கோபி, நீங்கள் கட்டுரையில் இருந்த "மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது." என்பதை மாற்றி பயணிக்க வல்லது என்று எழுதியுள்ளீர்கள். பயணம் என்பது இங்கு தவறு. பயணித்தல் என்னும் சொல்லாட்சியும் பிற இடங்களிலும் மிகவும் தவறானசொல்லாட்சி (தமிழைக் கெடுக்கும் சொல்லாட்சி). இச் சொல்லாட்சி பரவி வருவதையும் "பெரிய" எழுத்தாளர்களும் ஆள்வதையும் அறிவேன். பெரிய எழுத்தாளர்கள் முயற்சிக்கிறேன் என்றும் பிற அடிப்படையான தவறுகளும் செய்கின்றார்கள். எனவே எளிதான சொல்லான செல்லுகின்றது என்பதை பயணிக்கின்றது என்று சொல்வது பிழையான போக்கு. இக் கட்டுரையில் வல்லூறு விரைந்து பறப்பதை பயணிக்கின்றது என்று கூறுவது தவறு. ஓர் ஊரில் இருந்து ஓர் ஊருக்குப் போவது பயணம் (கடன்பெற்ற பெயர்ச்சொல்). பயணம் செய்வோரை பயணி என்றும் ஆக்கியிருக்கின்றோம். இப்பெயர்ச்சொல்லில் இருந்து வினைச் சொல்லாக பயணி என்று இன்னொரு சொல்லும் ஆக்கி பின்னர் பயணிக்கிறேன் முதலிய வினைவடிவங்களையும் பெறச் செய்துள்ளோம். இச்சொல்லை எல்லா இடங்களிலும் ஆள்வது சரியாகாது. --செல்வா 18:58, 18 மார்ச் 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:06, 14 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வல்லூறு&oldid=140613" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வல்லூறு" page.