விசை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கயிற்றில் கட்டிய கயிறொன்றின் என்பதை கொஞ்சம் மாற்றி எழுதலாமே..தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இரண்டு மூன்று படித்து பார்க்க வேண்டியிருந்தது.--ரவி (பேச்சு) 20:23, 26 அக்டோபர் 2005 (UTC)Reply

கழுத்தில் கட்டிய கயிறு என்பதை எண்ணிக்கொண்டு, கயிற்றில் கட்டிய கயிறு என்று தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. ஒவ்வொருவர் எழுதுவதையும் மற்றவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது விக்கிபீடியா வெற்றிகரமாக இயங்குவதற்கான முக்கியமான அடிப்படைகளில் ஒன்று. அது தமிழ் விக்கிபீடியாவிலும் உள்ளது என்பதையிட்டு மகிழ்ச்சி. Mayooranathan 06:12, 27 அக்டோபர் 2005 (UTC)Reply

நானும் கழுத்தில் கட்டிய கயிறு என்று தான் இருக்கவேண்டும் என முதலில் நினைத்தேன். பிறகு, ஒருவாறாக, மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது கட்டிய கயிறு என்பதாக புரிந்து கொண்டேன். ஏனெனில் மாட்டின் கழுத்தைச் சுற்றி ஒரு கயிறையும் (இதைத் தாம்புக் கயிறு என்று சொல்வார்கள்) அதோடு இணைத்து தனியாக இன்னொரு கயிறையும் கட்டுவதும் வழக்கம் தான். ஆம், விக்கிபீடியா வெற்றி பெறுவதற்கு அதன் கட்டுரைகளின் தரம் கண்காணிக்கப்பட்டு மேம்படுத்த வேண்டும் என்பது உண்மை தான். புதிதாக கட்டுரை எழுதவிட்டாலும் சுந்தர், மயூரன் போன்றோர் இவ்வாறு கட்டுரைகளை கவனித்து மேம்படுத்த ஆலோசனை தருவது மகிழ்ச்சிக்குரியது தான்.--ரவி (பேச்சு) 20:27, 4 நவம்பர் 2005 (UTC)Reply

தரமுயர்த்தல் தொகு

இயற்பியலில் முக்கியமான கோட்பாடாக உள்ள விசையைப் பற்றி தற்பொழுது உள்ள பொதுவான புரிதலுக்கான விளக்கத்துடன், அறிவியல் பூர்வமான சமன்பாடுகளுடன் விளக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கருதுகிறேன்--ரவி (பேச்சு) 20:37, 4 நவம்பர் 2005 (UTC)Reply

உண்மைதான், இந்தக் கட்டுரை மட்டுமன்றி மேலும் பல முக்கியமான தலைப்புக்களில் விரிவான கட்டுரைகளை எழுத அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டிய அவசியம் பற்றி நானும் உணர்கிறேன். ஆனால் இதற்கு அதிக நேரம் செலவு செய்யவேண்டியிருப்பதுதான் பிரச்சினை. தமிழ் விக்கிபீடியாவிலுள்ள தலைப்புகளின் துறைசார்ந்த பரப்பை விரிவாக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பல குறுங்கட்டுரைகளையும் எழுத வேண்டியேற்படுகிறது. இவ்வாறு குறுங்கட்டுரைகள் மூலமாவது கட்டுரைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது பங்களிப்பாளர்களிடையே அதிகரித்த உத்வேகமும் ஏற்படக்கூடும். எனினும், விசை பற்றிய கட்டுரையை விரிவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு. Mayooranathan 05:45, 5 நவம்பர் 2005 (UTC)Reply

மயூரநாதன், உங்கள் விளக்கம் முற்றிலும் உண்மை தான். கட்டுரைகள் எண்ணிக்கை அதகரிக்கும்போது அது இங்கு பங்களித்து வருபவர்களுக்கு உற்சாகமளிக்கிறது. அதிகப் பங்களிப்பாளர்கள் வரும்பொழுது இந்தக் குறுங்கட்டுரை குறைகள் தாமாகவே களையப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, தற்பொழுது புதிதாக வந்திருக்கும் பயனர் pappadu பார்லி கட்டுரையை அருமையாக விரிவு படுத்தியிருக்கிறார்.

நான் உட்பட எந்த ஒரு பயனரையும் இக்கட்டுரையை விரிவாக்கத் தூண்டும் முகமாகத் தான் தரமுயர்த்தல் அறிவிப்பை சேர்த்தேன். மற்றபடி, குறுங்கட்டுரையோ விரிவான கட்டுரைகயோ நீங்கள் எழுதும் எந்த ஒரு கட்டுரையிலும் தரத்திற்கு குறைவில்லை. --ரவி (பேச்சு) 16:12, 5 நவம்பர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசை&oldid=2299492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விசை" page.