பேச்சு:ரோசா லக்சம்பேர்க்

ரோசா லக்சம்பேர்க் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
ரோசா லக்சம்பேர்க் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
@Thiyagu Ganesh: பட்டியல்களில் உள்ள ஆங்கில (சிவப்பு) இணைப்புகளை நீக்கி விடுங்கள். ஆங்கில சிவப்பு இணைப்பு இருப்பதால் என்ன நன்மை? அத்தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை நாம் எப்போதும் எழுதப்போவதில்லை. (ரோசா லக்சம்பேர்க் ஆங்கிலத்தில் இந்நூல்களை எழுதியிருக்க மாட்டார். இடாய்ச்சு மொழியிலேயே எழுதியிருப்பார்.) உரைகளுக்கு இணைப்புத் தாருங்கள். அத்துடன் போட்டிக் கட்டுரைத் தலைப்புகளில் பட்டியல்கள் எழுதி கட்டுரையை நிரப்பலாமா? அதற்கு போட்டி விதிகள் இடம் கொடுக்கிறதா?--Kanags \உரையாடுக 23:02, 16 சூன் 2017 (UTC)Reply
@Kanags: வணக்கம். கட்டுரையை திருத்தியமைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி. இந்த கட்டுரையில் நான் புதிதாக பட்டியலை உருவாக்கி இட்டு நிரப்பவில்லை. அதன் ஆங்கிலப் பக்கத்தில் இருந்தவைற்றைத்தான் மொழிபெயர்த்தேன். வெறும் பட்டடியல்களை மட்டுமே நான் எழுதி நிரப்பவில்லை. உரைகளும் எழுதியிருக்கிறேன். அதற்கு உரிய இணைப்புகளும் கொடுத்துள்ளேன். பார்க்க.
==கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தில் பிரபலம்==
:*புகழ்பெற்ற பல்கேரிய எழுத்தாளரான ஹிரிஸ்த்தோ சிம்ரென்ஸ்கி ரோசா லக்சம்பேர்க்கின் பொதுவுடைமை 
சித்தாந்தங்களை அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தான்  தான் எழுதிய ரோசா லக்சம்பேர்க் என்ற பாடலில் 
மெச்சியுள்ளார்.
:*ரோசா லக்சம்பேர்க் (1986 ல் செருமானிய மொழி :Die Geduld der Rosa Luxemburg) மார்க்கரெட் 
வோன் துரோத்தா இயக்கிய இப்படத்தில் லக்சம்பேர்க்காக பார்பரா சுகோவா நடித்து 1986 ஆம் ஆண்டு இதற்காக கேன்ஸ் 
திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.
:*1992 ல் கியூபெக் ஓவியர் ஜீன்-பவுல் ரியோபிலி லுக்சம்பேர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அழியாத முப்பது 
சுவர் ஓவியங்களைத் தீட்டினார். இவை கியூபெக் நகரத்திலுள்ள  நுண்கலை தேசிய 
அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்பங்களிப்பாளர் போட்டிக் கட்டுரைகளில் உள்ள நிரல்கள், பட்டியல்களை போட்டிக்காக மொழிபெயர்க்கக்கூடாது என்ற விதிகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--- ThIyAGU 06:32, 17 சூன் 2017 (UTC)

அவ்வாறு கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவ்வாறிருந்தால் நல்லது. ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கும் போது மேற்கோள்களையும் சேர்த்துத் தாருங்கள். பட்டியலில் உரை ஆங்கிலம் எனத் தந்திருக்கிறீர்கள். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்க மாட்டார். எதற்காக அந்த நிரல் இங்கு தேவை.--Kanags \உரையாடுக 07:15, 17 சூன் 2017 (UTC)Reply
ஒருவர் போட்டி இலக்கை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பல கட்டுரைகளிலும் முதன்மை உரை இல்லாத பகுதிகளைச் சேர்த்தால் தவிர்க்கச் சொல்லலாம். ஒரு சில கட்டுரைகளில் மட்டும் இயல்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் பட்டியல்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது ஏற்புடையதே. --இரவி (பேச்சு) 07:41, 17 சூன் 2017 (UTC)Reply
Return to "ரோசா லக்சம்பேர்க்" page.