பேச்சு:வரதட்சணை மரணம்
குறிப்பு: இலங்கையில் தமிழர் சூழலில் வரதட்சணை மரணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றன. இதற்கு பொதுவாகக் கூறப்படும் காரணம், திருமணத்தின் பின் பெண் வழி சார்ந்தே தனிக்குடித்தனமாகவோ அல்லது பெற்றொருடனோ வாழுகின்ற குடும்ப முறைமை காணப்படுதலாகும். அதாவது தமது தாய் தந்தையை அவர்களது வயோதிபத்தில் பெண் பிள்ளைகளே பராமரிப்பதும் வைத்துப் பாதுகாப்பதும் மரபாக உள்ளது. இதனால் மாமியார் கொடுமை இருப்பதில்லை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:28, 9 மார்ச் 2015 (UTC)
- இலங்கைத் தமிழரிடையே காணப்படும் இதுபோன்ற வழக்கம் உண்மையில் வரதட்சணை என்னும் கருத்துருவுக்குள் அடங்காது. கிழக்குமாகாண நடைமுறைபற்றி எனக்கு அதிகம் தெரியாது. யாழ்ப்பாணப் பகுதியில் சீதனம் எனப்படும் இம்முறை பெண்ணின் பெற்றோர்களால் பெண்ணுக்கே வழங்கப்படுவது. இக்காலத்தில் சில வேளைகளில் சீதனத்துடன் பெரும்பாலும் பணமாக மாப்பிள்ளையின் பெற்றோருக்கு நன்கொடை வழங்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், சிவகுமார் குறிப்பிட்டிருப்பதுபோல் பெண்கள் புகுந்த வீட்டில் வாழும் நடைமுறை இல்லாதபடியால் இலங்கையில் வரதட்சிணை மரணம்போல் சீதன மரணமோ, நன்கொடை மரணமோ இடம்பெறுவது அரிது. --- மயூரநாதன் (பேச்சு) 18:02, 9 மார்ச் 2015 (UTC)
- நன்றி மயூரநாதன். மாப்பிள்ளையின் பெற்றொருக்கு வழங்கப்படும் நன்கொடையை இந்தியாவின் உள்ள வரதட்சணையில் இருந்து கருத்தியல் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது கடினம். மட்டக்களப்பு பகுதியில் சீதனம் என்ற பெயரிலேயே இதுவும் அழைக்கப்படுகின்றது. சில வேளைகளில் மாப்பிள்ளை கட்டும் தாலிக்கொடி முதலான செலவுகளை முன்னிறுத்தியும், இந்த நடைமுறை உள்ளது. யாழ்ப்பாணம் போலவே இங்கும் மாப்பிள்ளையின் பெற்றோர் வழங்கும் முதுசமும் நடைமுறையில் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:15, 10 மார்ச் 2015 (UTC)
Start a discussion about வரதட்சணை மரணம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வரதட்சணை மரணம்.