பேச்சு:வனவிலங்குகள் காப்பகம்
ஒரு சந்தேகம், நிவர்த்தி செய்து திருத்தவும் சரணாலயம் = sanctuary
காப்பகம் = zoo/breeding center
--கார்த்திக் 19:32, 29 ஜூலை 2008 (UTC)
sanctuary என்பதற்குப் பின்வரும் பொருள்கள் உள்ளன:
- (1): a place of refuge and protection (2): a refuge for wildlife where predators are controlled and hunting is illegal.
இதனால் sanctuary ஐக் காப்பகம் எனலாம். சரணாலயம் என்பது ஏறத்தாழ அதே பொருள் கொண்டதே ஆனாலும் அது தமிழ்ச் சொல் அல்ல.
zoo என்பதன் பொருள்:
- (1): a garden or park where wild animals are kept for exhibition (2): a collection of living animals usually for public display.
இது பொதுவாக விலங்கினக் காட்சிச் சாலை என வழங்கப்படுகிறது. மிருகக் காட்சிச்சாலை எனவும் சொல்வதுண்டு. மயூரநாதன் 15:21, 30 ஜூலை 2008 (UTC)
ஓ! சரணாலயம் வேறு மொழி சொல்லா? தகவலுக்கு நன்றி :)--கார்த்திக் 18:46, 31 ஜூலை 2008 (UTC)
காட்டு விலங்குகள் காப்பகம்
தொகுகாட்டு விலங்குகள் காப்பகம் என்ற தலைப்பை மாற்றலாமா :) --ரவி 16:58, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
en:Animal sanctuary என்பதற்கு விலங்குகள் புகலரண் என்பதையும் wildlife refuge என்பதற்கு காட்டு விலங்குகள் காப்பகம் என்பதையும் பயன்படுத்தலாம். ஏனெனில் காப்பகம் என்பது செயற்கையாக காக்கப்படும் இடம் என்பதுவாய் பொருள்தரக்கூடியது--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:41, 9 சூலை 2012 (UTC)