வாகையர் கூட்டிணைவே (Champions League) பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். ஏனெனில் முன்னர் இருந்த கப் வின்னர்ஸ் கப்-புக்கு கோப்பை வெற்றியாளர் கோப்பை என பெயரிடலாம். குழப்பம் வராது. --Senthilvel32 (பேச்சு) 19:58, 30 மே 2012 (UTC)
- செந்தில்வேல், இக்கட்டுரையை நீங்கள் தொகுத்து சீராக்க வேண்டுகிறேன். தலைப்பையும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு கோப்பை என்று மாற்றலாம். ஒரே சீராக Champions என்ற சொல்லிற்கு வாகையர் என்றே விக்கி முழுமையும் பயன்படுத்துவது நல்லது.--மணியன் (பேச்சு) 20:10, 30 மே 2012 (UTC)
- நிச்சயமாக தொகுத்து சீராக்குவேன். Trophy, Cup என்று வரும் இடங்களில் மட்டும் 'கோப்பை' என்பதை பயன்படுத்தலாம். அது போல பல இடங்களில் வருகிறது. தலைப்பை எப்படி மாற்றுவது?--Senthilvel32 (பேச்சு) 20:38, 30 மே 2012 (UTC)
- தலைப்பைத் திருத்த முடியாது; பக்கத்தை வேறு தலைப்பிற்கு நகர்த்தத் தான் முடியும். மேலே நட்சத்திரக் குறியை அடுத்துள்ள drop down பட்டியலில் நகர்த்தவும் தெரிவு செய்யுங்கள். வருகின்ற படிவத்தில் புதிய தலைப்பை இடுங்கள். காரணத்தையும் இடுங்கள். பின்னர் பக்கத்தை நகர்த்து பட்டனை அழுத்துங்கள். உங்கள் பயிற்சிக்காக நீங்களே செய்வீர்கள் என விட்டுள்ளேன்.--மணியன் (பேச்சு) 00:31, 31 மே 2012 (UTC)
- நன்றி. அவ்வாறு செய்துவிட்டேன்.--Senthilvel32 (பேச்சு) 09:24, 1 சூன் 2012 (UTC)
- போதுமான அளவுக்கு இக்கட்டுரை மேம்பட்டுள்ளது என எண்ணுகிறேன். கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள கூகுள் தமிழாக்கக் கட்டுரை என்ற சிறு பெட்டியை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்?--Senthilvel32 (பேச்சு) 03:37, 4 சூன் 2012 (UTC)
- நன்றி. அவ்வாறு செய்துவிட்டேன்.--Senthilvel32 (பேச்சு) 09:24, 1 சூன் 2012 (UTC)
- முழுவதும் உரை திருத்தி விட்டால் அதை நீக்கி விடுங்கள் செந்தில்.. பிறகு இப்பக்கத்தில் (பேச்சுப் பக்கத்தில்) பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பை இணைத்து விடுங்கள்--சண்முகம் (பேச்சு) 04:57, 4 சூன் 2012 (UTC)